வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நொண்டியடிக்கும் பரோட்டா மாஸ்டர்!


பார்டர் பரோட்டா கடையில் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லையென்றால் தென்னிந்திய உணவுகளைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தவராக முடியாது. பார்டர் பரோட்டா ஒரு தனிச்சுவை. அந்தக் கடை பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால் ஒரு மரியாதை இருக்கும். ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இப்ப சென்னையில் பரோட்டா மாஸ்டர்களைப் பார்த்தாலே பத்திக் கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் நம்ம ஊரு நண்பர் ஒருவர் பரோட்டா மாஸ்டர் மீதான கோபத்தை இப்படிக் கொட்டினார்.


அதெப்படி, நீங்க கேப்டன் சேர்ல உக்கார்ந்தா எல்லாமே கிழிஞ்சிடும்ங்றது வழக்கந்தானே. சிம்பாவேகூட வாரக் கணக்குல வெச்சு நம்மள நையப்புடைக்குமே. நம்ம அஜார் கிட்ட முடிஞ்சவரை குட்டு வாங்கினீங்களே. திரும்பவும் எப்படீய்யா வந்தது கேப்டன் ஆசை? பட்டும் திருந்தமாட்டீங்களா? அந்தப் பையன் திவாரியவோ, பஜ்ஜியவோ கேப்டனா ஆக்கிப்புட்டு, சொல்ற வேலைய மட்டும் செஞ்சிகிட்டு இருக்கலாமே.

நீங்க இல்லாட்டி டீமே இல்லைன்னு நம்ம பெரிய டீமை கொஞ்ச நாளைக்கு வெச்சிருந்தீங்க. இப்ப இந்த சின்ன டீமையும் அப்பிடி ஆக்கிப்புட்டீங்களேய்யா? தம்பீ, நான் நல்லாத்தானே ஆடுறேன், உனக்கேன் இந்தக் காண்டுன்னு நீங்க கேட்கறது புரியுதய்யா. ஆனா நல்லா ஆடறதெல்லாம் கேப்டனாகறதுக்கு தகுதியில்லீங்கய்யா? அதுக்கெல்லாம் தனியா கொஞ்சம் பொதுநலச் சிந்தனையும் வேணும்.

எந்த எக்கு எக்கினாலும் சிக்சர் அடிக்க முடியாம போச்சேன்னு, ஆட்டத்திலேருந்து பாதிலேயே வெளிய போனபோதே தெரிஞ்சுதய்யா உங்க கேப்டன்சி ஜென்ரல் நாலேஜ். அப்படி என்னதான தந்திரமோ?

நீங்க பண்றதெல்லாம் இன்னும் எத்தினி நாளைக்குத்தான்யா நாங்க தாங்கறது? எல்லாச் சாதனையும் பண்ணியாச்சு. பெரிய டீ20 டீம்ல ஆடறதில்லேன்னும் முடிவு பண்ணியாச்சு. அப்புறம் எதுக்கய்யா ஐபிஎல்லு? இது மட்டும் டீ20 இல்லியா? இல்ல, நாட்டுக்காக செஞ்ச சேவை(!) போதுன்னு நினைச்சிட்டீங்களா?


தோனியொரு மொக்கையர்தான். உங்கள மாதிரி ஸ்டைலிஷ் ஷாட்டெல்லாம் அவருகிட்ட கிடையாது. ஆனா, களத்துல இறங்கிட்டா அவங்க ஆளுங்கெல்லாம் வசிய மருந்து வெச்ச மாதிரி நடந்துக்கிறாங்களே, அதெப்டீய்யா. பாருங்க ஃபேர் பிளே அவார்டெல்லாம் அவருக்குத்தானே போகுது. பேசாம ட்யூஷன் கத்துக்கோங்க. ...


..

2 கருத்துகள்: