வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எதிரணிக்கு ஆடுவாரா சச்சின்?


அண்ணே வணக்கம்னே!

என்னடா ஹோஸ்னி முபாரக் தலையா, இன்னிக்கு தேங்கா பொறுக்கப் போகலையா...

சும்மாயிருங்கண்ணே... இன்னிக்கு வேற வேலை இருக்கு... நானே பீலிங்ல இருக்கேன்...

இவரு பெரிய சிவாஜி, பீலிங்க கொட்டிட்டாலும்... அப்படி என்னடா பொல்லாத பீலிங்கு..

என்னண்ணே அப்டிச் சொல்லிட்டீங்க... நம்ம இந்திய டீம் இன்னிக்கு ஓல்டு கப் ஆடுதாம்னே...

என்னது ஓல்டு கப்பா... பாருங்க மகா ஜனங்களே... உலகக் கோப்பைன்னை என்னன்னே தெரியாத இந்த நாயெல்லாம் கிரிக்கெட் பத்தி பேசுது...

சொல்றதக்கேளுங்கண்ணே... நம்ம தோனி டீம் இன்னிக்கு பங்களா டீம் கூட ஏதோ காக்காவுல ஆடுதாம்ணே...

டே கோமுட்டி, அது டாக்காடா....

ஆங்... அதாம்ணே...

அதுக்கு என்னடா செய்யணும்...

பங்ளா காரங்கள பழிவாங்கணும்னே... போனவாட்டி நம்ம மானம் போனதுக்கு அவங்கதாம்ணே காரணம்.. ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணே...

பெப்சி பாட்டில்ல பால்டாயில ஊத்திடுவோமாடா...

பெப்சி குடிச்சே ஒண்ணும் ஆகாதவங்கள பால்டாயில் என்னண்ணே செஞ்சிடும்... வேற ஏதாவது டெல் மீண்ணே...

வேற என்ன பண்றது... சைட் ஸ்கிரீன்ல விஜய் படத்த ஓடவிடலாமா... அதுல பீதியாகி அவங்க ஓடிடுவாங்க நாம மேன் ஆப்த மேட்ச் டாக் ஆப்த மேட்ச் எல்லாம் வாங்கிட்டு ஓடியாந்திடலாம்...

அது சரிப்படாதுண்ணே... ஏற்கெனவே எந்திரன் படம் பாத்த பிறகும் அவங்களுக்கு ஒண்ணும் ஆகலையாம்ணே...

அப்படியா ஆச்சரியமா இருக்கே... படத்தப் பாத்திட்டு நமக்கெல்லாம் நாலுநாள் வாந்திபேதி ஆச்சேடா... அவங்க எப்படியா சமாளிச்சாங்க... ஒருவேளை அவங்க ஸ்டிராங் டீமா இருப்பாங்களோ...

ஆமாண்ணே... அதான் லாஸ்ட் டைம் ஜெயிச்சுட்டாங்க... இப்ப எப்படியாவது கவுத்திடனும்ணே...

பேசாம... சச்சின் தெண்டுல்கர எதிரணியில சேர்த்து விட்டரலாமா... இவரு பாட்டுக்கு செஞ்சுரி அடிப்பாரு.... அப்புறம் தோக்க வெச்சிடுவாரு....

அண்ணே சூப்பர் ஐடியாவா இருக்குண்ணே... ஜனங்க ஏத்துக்குவாங்களா...

ஜனங்களா....  அவங்க காதுலதான் பெர்மனென்டா பூ வெச்சுருக்குமேடா...

....
..

4 கருத்துகள்:

  1. நண்பரே.!! சச்சின் மீது தங்களுக்கென்ன தீராத கோபம்.??? வேண்டாம் நண்பரே.!! இது போல பதிவுகளை தவிர்த்துவிடுங்களேன்.. ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  2. சச்சின் பற்றி பேச உங்கள் யாருக்கும் தகுதி இல்லை.

    பதிலளிநீக்கு
  3. உங்களால் ஒரு பேட்டை கையில் பிடிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு