புதன், 7 ஏப்ரல், 2010

ஐபிஎல் மோடிக்கு ஒரு யோசனை!


எச்சரிக்கை: இது ஒரு ஐபிஎல் பக்தரின் மின்னஞ்சல்

ஐபிஎல் ஆட்டங்கள் எவ்வளவு மோசமானவை தெரியுமா? அது புனிதமான கிரிக்கெட்டை வியாபாரமாக்கும் உத்தி. மக்களை ஏமாற்றும் மோசடி என்றெல்லாம் பலர் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்க ஊருக்காரங்களே இல்லையேப்பா எனச் சிலர் குமுறுகிறார்கள்.  இன்னும் சிலருக்கு வெளிநாட்டுக் கேப்டன்களைப் பார்த்து தேசபக்தி கொப்பளிக்கிறது. இந்த வயித்தெரிச்சக் கோஷ்டிகளைச் சமாளிக்கும் வகையில் மோடியின் வீரர்கள் தேர்வு விதியை கீழ்க்கண்டவாறு மாற்றலாம்.
------------------------------------------------------------------
 1. ஒரு அணிக்கு அதிகபட்சம் 16 வீரர்கள் இருக்க வேண்டும்.

இந்த விதி அப்படியே இருக்கட்டும்

2. அணியில் அதிகபட்சம் 8 வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் இருக்கலாம்.

அதிகபட்சம் 6 என மாற்றலாம்

3. ஆடும் அணியில் 4 வெளிநாட்டுக்காரர்கள் இருக்கலாம்.

இது அப்படியே இருக்கட்டும்.

4. 16 பேர் கொண்ட அணியில் உள்நாட்டு ஆட்டக்காரர்கள் 8 பேர் இருக்க வேண்டும்.

6 வெளிநாட்டுக்காரர்கள் போக மீதி 10 பேர் உள்நாட்டுக்காரர்களாக இருக்கலாம்.

5. உள்நாட்டு ஆட்டக்காரர்கள் 22-வயதுக்கு உட்பட்டவர்கள் (அதுவும் பிசிசிஐ அணியில் இருப்பவர்கள்) 4 பேர் இருக்க வேண்டும்.
இதனை 6 பேராக மாற்றலாம்.

7. யார் வேண்டுமானாலும் அணித் தலைவர் ஆகலாம்.

இதனைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும். அணியின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்தவர்தான் இருக்க வேண்டும். அதுவும், அந்த அணி இருக்கும் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். கண்டிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்கவே கூடாது. (தோனிக்காக உருவாக்கப்பட்டது இந்த விதி)

8. உள்நாட்டைச் சேர்ந்த யாரும் எந்த அணியிலும் ஆடலாம்.
இதையும் ஓரளவுக்கு மாற்ற வேண்டும். அணி அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புத் தர வேண்டும். அதாவது சென்னை அணியில் ஆடும் லெவனில் குறைந்தது 4 தமிழ்நாட்டுக்காரர்கள் இருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால், 4 வெளிநாட்டுக்காரர்கள் போக மீதி 3 பேர் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 

டிஸ்கி : சீயர் லீடர்ஸ் பற்றிய யோசனைகளை இங்கு பிரசுரிக்க இயலவில்லை

...
..

1 கருத்து:

  1. 7வது மட்டும் 8வது யோசனைகளைத் தவிர மற்ற யோசனைகள் எல்லாம் சூப்பர்.

    7வது யோசனையில் கூட வெளிநாட்டு ஆட்டக்காரர்களை கேப்டனாக நியமிக்கக்கூடாது என்று மட்டும் மாற்றினால் போதும். தோனி சென்னை அணியின் கேப்டனாக இருப்பதில் என்ன காட்டமோ இந்த மின்னஞ்சலை அனுப்பியவருக்கு.

    அப்படிச் சட்டம் போட்டால் தோனி எந்த அணிக்கும் கேப்டன் ஆக முடியாது. சென்னை அணிக்கு விஜயகாந்தைத் தான் கேப்டன் ஆக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு