வெள்ளி, 31 டிசம்பர், 2010

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 50 - பிரபல பேட்டி

அடுத்த கிரிக்கெட் சீசன் வந்துவிட்டது. இன்னும் நமது பிளாக்கை தூசி தட்டாமல் வைத்திருந்தால் எப்படி? சச்சினும் தோனியும் கோபித்துக் கொள்ள மாட்டார்களா? அதனால், பரணிலிருந்து பிளாக்கை இறக்கி மீண்டும் எழுதலாம் என முடிவாயிற்று. முதலிலேயே ஒரு எச்சரிக்கை விட்டுவிடுகிறேன். இந்த பிளாக்கை நாட்டுப் பற்றி மிக்கவர்கள் படிக்க வேண்டாம். சொல்லியும் கேளாமல் படித்துவிட்டு, வலிக்கிறது என்று அழுபவர்களுக்கு நோஐபிஎல் அன் கோ எந்தக் காரணம் கொண்டும் ஆறுதல் சொல்ல முன்வராது. தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்பவர்கள் சொந்தச் செலவில்தான் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி மணியார்டர் அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்தால் தோனி அணி உலகக் கோப்பை வாங்குவது போல கனவு வருவதற்குச் சபிக்கப்படும்.


சரி பணிக்கு வருவோம்... மீண்டும் எழுதுவது என்பது முடிவாயிற்று. ஆனால் என்ன எழுதுவது நாம் ஒன்றும் எழுத்தாளனில்லையே. வாத்தியார் சொன்ன பேச்சைக் கேட்டு பத்தாம் வகுப்பில் நம்மால் பாடப்புத்தகத்தை மட்டும்தானே படிக்க முடிந்தது. பேசாமல் கோயிந்தன் சொன்ன புத்தகங்களை வாங்கிப் படித்திருந்தால் பிரபல எழுத்தாளராகியிருக்கலாம். எல்லாம் முடிந்து போயிற்று. இப்போது யோசித்து என்ன செய்வது? நம்மால் என்ன முடியுமோ அதை எழுதலாம், சந்திப் பிழை, கூறியதுகூறல், மயக்கப் பிழைகள் எல்லாம் வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து முன்பு போலவே எழுதி விடுவது என இறுதி முடிவெடுக்கப்பட்டு விட்டது.


எழுதலாம். முதலில் என்ன எழுதுவது. எதைக் கொண்டு பிள்ளையார் சுழி போடுவது என்ற தீராக் குழப்பம் 10 நாள்களாக பாத்ரூமில் தொந்தரவு செய்தது. இதைப் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், முன்பு எதைச் செய்தார்களோ அதையே செய்யுங்கள் அதுதான் லாபமும் தப்பிக்கும் வழியும் என்றார். எனக்குப் புரியவில்லை. சரி போகட்டும் சிபிஐ அலுவலகத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்த அவரிடம் இதற்கு மேல் விளக்கம் கேட்டால், நமது 2ஜி செல்போன் கனெக்ஷனைக் கட் செய்துவிடுவார் என்கிற பயத்தில் வந்துவிட்டேன். இறுதியில் நேற்று முன்தினம் இரவில் ஒரு கனவு வந்தது. பிரபலம் யாரிடமாவது ரெண்டு கேள்வி கேட்டு பேட்டி எடுப்பது போல. யுரேகா.. யுரேகா...


யார் அந்தப் பிரபலம்... சச்சின், தோனி, ரஜினிகாந்த் ஆகியோரைவிட பிரபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தோம். அவர் வேறுயாருமல்ல  பொன்மனச் செம்மலும், பார்புகழும் பிளாக்கர்களில் ஒருவருமான நோஐபிஎல் பிளாக்கின் அதிபர்தான்.  இந்தப் பேட்டி யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.


நிருபர்: வணக்கம் ஐயா.


நோஐபிஎல் அதிபர்: வணக்கம்


நிருபர்: கிரிக்கெட் மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?


நோஐஅ: அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருவேன். 9 மணிக்கு பள்ளியென்றால் 8 மணிக்கு வந்துவிடுவேன். ஆனாலும் பத்தாம் வகுப்பு வந்ததும் ஆங்கில ஆசிரியர் எஸ்ஸே எழுதச் சொல்லும்போது, மாற்றான் மொழியை எழுதுவதற்கு எனது கையும் மனமும் நடுங்கின. அதில் இருந்து தப்புவதற்காகாகத்தான் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆங்கில வகுப்புகளைப் புறக்கணிப்பதுடன் நமது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் முடிவு செய்தேன்.

நிருபர்: அருமை. உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?

நோஐஅ: சச்சின்...

நிருபர்: அவரை ஏன் பிடிக்கும்?

நோஐஅ: ஏன்னா அவர்தான் மற்ற எல்லா டீமுக்கும் உலகக்கோப்பை வாங்கி கொடுத்தார்.


(பேட்டி தொடரும்)
.
.


ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஜபிஎல் நாடகம் முடிந்தது: சென்னை ஜெயித்த மர்மம்




ஒரே திரைக்கதை ரெண்டு தொடர் பல ஆயிரம் கோடி...


2010 புள்ளி பட்டி...


கெலீத்தது: சென்னை சூப்பர் கிங்ஸ்



 Teams
Mat
Won
Lost
Tied
N/R
Pts
Net RR
For
Against
Mumbai Indians  
14
10
4
0
0
20
+1.084
2408/277.0
2100/276.0
Deccan Chargers  
14
8
6
0
0
16
-0.297
2188/277.4
2254/275.4
Chennai Super Kings
14
7
7
0
0
14
+0.274
2285/271.1
2257/276.5
Royal Challengers Bangalore
14
7
7
0
0
14
+0.219
2166/260.4
2245/277.3
Delhi Daredevils
14
7
7
0
0
14
+0.021
2155/275.4
2166/277.5
Kolkata Knight Riders
14
7
7
0
0
14
-0.341
2144/273.0
2192/267.3
Rajasthan Royals
14
6
8
0
0
12
-0.514
2179/270.4
2224/259.4
Kings XI Punjab
14
4
10
0
0
8
-0.478
2278/276.2
2365/271.1








-----------------------------------------------------------------

2009 புள்ளி பட்டி 
கெலீத்தது: டெக்கான்

 

Teams
Mat
Won
Lost
Tied
N/R
Pts
Net RR
For
Against
Delhi Daredevils
14
10
4
0
0
20
+0.311
1978/255.2
1953/262.4
Chennai Super Kings
14
8
5
0
1
17
+0.951
2086/255.3
1855/257.1
Royal Challengers Bangalore
14
8
6
0
0
16
-0.191
1994/276.0
2027/273.2
Deccan Chargers
14
7
7
0
0
14
+0.203
2111/272.4
2097/278.1
Kings XI Punjab
14
7
7
0
0
14
-0.483
1787/251.2
1887/248.3
Rajasthan Royals
14
6
7
0
1
13
-0.352
1688/253.1
1810/257.5
Mumbai Indians
14
5
8
0
1
11
+0.297
1897/256.2
1802/253.4
Kolkata Knight Riders
14
3
10
0
1
7
-0.789
1757/248.5
1867/237.5



2009-ல் அரையிறுதிக்கே போகாது எனக் கருதப்பட்ட டெக்கான் அணி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் அதிசயமாக வென்றது.. கடைசி ஓவரில் 23 ரன்களை எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.  கோல்கத்தா அணி, கடைசி இடத்தில் தொடர்ந்து இருந்தது....

2010-ல் அரையிறுதிக்கு போவதற்கு வாய்ப்பில்லாத சென்னை அணி ஒரு ஆட்டத்தில் ரன் ரேட்டை தாறுமாறாக உயர்த்தியது. அடுத்த ஆட்டத்தில் கடைசி இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் அணியை கடைசி ஓவரில் இரு சிக்சர்கள் அடித்து ஜெயித்தது.


கோல்கத்தா மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளின் பணிகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.



இத்துடன் இந்த ஆண்டு இந்த வயித்தெரிச்சக் கோஷ்டியின் பணி முடிந்ததாகக் கருதப்படுகிறது. 

நன்றி... வணக்கம்...
...





மேட்ச் ஃபிக்சிங்: அம்பயருமா?

குரோனியே என்கிற வீரரும், பாப் உல்மர் என்கிற மாபெரும் பயிற்சியாளரும் இறந்தது புக்கிகளால்தான் என்பது நம்பப்படுகிற கோட்பாடு. தற்போது இதேபோன்றதொரு கோட்பாடு அம்பயர்கள் விவகாரத்திலும் வெடித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது ஒரு அம்பயரும் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக தகவல் கசிந்திருக்கிறது.

அம்பயர் எப்படி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட முடியும் என்று யோசித்தபோது நமது சிந்தனையில் உதித்தவை

1. எல்பிடபிள்யூ முடிவுகள் மட்டும்தான் அம்பயர்களால் தீர்மானிக்க முடிந்தவை. அதனால், புக்கிகளிடம் காசு வாங்கிய அம்பயர், எல்பிடபிள்யூ முடிவுகளை இஷ்டப்படி கொடுக்கலாம்.

2. இருக்கவே இருக்கிறது வெய்டு, முடிந்தவரை தீர்ப்பை மாத்திக் கொடுக்கலாம்.

3. அப்புறம் இடுப்புக்கு மேலே போடப்படும் நோ பால். இதுவும் நம்மாளுக்கு பயன்படும்.

4. பேட்டை உரசிச் சென்று கீப்பரால் பிடிக்கப்படும் கேட்ச். அம்பயர் சொன்னா சொன்னதுதான். வேறு யாருக்கும் ரகசியம் தெரியவே போறதில்லை.

இந்த நாலு போதாதா கோடிகளைச் சம்பாதிக்க..!
.
..

சனி, 24 ஏப்ரல், 2010

மோசடி சச்சின் ஒழிக, சீட்டிங் தோனி ஒழிக

இந்தப் பசங்களுக்குள்ள ஏதோ இருந்துருக்கு பாரேன்! இல்லைன்னா, நடிக்கறது நாடகம்னு தெரிஞ்சும் நாட்டுப்பற்று தேசப்பற்றுன்னு நம்மையெல்லாம் ஏமாத்துவாங்களா? சச்சின் ஒழிக, தோனி ஒழிக.

மேட்ச் ஃபிக்சிங்னா என்னான்னு தெரியுமா? தெரியும்தான். ஆனா, அது சட்டப்படி தப்பில்லைங்கறது தெரியுமா? எந்த நாட்டுச் சட்டப்படியும் அது தப்பில்லைங்க. ஆனா, இவங்களே கூடிக் கும்மாளம் அடிக்கிறாங்றாங்களே, அந்த ஐசிசி சட்டப்படி மட்டும்தான் மேட்ச் பிக்சிங் தப்பு, அந்தத் தப்பு மேல நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவங்களேதான். அப்ப, தப்பு செய்யறவங்கதான் தண்டனையும் தரணும். நல்ல கூத்து. நாடகம்னா, ஸ்கிரிப்ட் எழுதி ஒத்திகை பாத்து, அரங்கேற்றம் பண்றதுதானே வழக்கம். அதையேதான் சச்சின், தோனி போன்ற நடிகர்களும் செய்தார்கள்.


சட்டப்படி பெட்டிங்தான் தப்பு. பெட்டிங்னா, ஆட்டத்துல யாரு ஜெயிப்பாங்க, யாரு மேன் ஆப் தமேட்ச் வாங்குவாங்க, எத்தனை ரன் வித்தியாசத்தில ஜெயிப்பாங்க, எத்தனையாவது ஓவர்ல ஜெயிப்பாங்க இப்படி எல்லா ஜோஸ்யங்களுக்கும் பெட் கட்டறதுதான் பெட்டிங்க. இதுல லைவ் பெட்டிங்தான் கிக்.

உதாரணத்துக்கு, கிங்ஸ் லெவன் - சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய முதல் லைவ் பெட்டிங் தொடங்கும். அந்த ஆட்டத்தைப் போக்கைப் பார்த்தால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முழுவதும் சூப்பர். அப்ப, பாதி ஆட்டம் வரை கிங்ஸ் லெவன் அணி ஜெயிக்கும் என்றுதான் பெட்டிங் குவிந்திருக்கும். சென்னை அணியின் முதல் 10 ஓவரும் சரியில்லை என்றவுடன், பஞ்சாப் மீதான பெட்டிங் தொகை இன்னும் எகிறும். 15 ஓவரில் சூடு அதிகம். வெற்றி பெறப்போவது பஞ்சாப் அணிதான் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கோடிகள் குவிந்தன.

கடைசி ஓவர்தான் பீக். அதுவரை மொக்கை போட்டுவந்த தோனி அடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பஞ்சாப் மீது பணத்தைக் கொட்டினார்கள். ஒரே மாதிரி இரண்டு பந்தைப் போட்டு, இரண்டையும் சிக்சருக்கு அனுப்பியது, தோனியின் திறமையல்ல. ஏற்கெனவே, கதை வசனம் எழுதி இயக்கிய சூதாட்டக்காரர்கள்தான். எவனோ போட்டுக் கொடுக்க, எவனோ முடிவு செய்ய தானே வெற்றி பெற வைத்து மாதிரி பேட்டை தூக்கிச் சுழற்றிக் காட்டிய மொக்கையன் தோனி ஒழிக.


சூதாட்டப் புகாரில் அசாருதீன் சிக்கியபோதே, சச்சினையும் நீக்கியிருக்க வேண்டும். அப்படி நீக்கியிருந்தால், பல உண்மைகள் வெளிவந்திருக்கும். பிசிசிஐ அமைப்பும் கலைந்திருக்கும். ஆனால், ஏமாற்றுக்காரர்கள் அதைச் செய்யவில்லை. மக்களை வீணர்களாக்கி, பணத்தை அள்ளுவதையே குறிக்கோளாகக் கொண்டார்கள். அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது.



இப்போது, ஐபிஎல் மட்டும்தான் ஏதோ பெட்டிங்கில் மோசம் என்பது போலவும், பிசிசிஐ-யின் மற்ற பிரிவுகளெல்லாம் கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் ஆபத்து. இந்த மோசடியின் ஊற்றுக் கண்ணே பிசிசிஐதான். இவர்கள் அனைவரும் இணைந்தேதான் எல்லா மோசடிகளையும் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜக்மோகன் டால்மியா, பிசிசிஐ மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார். மர்மமான முறையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அந்த வழக்கில் டால்மியா கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நூற்றுக்கு நூறு உண்மையானது. ஆனால், இப்போது அந்த ஆளும் பிசிசிஐ கூட்டத்தில் சேர்ந்துவிட்டார்.

பிசிசிஐ கையில் கிரிக்கெட் இருக்கும்வரை உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எல்லா மோசடிகளையும் தெரிந்து கொண்டே, மக்களை ஏமாற்றுவதற்காக தேசத்துக்காக விளையாடுவது போல ஏமாற்றிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வெற்று நடிகர்கள்தான். அதிலும் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சச்சின், தோனி, கங்குலி, டிராவிட் போன்றோரெல்லாம் பெரும் மோசடிக்காரர்கள். இதையெல்லாம் தெரிந்துதான். என்போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக் கொண்டோம். சிலர் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பலர் இன்னமும் இந்த மோசடிகளை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நன்றாக நடிக்க இருக்கும் சச்சின் ஒழிக, தோனி ஒழிக!
..

..
.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஐபிஎல் பயிரமுத்து: சென்னை அறிவாளிகள்!


திரைப்படக் கவிஞர் பயிரமுத்து ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆய்வுக் கட்டுரை பகுத்தறிவுக் கல்யாணத்துக்கு அண்மையில் செல்ல நேரிட்டது. ரூ.200 கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கவிக் கடவுளைப் பற்றிய நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை கவிதைகளாக அவிழ்த்துவிட வேண்டும். ஜென்ம சாபல்யம் கிடைத்தது. டாக்டர் பட்டம் பெறுவதற்கு இந்த தகுதி ஒன்றே போதும் என்றும் சொன்னார்கள். வயிறு முட்டச் சாப்பாடும் போகும்போது கையடக்கப் பை ஒன்றும் கொடுத்தார்கள். இதற்கெல்லாம் கவிஞரே எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாக விவரமறியாத வட்டாரங்கள் மப்பில் உளறின. ஏம்பா இப்படிக் காச செலவு பண்ணி எங்களுக்குச் சேவை செய்கிறார்கள் என்று என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த கேள்வியை ரசிகப் பெருந்தகை ஒருவரிடம் கேட்டோம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்றார்கள். நான் கேட்கிறேன், ஏம்பா அவரே அரசவை ஆஸ்தானக் கவிஞர், அவருக்கு ஏனப்பா இந்தப் பொழைப்பு. இன்னொரு மஞ்சள் கவிஞரான "பாவி"யும் இதே ஸ்டைலை பாலோ செய்து புகழை இன்ச் பை இன்ச்சாக உயர்த்திக் கொண்டிருக்கிறாராம். இதுக்கெல்லாம் கூட்டம் சேருகிறது பாருங்கள். தமிழர்கள் அறிவாளிகள்.



நமக்கு இந்த ஐடியா இல்லாம போச்சே தலீவா!

நம்ம விஷயத்துக்கு வாங்கோ. அண்மையில் நாக்பூர் விதர்பா மைதானத்தில் சென்னை அணியின் ஆட்டம் தொடங்கியபோது, வெறும் 500 பேர்தான் மைதானத்தில் இருந்தார்கள். ஊர்ப்பற்று, தேசப்பற்று இல்லாமல் முட்டாள்தனமாக ஐபிஎல் ஆட்டங்களைக் கருவிக் கொண்டிருப்போரெல்லாம் அன்று லட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளியிட்டார்கள். என்போன்று தேசப்பற்று மிக்கவர்களுக்கு நாக்பூர் ரசிகர்களின் பொறுப்பற்ற தனத்தை நினைத்து ஆதங்கம் ஏற்பட்டது. ஆட்டம் முடியும்வரை ஆயிரம் பேர்கூட வரவில்லை என்று சொல்லிக் கொண்டார்கள். ஐபிஎல் போட்டியைக் காண முடியாத அளவுக்கு நாக்பூர்காரர்களுக்கு அப்படியென்ன வேலையோ தெரியவில்லை. அறிவிலிகள்.

இந்த விஷயத்தில் சென்னையை மிஞ்சவே முடியாது. தலைநகர் டெல்லி, ஐடி பெருநகர் பெங்களூர், மும்பை மாநகர், கிரிக்கெட் கிறுக்கர்கள் நிறைந்த கோல்கத்தா போன்ற நகரங்களில்கூட ஆட்டம் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புகூட டிக்கெட் இருந்தது. இருக்கிறது. அங்கிருப்பவர்கள் நாட்டின் மீதும் கிரிக்கெட்டின் மீதும் அன்பில்லாதவர்கள், பாசமில்லாதவர்கள், அக்கறையில்லாதவர்கள். இல்லாவிட்டால், ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்காமல் இருப்பார்களா? நல்லவேளை அறிவாளிகள் நிறைந்த சென்னை அப்படியில்லை.

சென்னையில் நடந்த எந்த ஆட்டத்துக்குமே டிக்கெட் தாராளமாகக் கிடைக்கவில்லை. நம் ஊர் கிரிக்கெட் ஆர்வலர்களும், தேச பக்தர்களும், சமூக நீதியாளர்களும் "உரிய" நேரத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஊர் மானத்தைக் காப்பாற்றிவிட்டார்கள்.  ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு பிளாக்கில் சேவை செய்யப்பட்டது. ரூ.500 டிக்கெட்டை ரூ.5 ஆயிரம் வரை விற்றார்கள். என்னவொரு கிரிக்கெட் பற்று.

நமக்கு வழக்கம்போல வந்த ஓசி டிக்கெட்டைக்கூட சில ஆயிரங்கள் கொடுத்து அறிவாளி ஒருவர் வாங்கிச் சென்றார்  என்றால் நமது ஊர்ப்பற்றை என்ன சொல்வது? மற்ற ஊர்க்காரர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான், நாங்கெல்லாம் ஆடுறோமோ இல்லியோ, கிரிக்கெட் பாக்கறது, கைதட்டறதுன்னா, நாங்கதான் டாப். பாத்து கத்துக்கோங்கப்பா.

...

..

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நொண்டியடிக்கும் பரோட்டா மாஸ்டர்!


பார்டர் பரோட்டா கடையில் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லையென்றால் தென்னிந்திய உணவுகளைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தவராக முடியாது. பார்டர் பரோட்டா ஒரு தனிச்சுவை. அந்தக் கடை பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால் ஒரு மரியாதை இருக்கும். ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இப்ப சென்னையில் பரோட்டா மாஸ்டர்களைப் பார்த்தாலே பத்திக் கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் நம்ம ஊரு நண்பர் ஒருவர் பரோட்டா மாஸ்டர் மீதான கோபத்தை இப்படிக் கொட்டினார்.


அதெப்படி, நீங்க கேப்டன் சேர்ல உக்கார்ந்தா எல்லாமே கிழிஞ்சிடும்ங்றது வழக்கந்தானே. சிம்பாவேகூட வாரக் கணக்குல வெச்சு நம்மள நையப்புடைக்குமே. நம்ம அஜார் கிட்ட முடிஞ்சவரை குட்டு வாங்கினீங்களே. திரும்பவும் எப்படீய்யா வந்தது கேப்டன் ஆசை? பட்டும் திருந்தமாட்டீங்களா? அந்தப் பையன் திவாரியவோ, பஜ்ஜியவோ கேப்டனா ஆக்கிப்புட்டு, சொல்ற வேலைய மட்டும் செஞ்சிகிட்டு இருக்கலாமே.

நீங்க இல்லாட்டி டீமே இல்லைன்னு நம்ம பெரிய டீமை கொஞ்ச நாளைக்கு வெச்சிருந்தீங்க. இப்ப இந்த சின்ன டீமையும் அப்பிடி ஆக்கிப்புட்டீங்களேய்யா? தம்பீ, நான் நல்லாத்தானே ஆடுறேன், உனக்கேன் இந்தக் காண்டுன்னு நீங்க கேட்கறது புரியுதய்யா. ஆனா நல்லா ஆடறதெல்லாம் கேப்டனாகறதுக்கு தகுதியில்லீங்கய்யா? அதுக்கெல்லாம் தனியா கொஞ்சம் பொதுநலச் சிந்தனையும் வேணும்.

எந்த எக்கு எக்கினாலும் சிக்சர் அடிக்க முடியாம போச்சேன்னு, ஆட்டத்திலேருந்து பாதிலேயே வெளிய போனபோதே தெரிஞ்சுதய்யா உங்க கேப்டன்சி ஜென்ரல் நாலேஜ். அப்படி என்னதான தந்திரமோ?

நீங்க பண்றதெல்லாம் இன்னும் எத்தினி நாளைக்குத்தான்யா நாங்க தாங்கறது? எல்லாச் சாதனையும் பண்ணியாச்சு. பெரிய டீ20 டீம்ல ஆடறதில்லேன்னும் முடிவு பண்ணியாச்சு. அப்புறம் எதுக்கய்யா ஐபிஎல்லு? இது மட்டும் டீ20 இல்லியா? இல்ல, நாட்டுக்காக செஞ்ச சேவை(!) போதுன்னு நினைச்சிட்டீங்களா?


தோனியொரு மொக்கையர்தான். உங்கள மாதிரி ஸ்டைலிஷ் ஷாட்டெல்லாம் அவருகிட்ட கிடையாது. ஆனா, களத்துல இறங்கிட்டா அவங்க ஆளுங்கெல்லாம் வசிய மருந்து வெச்ச மாதிரி நடந்துக்கிறாங்களே, அதெப்டீய்யா. பாருங்க ஃபேர் பிளே அவார்டெல்லாம் அவருக்குத்தானே போகுது. பேசாம ட்யூஷன் கத்துக்கோங்க. 







...






..

புதன், 7 ஏப்ரல், 2010

ஐபிஎல் மோடிக்கு ஒரு யோசனை!


எச்சரிக்கை: இது ஒரு ஐபிஎல் பக்தரின் மின்னஞ்சல்

ஐபிஎல் ஆட்டங்கள் எவ்வளவு மோசமானவை தெரியுமா? அது புனிதமான கிரிக்கெட்டை வியாபாரமாக்கும் உத்தி. மக்களை ஏமாற்றும் மோசடி என்றெல்லாம் பலர் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்க ஊருக்காரங்களே இல்லையேப்பா எனச் சிலர் குமுறுகிறார்கள்.  இன்னும் சிலருக்கு வெளிநாட்டுக் கேப்டன்களைப் பார்த்து தேசபக்தி கொப்பளிக்கிறது. இந்த வயித்தெரிச்சக் கோஷ்டிகளைச் சமாளிக்கும் வகையில் மோடியின் வீரர்கள் தேர்வு விதியை கீழ்க்கண்டவாறு மாற்றலாம்.




------------------------------------------------------------------
 1. ஒரு அணிக்கு அதிகபட்சம் 16 வீரர்கள் இருக்க வேண்டும்.

இந்த விதி அப்படியே இருக்கட்டும்

2. அணியில் அதிகபட்சம் 8 வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் இருக்கலாம்.

அதிகபட்சம் 6 என மாற்றலாம்

3. ஆடும் அணியில் 4 வெளிநாட்டுக்காரர்கள் இருக்கலாம்.

இது அப்படியே இருக்கட்டும்.

4. 16 பேர் கொண்ட அணியில் உள்நாட்டு ஆட்டக்காரர்கள் 8 பேர் இருக்க வேண்டும்.

6 வெளிநாட்டுக்காரர்கள் போக மீதி 10 பேர் உள்நாட்டுக்காரர்களாக இருக்கலாம்.

5. உள்நாட்டு ஆட்டக்காரர்கள் 22-வயதுக்கு உட்பட்டவர்கள் (அதுவும் பிசிசிஐ அணியில் இருப்பவர்கள்) 4 பேர் இருக்க வேண்டும்.
இதனை 6 பேராக மாற்றலாம்.

7. யார் வேண்டுமானாலும் அணித் தலைவர் ஆகலாம்.

இதனைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும். அணியின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்தவர்தான் இருக்க வேண்டும். அதுவும், அந்த அணி இருக்கும் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். கண்டிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்கவே கூடாது. (தோனிக்காக உருவாக்கப்பட்டது இந்த விதி)

8. உள்நாட்டைச் சேர்ந்த யாரும் எந்த அணியிலும் ஆடலாம்.
இதையும் ஓரளவுக்கு மாற்ற வேண்டும். அணி அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புத் தர வேண்டும். அதாவது சென்னை அணியில் ஆடும் லெவனில் குறைந்தது 4 தமிழ்நாட்டுக்காரர்கள் இருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால், 4 வெளிநாட்டுக்காரர்கள் போக மீதி 3 பேர் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 

டிஸ்கி : சீயர் லீடர்ஸ் பற்றிய யோசனைகளை இங்கு பிரசுரிக்க இயலவில்லை

...
..

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஐபிஎல் கோனார் நோட்ஸ்: ஆளுக்கொரு குறள்


 பத்து நாளாக தாடி வெச்ச பெரியவர் கனவில் வந்து கொண்டேயிருந்தார். நான்கூட பெரியார்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது, அவரைப் பற்றிச் சொன்னால் கூட்டமாக லைன் கட்டிவிடுவார்கள் என்று இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்தேன். இன்றைக்கு காலையில்தான் சன் நியூஸ் நிஜம் நிகழ்ச்சியில், கனவில் வருபவர் திருவள்ளுவர் என்று சொன்னார்கள். அவர் என்னதான் சொல்லவருகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். அவரேதான். ஐபிஎல் பற்றிய நமது ப்ளாக்கைப் பற்றி மிகவும் மெச்சிக் கொண்டார். இந்தக் கருத்துகளும் நமது உலகப் பொதுமறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டினார். அவர் சொன்னதுபடி இன்றைக்கும் நமது ஐபிஎல்காரர்களுக்குப் பொருந்தும் அறிவுரை மாதிரியான குறள்களை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.


லலித் மோடி

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

மரத்தின் நுனிக் கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.



---------------------------------

சச்சின் தெண்டுல்கர்

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.



---------------------------------

சௌரவ் கங்குலி
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.
---------------------------------


யுவராஜ் சிங்

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனுமாகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவில் கெடுவான்.

---------------------------------
மகேந்திர சிங் தோனி

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

---------------------------------
வீரேந்திர சேவக்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

இடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.

---------------------------------
திராவிட்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

---------------------------------

ஷேன் வார்னே

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

---------------------------------
முரளி விஜய்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச்செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும்.

---------------------------------
ஸ்ரீசாந்த்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.


---------------------------------
லட்சுமிராய்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும் சொல்ல மாட்டாயோ?


---------------------------------

அம்பயர் பில்லி பௌடன்


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

---------------------------------

கபில்தேவ்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே துõண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.
 

---------------------------------

ப்ரீத்தி ஜிந்தா


இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

..

.
.

திங்கள், 5 ஏப்ரல், 2010

ஐபிஎல் ஆற்றுப்படை: காணக்கிடைக்காது வெற்றி!


சச்சின் நல்மான் சூறாயுதப் பிடியில்
ஊழி துரத்தும் தோனியும் கேடனும்
சேப்பாக் களத்திடை நுழையும்
சிற்உரு வேந்தன் கடைவிழி பார்த்தால்
மதுரைப் பத்தினிக்கு வணக்கம் சொல்லி
ஆறுபெறு பந்து ஆழிக்குச் செல்லும்

சாகீர் எறிந்தால் கற்குழி சுரக்கும்
சொற்கேள் விசய், தவறு சதம்
பெருங்குழுத் தேர்வு முடிந்தன
முத்தமிழுக்கு யாது மில.

வீணன் தோனிக்கு மாஉரு எமன்
பிரிதொரு முழங்கை வீச்சுக்குப் பத்திரம்
பேரழகு அணங்கு ராய் மெச்சி
உடையறைக்குள் மறைக, அது நலம்

மீள கனம் குறை சென்னை.
காணக் கிடைக்காது வெற்றி!


,
.
.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஐபிஎல் மருதநாயகா: ஓல்டுமென் ஷோ



சச்சினும், காலீஸும் அடிப்பதைப் பார்த்து இளைய சமூகம் கலங்கிப் போயிருக்கிறது. கங்குலி வேறு பார்முக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக தெருக்கோடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேடனும் அவ்வப்போது அடிக்கிறார். ஆக, தோனி, சேவக் மாதிரி மொக்கையர்கள் இன்னும் அடிக்கவில்லை. அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கு விலைபோகலாம் என அவர்கள் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட நம்மூர் சினிமா போலத்தான் இருக்கிறது. இங்கு 30 வயசைக் காட்டிலும் 60 வயசுக்குத்தான் மவுசு அதிகம். பேத்திகள் வந்த பிறகும் டூயட் பாடுவதற்கு நம்மூர்க்காரர்களால்தான் முடியும். இப்படியொரு இளைஞரைச் சந்தித்து ஐபிஎல் பற்றி கேட்டோம்.

நம்ம வரலாற்றுப் படம் எப்ப வெளிவரும்?


என் இதயக் கொப்புளங்கள் வெடித்த புண்கள் ஆறுவதற்குச் சில காலம் ஆகும். படத் தயாரிப்பு என்பது நம் கற்பனைத் தளங்களைத் தாண்டி வேறு மாதிரியான கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு எலிசபெத் வர முடியாது. இன்னொரு முறை படத்தைத் துவக்கவும் முடியாது. அது ஒரு வியாபாரம். நானும் வியாபாரிதான். விற்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்க்கத்தான் இத்தனை ஆண்டுகால அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

உங்க படத்தைப் பார்த்தா தயாரிப்பாளரை பழிவாங்கறதுக்காக எடுக்கப்பட்டது மாதிரியே தெரியுதே?

என் ரசிகனைப் போல நானும் ஒரு காமன் மேன். எனக்கென்ன போச்சு என அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  கூவம் பிரவாகமெடுத்தாலும், வங்கக் கடல் பொங்கினாலும் எனக்கு எதார்த்தம் முக்கியம். அதற்கான செலவுகளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்தான் என்னைக் கொண்டு படம் எடுக்க வேண்டும். மற்றவர்கள் நித்யாவை வைத்துப் படம் எடுக்கட்டும்.

வசாவதாரம் படம் காமெடிப் படம் மாதிரி இருப்பதாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் பற்றி...?

உங்கள் மொக்கையை சீரியஸ் என்று கூறினால் உங்களுக்கு எப்படி வலிக்கும். அது போலத்தான். அந்த வலியைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இருந்தாலும் எனக்கு காமெடி வருகிறது என்பதை ஒப்புக் கொண்ட தமிழனுக்கு நன்றி

நீங்க நாத்திகவாதியா?

அன்பே சிவம். நான்தான் கடவுள். அப்படியானால் நான் நாத்திகவாதியா?


சரி வேறொரு விஷயமாகப் பேச வந்தோம். இப்ப தயக்கமாக இருக்கிறது?

என்ன கேட்டுவிடப் போகிறீர்கள். என் குடும்ப வாழ்க்கை பற்றித்தானே. உங்கள் விரல் என் மூக்கு வரைக்கும் வரலாம். ஆனால் தொடக்கூடாது.

குடும்பமா? அதில்லை. இது வேறு. ஐபிஎல் பற்றி கேட்கலாமா?

ஓ. கேளுங்க. நானும் கிரிக்கெட் ரசிகன்தான். ஐபிஎல் வியாபார நுணுக்கங்களைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். சச்சின், யுவராஜ், தோனியெல்லாம் நல்ல குணச்சித்திர நடிகர்கள். நவாப் பட்டோடியிடம் கேட்டீர்களானால் எனது பேட்டிங், பவுலிங் திறமைகளைச் சொல்லுவார். இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் டீம்ல எது ஜெயிக்கும்?


எது நல்ல அணி என்று கேளுங்கள். வெளிநாட்டுக்காரர்களை தலைவர்களாகக் கொண்ட அணிகள் தோற்பது நல்லதுதான். அதுவே பொருளாதாரத்துக்கு நல்லதா என்று கேட்டீர்களானால், இல்லையென்றுதான் சொல்லுவேன். ஆனாலும் வார்னே தலைமையிலான அணியைக் காட்டிலும் நடிகர் கில்கிறிஸ்ட் அணி நல்லது. நல்ல அணிகள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். தொடர்ந்து அதுமாதிரியான அணிகள் வெளிவருவதற்கும் இது உதவும்.

வேறு ஏதாவது?


ஐபிஎல் ப்ளாக் எழுதறத விட்டுட்டு... போய் புள்ளகுட்டிகளப் படிக்க வெய்ங்க.

...
..
.

புதன், 31 மார்ச், 2010

ஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவளியும்

ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்வதற்கு நிறையவே துணிச்சல் வேண்டும். ராமன் லம்பாவுக்கு அது தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மெட் இன்றி வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் ஆட்டம் ஒன்றில் ஷார்ட் லெக்கில் பீல்டு செய்யும்போது மெஹ்ரப் ஹுசைன் அடித்த பந்து லம்பாவின் தலையைத் தாக்கிவிட்டு,  விக்கெட் கீப்பரின் கைகளுக்குச் சென்றது. இறந்து கொண்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் லம்பா தொடர்ந்து பீல்டிங் செய்தார். கவனிக்கப்படாமல் விடப்பட்ட உள்காயத்தால், உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படாமலேயே அவர் இறந்து போனார். பிசிசிஐ அரசியல் குழப்பங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ராமன் லம்பாவுக்கு இந்திய அணியில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது 80 களின் இறுதியில் கிரிக்கெட்டை கவனித்தவர்களுக்குத் தெரியும்.

எல்லோரும் ராமன் மாதிரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இந்தக் காலத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று நம்மால் புகழப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்ட சூதாட்டப் புயலும், வங்காளப் பெரியண்ணாவும், பெருஞ்சுவரும் மேலிடத்துச் செல்வாக்கப் பயன்படுத்தி நீண்டகாலம் வெட்டி மொக்கை போட்டார்கள்.

சரி அது போகட்டும். சென்னை பெங்களூர் அணி ஆட்டத்தைப் பார்க்க ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் சீயர் லீடர்ஸ் அருகில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனித்தபடியே இதை எழுத வேண்டியதாயிற்று. கெவின் பீட்டர்சனை அணியில் சேர்க்காதீர்கள் என்று எத்தனையோ முறை மல்லையாவிடம் சொல்லிப் பார்த்தாச்சு.. போன ஐபிஎல்லில் கெவின் போன பிறகுதான் பெங்களூர் உருப்பட்டது. இந்த ஐபிஎல்லில் அவர் ஆடுகளத்துக்குள் இறங்கியதும் நிலைமை தலைகீழாகிவிட்டது. சரி தோத்த பிறகு என்ன பேசறதுக்கு இருக்கு?

இன்றைக்கு இரண்டாவது ஆட்டம் தில்லிக்கும் ராஜஸ்தானுக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் பற்றி வானிலை ஆய்வு மையத்துக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் நண்பர் மெட்ராலஜி மகாவிடம் தொலைபேசியில் கேட்டோம். அவர் சொல்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் யூசுப் பதான் நிறைய ரன்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது. காற்று திசை மாறி நகரும்பட்சத்தில் அவர் சொற்ப ரன்களுடன் வீட்டுக்குப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சேவக், கம்பீர் போன்றோரும் சிக்சர்களுடன் கூடிய ரன்மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி வறண்ட வானிலையே காணப்படும். ஷில்பா வந்தால் லேசான தூறல் வரும்.

ஒட்டுமொத்த நிலையைப் பார்க்கும்போது, இப்போதைக்கு தில்லியை மையம் கொண்டிருக்கும் புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.... ஷில்பா தரப்பில் இருந்து ட்ரீட்மென்ட் இல்லாதவரை.



...
..
..

செவ்வாய், 30 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு?


இந்திய இளைஞர்கள் பலர் சோகமாகியிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்றிரவு டாஸ்மாக்குக்குச் சென்று பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. எல்லோர் கையிலும் சானியா படம் இருந்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் என்ன இளைஞர்களா இல்லை? அதென்ன எதிரி நாட்டுடன் சம்பந்தம் செய்வது? சோயிப் மாலிக் ஒழிக.

இப்படிப் பெருஞ்சோகத்தில் பலர் ஆழ்ந்திருக்க வேறு சிலர், கங்குலிக்கு வேலை தேட முற்பட்டிருக்கின்றனர். நேற்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை தூக்குவதற்கு பட்ட பாட்டைச் சொல்லி மாளாது. 2 மீட்டர் இறங்கி வந்து அடித்தால், எல்லா பந்தும் சிக்சருக்குப் போயிருமா என்ன? உங்க பப்பு 2010ல வேகாது அண்ணே.

எப்படியும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கங்குலிக்கு வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது. அவருக்காக மூன்று முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வர்ணணையாளர் பணிக்கு அவர் லாயக்கில்லை என டி.வி. நிறுவனம் ஒன்று ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. அதனால் அது இப்போதைக்கு வேண்டாம். பயிற்சியாளர் பணிக்குச் சென்றால் அந்த அணியின் நிலைமை என்னவாகும் என்பதைக் கூறத் தேவையில்லை. வேண்டுமானால் எத்தியோப்பிய அணிக்கு பந்து பொறுக்கிப் போடுவது பற்றிச் சொல்லும் பயிற்சியாளராகச் செல்லலாம். அடுத்தது அரசியல். புத்ததேவுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம்.

இத்தனையும் பிடிக்காவிட்டால், ஏற்கெனவே நம்மிடம் உள்ள காஜா போடும் வேலையை கங்குலிக்கு அளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதனால் கங்குலிக்கு கவலைப்பட வேண்டாம்.

இன்னிக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் அணிகள் பஞ்சாபும் மும்பையும். இதில் ஒன்று ஆனை, மற்றொன்று எறும்பு. ஒன்றுக்கு முதல் இடம் மற்றொன்றுக்கு கடைசி இடம். இருந்தாலும் கட்டங்கள் சரியாக இருக்கிறதா என்பது பற்றி நீண்டகால ஓய்வில் இருந்து திரும்பிய குடுகுடுப்பையிடம் கேட்டோம்.

ஏற்கெனவே கொடுத்த அருள்வாக்குக்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். உடுக்கைக்கு புதிய வார் போடுவதற்கு ரூ.5 கொடுக்க வேண்டியதாயிற்று.

அவரது கணிப்புப்படி இந்த முறையும் மும்பை அணியே வெற்றி பெறும் எனத் தெரிகிறது. பார்ம் தப்பிப் போன யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்புவார் என்பது இன்றைய நிலவரம். மற்றபடி சிங்களர்களுக்குக் கட்டம் சரியில்லை.

மும்பைக்காரர்கள் கடந்த போட்டியில் தோற்பது போலப் போய். பஜ்ஜியால் ஜெயித்தார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல ஆவிகள் துணையிருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. இன்னொரு வெற்றி அவர்களுக்கு இருக்கிறது.

--------------------
ஐபிஎல் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிங்கள் எதிர்ப்பாளர்கள் தயவு செய்து  முகிலனின் சிங்கள எதிர்ப்பு   இடுகையைப் படியுங்கள். 

முகிலன் கவலைப்படாதீங்க..... நல்ல காலம் பொறக்குது....

..
.
.
.