வியாழன், 17 பிப்ரவரி, 2011

அசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி?

அஜாரூதீன் என்று அழுத்தமாக அழைக்கப்படும் அசாருதீன் நோஐபிஎல் அதிபருக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரராக ஒருகாலத்தில் இருந்தார். குச்சிபோல பேட்டை அவர் எடுத்துவரும் ஸ்டைலே கவர்ச்சியாக இருக்கும். காலால் பந்தை மேலே எழுப்புவது, பாய்ந்து பீல்டிங் செய்வது என மைதானத்தில் அவரது ஆளுமை எப்போதும் இருக்கும். ஆனால் மேட்ச் ஃபிக்சிங் எனும் மோசடிக்குப் பிறகு அவரை கரிசனத்துடன் பார்க்க முடியவில்லை. அதனால் அவரைப் பிடிக்காமல் போயிற்று.

கபில்தேவ் வேறு மாதிரியான ஆள். 431வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பதற்கு அவர் ஸ்பின் பவுலிங் போட்டபோதும்கூட அவரைப் பிடிக்கத்தான் செய்தது. பிசிசிஐயிடம் இப்போது அவர் சரணடைந்திருந்தாலும்கூட அவர் மீது யாரும் குற்றம்சாட்டியதில்லை.

சச்சின் தெண்டுல்கரை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது. கபில்தேவ், அசாருதீன் உள்ளிட்ட அனைவரையும்விட திறமையானவர். ஆனால் மேட்ச் பிக்சிங் முறைகேடுகளுக்குப் பிறகு சச்சினையும் பிடிக்காமல் போயிற்று. அவர் செஞ்சுரி அடிக்கும்போது மற்றவர்கள் ரசிப்பதைப் போல ஐபிஎல் அதிபரால் ரசிக்க முடியவில்லை. சச்சின் மீதான குற்றச்சாட்டு இன்று வரைக்கும் மறுக்கப்படவில்லை. அசாருதீனை எதற்காக மற்றவர்கள் ஒதுக்கினார்களோ அதே காரணத்துக்காக சச்சின் தெண்டுல்கரும் ஒதுக்கப்படுகிறார். மற்றபடி அவர் மீது சேற்றைவாரி வீசு வேண்டும் என்ற எண்ணமோ, நம்மை அணியில் சேர்ப்பதற்கு அவர் ரெகமண்ட் செய்யவில்லை என்ற கோபமோ கொஞ்சமும் இல்லை.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், சச்சினுக்கும் அசாருதீனுக்கும் இருந்த பகை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் அசாருதீனை போட்டுக் கொடுத்ததில் சச்சினுக்கும் பங்குண்டு என்பதை நினைவில் கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.

பிப்ரவரி மாத ஜிக்யூ இதழுக்கு அசாருதீன் ஒரு பேட்டியளித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும், அரசியல் வாழ்க்கை பற்றியும் விவரித்திருக்கும் இந்தப் பேட்டியில் சச்சினின் கேப்டன்சி பற்றிய கேள்விக்கு, "அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று வெறுப்பாகப் பதிலளித்திருக்கிறார்.


மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் தம்மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படியானால் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் பிசிசிஐ, சச்சின் உள்பட அனைவருக்கும் தெரிந்ததேதான் இந்த மோசடி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்புகள் இன்று வரைக்கும் பிரச்னையை மூடி மறைக்கும் வேலையை மட்டுமே பார்த்து வருகின்றன.

மோடி - சசி தரூர் விவகாரத்துக்குப் பிறகு ஐபிஎல் மோசடிகள் தெரிய வந்ததுபோல், இப்போது சச்சின் - அசார் உள்பகை மோதலால் பழைய மேட்ச் பிக்சிங் மோசடிகளில் உண்மை வெளிவந்தால் நன்றாக இருக்கும். தங்கள் மீதான கறையைக் கழுவிவிட்டு சச்சினும் பிசிசிஐயும் இந்தியாவுக்காகக் கொடி பிடிக்கட்டும். அதுவரையில் இந்தியா ... இந்தியா... என்று கிரிக்கெட் மைதானங்களில் கோஷமிடுவோருக்கு ஒரு அய்யோ!

அசாரின் பேட்டி: Azharuddin interview to GQ Magazine
(கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)
.
.
.

3 கருத்துகள்:

 1. சச்சினுடைய திருமணத்தில் ஐம்பது சூதாட்டத் தரகர்கள் கலந்துகொண்டனர் என்ற ஒரு குற்றச்சாட்டு (இன்று வரை மறுக்கப்படாதது) குறித்து யாரும் பேசுவதில்லை.

  அசார் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதற்கும், சச்சின் கண்டுக்கொள்ளப்படாமல் விடப்பட்டதற்கும் அரசியல், இன, பூகோளக் காரணங்களும் உள்ளன.

  பதிலளிநீக்கு
 2. "அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை"

  Thats true

  azifair-sirkali.blog

  பதிலளிநீக்கு