ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

மேட்ச் ஃபிக்சிங்: அம்பயருமா?

குரோனியே என்கிற வீரரும், பாப் உல்மர் என்கிற மாபெரும் பயிற்சியாளரும் இறந்தது புக்கிகளால்தான் என்பது நம்பப்படுகிற கோட்பாடு. தற்போது இதேபோன்றதொரு கோட்பாடு அம்பயர்கள் விவகாரத்திலும் வெடித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது ஒரு அம்பயரும் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக தகவல் கசிந்திருக்கிறது.

அம்பயர் எப்படி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட முடியும் என்று யோசித்தபோது நமது சிந்தனையில் உதித்தவை

1. எல்பிடபிள்யூ முடிவுகள் மட்டும்தான் அம்பயர்களால் தீர்மானிக்க முடிந்தவை. அதனால், புக்கிகளிடம் காசு வாங்கிய அம்பயர், எல்பிடபிள்யூ முடிவுகளை இஷ்டப்படி கொடுக்கலாம்.

2. இருக்கவே இருக்கிறது வெய்டு, முடிந்தவரை தீர்ப்பை மாத்திக் கொடுக்கலாம்.

3. அப்புறம் இடுப்புக்கு மேலே போடப்படும் நோ பால். இதுவும் நம்மாளுக்கு பயன்படும்.

4. பேட்டை உரசிச் சென்று கீப்பரால் பிடிக்கப்படும் கேட்ச். அம்பயர் சொன்னா சொன்னதுதான். வேறு யாருக்கும் ரகசியம் தெரியவே போறதில்லை.

இந்த நாலு போதாதா கோடிகளைச் சம்பாதிக்க..!
.
..

1 கருத்து:

  1. இன்னோன்னு விட்டுட்டீங்களே தலைவா..

    நோ பால் குடுக்குறது.. கால் ஜஸ்ட் லைன் மேல இருந்தாலே நோ பால் குடுக்கலாம்.. இல்லைன்னா கால் லைனை விட்டு கொஞ்சம் வெளிய இருந்தாலும் நோ பால் குடுக்காம இருக்கலாம்..

    பதிலளிநீக்கு