திங்கள், 28 பிப்ரவரி, 2011

பிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிரிக்கெட்

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஆடியபோது, விடுதலைப்புலிகள் தங்களது துப்பாக்கிகளை மௌனத்தில் ஆழ்த்தினார்கள். உலகத்தை ஆச்சரியப்படுத்திய நிகழ்வு அது.  ஏதோ ஒருவகையில் நாடு என்ற விஷயத்துக்குள் அவர்கள் பிணைந்திருந்தார்கள். ஆனால் அதற்கு இன்றுவரை  நேர்மறையான பலன் கிடைக்கவில்லை. போகட்டும்.

கரீபியன்காரர்களுக்கு கிரிக்கெட் இந்த அளவு சீரியஸான விஷயமல்ல. அவர்களால் எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கழகம் 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது.
ஒரு காலத்தில் காலனி பகுதிகளாக இருந்தபோது, கிரிக்கெட்டுக்காகச் சேர்ந்திருந்த நாடுகள் இவை. பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற பிறகும் தொடர்ந்து சேர்ந்தே இருக்கிறார்கள். இவர்கள் வேறு எதற்காகவும் இணைவதில்லை.

பல்வேறு நாடுகள் சேர்ந்து இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடும்போது, எந்தத் தேசியக் கொடியும் காட்டப்படுவதில்லை. தேசிய கீதமும் இசைக்கப்படுவதில்லை. அதனால், நாட்டுப் பற்று என்பது கிரிக்கெட்டுடன் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதில்லை. கரீபியன் என்கிற அடையாளத்துடன்தான் அங்கு கிரிக்கெட் ஆடப்படுகிறது.

பிரிவினைக்குப் பெயர் பெற்றவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக வலுக்கட்டாயமாகச் சேர்ந்திருந்தாலும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டால் இந்தியா, பாகிஸ்தான் மாதிரி பிரிந்து கிடக்கிறார்கள். கிரேட் பிரிட்டன் கிரிக்கெட் கழகம் என்ற ஒன்றை உருவாக்குவது என்பதுதான் அவர்களுக்கு ஆசை.

 ஆனால், அயர்லாந்துக் காரர்கள் பிரிட்டனிடமிருந்து வடக்கு அயர்லாந்தையும், ஸ்காட்லாந்துக்காரர்கள் தனியாகவும் கிரிக்கெட் சங்கங்களைத் தொடங்கிக் கொண்டார்கள். இதனால், மற்றவர்களைப் பிரித்த பிரிட்டன் ஒன்று சேர முடியாமல் இருக்கிறது. வேல்சும் இங்கிலாந்தும் சேர்ந்ததுதான் இன்றைய இங்கிலாந்து கிரிக்கெட் அணி. யூனியன் ஜேக் கொடியை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. போட்டிக்கு ஆள் இல்லை என்பதுதான் காரணம். அதனால்தான் தேசியக் கொடியைக் குத்தகைக்கு எடுத்து கிரிக்கெட் வாரியங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.
..
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக