ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல் கவிதை


 குறிப்பு: தோனியிடம் கொடுத்துவிடும்படி ரசிகை ஒருவர் மெயில் அனுப்பிய கவிதை இது


பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்

யாயாகிய யாயயே!
அரிய கிண்ணத்தை
எளிதாய்ப் பெயர்த்த ஆர்ப்பே!

பகைவர்க் கஞ்சா போரேறே!
கிராபைட் கேசம் துறந்து
உன் விழிசிவப்ப நான் அழுதேன்.

உலகம் மருக
பிரிதோர் நாள் நல்ல நாடகத்தில்
சுவர்ண முட்டைகள் பெற்றாயே!

பேய் மகளிர்
நின்றாட அய்பீஎல்
இறுதிவரை சென்றாயே!

ஆவிக்கு இனிய!
என் எழுமைக்ரான் சருமம்
அணுமின்சாரத்தில் அதிர்ந்ததே!

பந்தைப் பொறுக்கி!   
உன் ஆறுகளால் எனை
நொறுக்கினாய் சுக்காய்!

பொறைக் குமர,
இடக்கை திருக்கியடிக்கும்
மிடாஃப் வீச்சுக்கு அடிமை நான்.

சேயிழையாள் என்னை,
தவிக்கவிட்டு
காத தூரம் இருக்கிறாய்  நீ!

ஆட்டம் முடிந்து
அவனுக்கு கோப்பை கொடுத்து
புயலாய் திரும்பி வாராய்!

காதற் பெருக்கில் கிடக்கின்றேன்.





..

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக