செவ்வாய், 16 மார்ச், 2010

ஐபிஎல் ஜோசியம்: தோற்பது தோனி!

பெங்களூர் மேட்சில் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதிலிருந்து புறா ஜோஸ்யம் எவ்வளவு அறிவியல்பூர்வமானது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதைக் கணித்துச் சொல்வதற்காக அந்தப் புறா எத்தனை விஷயங்களை நுணுக்கமாக ஆராய்கிறது என்பது பக்கத்திலிருந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

தாதாவின் அணியும் தோனியின் அணியும் இப்போது தாதாவின் இடத்தில் மோதுகின்றன. முக்கியமான ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாமலேயே தாதா அணி ஜெயிப்பது எப்படி என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். இஷாந்த் சர்மாவுடன் ஷேன் பாண்ட் இணைவார் எனத் தெரிகிறது.  அப்படியானால் அணியின் பவுலிங் திறன் கூடும். இப்போதும் அதிர்ஷ்டம் அந்தப்பக்கம்தான் இருக்கிறது. மற்றபடி கங்குலி வழக்கம்போல சொதப்புவார். முடிந்தால் டக்அவுட் ஆவார்.

தோனி டீம் பந்து வீசத் தெரிந்தவர்களுக்கு வலைவீசிக் கொண்டிருக்கிறது. தியாகிக்கு வேப்பிலை அடிக்கப்படுகிறது. ஹேடனும் அவரது மங்கூஸ் பேட்டும் எந்த எக்கு எக்கினாலும் இன்னிக்கு தாதா டீமை ஜெயிக்க முடியாது.

.

.
.

4 கருத்துகள்:

  1. உங்க பதிவு பாப்புலராகுறதுக்கு முன்னாடியே உங்க ஜோசியம் பொய்யாப் போச்சி போங்க..

    பேசாம புறாவை அடிச்சி சாப்டுட்டு படுத்துத் தூங்குங்க.. :))

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்னதுல ஒன்னு மட்டும் பலிச்சது கங்குலி நல்ல ஆடல




    ஒரு புறா கறி ப்ரை பார்சல் !!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நன்றி... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

    பதிலளிநீக்கு