சனி, 24 ஏப்ரல், 2010

மோசடி சச்சின் ஒழிக, சீட்டிங் தோனி ஒழிக

இந்தப் பசங்களுக்குள்ள ஏதோ இருந்துருக்கு பாரேன்! இல்லைன்னா, நடிக்கறது நாடகம்னு தெரிஞ்சும் நாட்டுப்பற்று தேசப்பற்றுன்னு நம்மையெல்லாம் ஏமாத்துவாங்களா? சச்சின் ஒழிக, தோனி ஒழிக.

மேட்ச் ஃபிக்சிங்னா என்னான்னு தெரியுமா? தெரியும்தான். ஆனா, அது சட்டப்படி தப்பில்லைங்கறது தெரியுமா? எந்த நாட்டுச் சட்டப்படியும் அது தப்பில்லைங்க. ஆனா, இவங்களே கூடிக் கும்மாளம் அடிக்கிறாங்றாங்களே, அந்த ஐசிசி சட்டப்படி மட்டும்தான் மேட்ச் பிக்சிங் தப்பு, அந்தத் தப்பு மேல நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவங்களேதான். அப்ப, தப்பு செய்யறவங்கதான் தண்டனையும் தரணும். நல்ல கூத்து. நாடகம்னா, ஸ்கிரிப்ட் எழுதி ஒத்திகை பாத்து, அரங்கேற்றம் பண்றதுதானே வழக்கம். அதையேதான் சச்சின், தோனி போன்ற நடிகர்களும் செய்தார்கள்.


சட்டப்படி பெட்டிங்தான் தப்பு. பெட்டிங்னா, ஆட்டத்துல யாரு ஜெயிப்பாங்க, யாரு மேன் ஆப் தமேட்ச் வாங்குவாங்க, எத்தனை ரன் வித்தியாசத்தில ஜெயிப்பாங்க, எத்தனையாவது ஓவர்ல ஜெயிப்பாங்க இப்படி எல்லா ஜோஸ்யங்களுக்கும் பெட் கட்டறதுதான் பெட்டிங்க. இதுல லைவ் பெட்டிங்தான் கிக்.

உதாரணத்துக்கு, கிங்ஸ் லெவன் - சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய முதல் லைவ் பெட்டிங் தொடங்கும். அந்த ஆட்டத்தைப் போக்கைப் பார்த்தால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முழுவதும் சூப்பர். அப்ப, பாதி ஆட்டம் வரை கிங்ஸ் லெவன் அணி ஜெயிக்கும் என்றுதான் பெட்டிங் குவிந்திருக்கும். சென்னை அணியின் முதல் 10 ஓவரும் சரியில்லை என்றவுடன், பஞ்சாப் மீதான பெட்டிங் தொகை இன்னும் எகிறும். 15 ஓவரில் சூடு அதிகம். வெற்றி பெறப்போவது பஞ்சாப் அணிதான் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கோடிகள் குவிந்தன.

கடைசி ஓவர்தான் பீக். அதுவரை மொக்கை போட்டுவந்த தோனி அடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பஞ்சாப் மீது பணத்தைக் கொட்டினார்கள். ஒரே மாதிரி இரண்டு பந்தைப் போட்டு, இரண்டையும் சிக்சருக்கு அனுப்பியது, தோனியின் திறமையல்ல. ஏற்கெனவே, கதை வசனம் எழுதி இயக்கிய சூதாட்டக்காரர்கள்தான். எவனோ போட்டுக் கொடுக்க, எவனோ முடிவு செய்ய தானே வெற்றி பெற வைத்து மாதிரி பேட்டை தூக்கிச் சுழற்றிக் காட்டிய மொக்கையன் தோனி ஒழிக.


சூதாட்டப் புகாரில் அசாருதீன் சிக்கியபோதே, சச்சினையும் நீக்கியிருக்க வேண்டும். அப்படி நீக்கியிருந்தால், பல உண்மைகள் வெளிவந்திருக்கும். பிசிசிஐ அமைப்பும் கலைந்திருக்கும். ஆனால், ஏமாற்றுக்காரர்கள் அதைச் செய்யவில்லை. மக்களை வீணர்களாக்கி, பணத்தை அள்ளுவதையே குறிக்கோளாகக் கொண்டார்கள். அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது.இப்போது, ஐபிஎல் மட்டும்தான் ஏதோ பெட்டிங்கில் மோசம் என்பது போலவும், பிசிசிஐ-யின் மற்ற பிரிவுகளெல்லாம் கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் ஆபத்து. இந்த மோசடியின் ஊற்றுக் கண்ணே பிசிசிஐதான். இவர்கள் அனைவரும் இணைந்தேதான் எல்லா மோசடிகளையும் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜக்மோகன் டால்மியா, பிசிசிஐ மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார். மர்மமான முறையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அந்த வழக்கில் டால்மியா கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நூற்றுக்கு நூறு உண்மையானது. ஆனால், இப்போது அந்த ஆளும் பிசிசிஐ கூட்டத்தில் சேர்ந்துவிட்டார்.

பிசிசிஐ கையில் கிரிக்கெட் இருக்கும்வரை உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எல்லா மோசடிகளையும் தெரிந்து கொண்டே, மக்களை ஏமாற்றுவதற்காக தேசத்துக்காக விளையாடுவது போல ஏமாற்றிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வெற்று நடிகர்கள்தான். அதிலும் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சச்சின், தோனி, கங்குலி, டிராவிட் போன்றோரெல்லாம் பெரும் மோசடிக்காரர்கள். இதையெல்லாம் தெரிந்துதான். என்போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக் கொண்டோம். சிலர் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பலர் இன்னமும் இந்த மோசடிகளை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நன்றாக நடிக்க இருக்கும் சச்சின் ஒழிக, தோனி ஒழிக!
..

..
.

3 கருத்துகள்:

 1. Cricket should be banned at least for 5 years in India.
  Let India develop...

  பதிலளிநீக்கு
 2. I stopped watch cricket since my 11th std. But sometime i couldn't stop me (for ex : one match with super over; remember?)

  I told to my friends that these are like WWE, but they aren't believing. The day will come and BCCI will announce the cricket as an entertainment Drama

  I told to my friends about WWE is drama; now they are understanding.. same way it will happen to cricket also

  A new day has come .....(celine dion)

  பதிலளிநீக்கு