புதன், 9 பிப்ரவரி, 2011

சச்சின் செய்த துரோகங்கள்!

மு.கு: சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர், அவரது கிரிக்கெட் சாதனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் வேறு யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இவ்வளவு சீனியராக ஆன பிறகும் பயிற்சிகளைத் தவறவிடாத அவரது பண்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளம். இவை எதையும் நாம் விமர்சிக்கப்போவதில்லை.

ஏற்கெனவே எழுதியவற்றுக்கே நமக்கு கறுப்புப் பூனை, கறுப்பு எலி பாதுகாப்பெல்லாம் தேவைப்படுகிறது. இந்த லட்சணத்தில் கிரிக்கெட் கடவுளை விமர்சித்தால் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக் கிடைத்தாலும் தப்பிக்க முடியாது என்று நலம் விரும்பிகள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பதாலும் நமது கைகள் கறைபடியாதவை என்பதாலும் எழுதுவதற்கு பிரேக் போடமுடியவில்லை. இது தொடர்பாக கடவுளை அவமதித்த வழக்குத் தொடர்வதற்கு ஐபிசியில் பிரிவு ஏதும் இல்லை என்பதை அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் ஆலோசித்து உறுதி செய்த பிறகே இதை எழுத முடிவெடுத்தோம்.


 சச்சினுக்கும் ஐபிஎல் அதிபருக்கும் எந்த உள்பகையும் வெளிப்பகையும் வாய்க்காத்தகராறும். உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சச்சின் செய்த துரோகங்களை எழுத வேண்டிய நிர்பந்த்தம் ஏற்பட்டிருக்கிறது.


வினோத் காம்ப்ளி 1991-ம் ஆண்டில் பிசிசிஐ ஒருநாள் அணிக்கு வந்தார். 1993-ம் ஆண்டில் அவருக்கு பாதுகாப்பான நிரந்தர இடம் கிடைத்தது. தனது 11-வது போட்டியில் முதல் சதம் அடித்தார். 1993-ம் ஆண்டில் டெஸ்ட் அணிக்கு வந்தார். இரண்டே ஆண்டுகளில் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24 கூட ஆகவில்லை. அதன் பிறகு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் தலைகாட்டினாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.


சச்சின் 1989-ம் ஆண்டில் அணிக்கு வந்தார். முதல் 2 போட்டிகளிலும் முட்டை அடித்தார். 5 ஆண்டுகள் வரை அவரால் சதம் அடிக்க முடியவில்லை அவருக்குப் பிறகு களத்துக்கு வந்த வினோத் காம்ளி ஒருநாள் போட்டியில் சதமும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதமும் அடித்திருந்தார். 1994-ம் ஆண்டில்தான் டெண்டுல்கரால் முதல் சதத்தை அடிக்க முடிந்தது. இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று கருதப்பட்ட இருவரும் உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது, பின்னர் தெரியவந்தது. நெருக்கடியான தருணங்களில் சச்சின் எனக்கு கைகொடுக்கவில்லை என்று காம்ப்ளி வெளிப்படையாகவே தெரிவித்தார்.


1999 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு சூதாட்ட சர்ச்சை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அசாருதீன், ஜடேஜா, குரோனியே உள்ளிட்ட பலரும் சிக்கினர். எல்லோருக்கும் தடை விதிக்கப்பட்டது. குரோனியே மர்மமான முறையில் இறந்தார். சச்சினிடம் சூதாட்டம் பற்றிக் கேட்கப்பட்டது. தம்மைப் பலரும் அணுகினார்கள் எனவும், அசாருதீன் வலியுறுத்தினார் எனவும் ஒப்புக் கொண்டார். ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.


2003-ம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து பெராரி ரக சொகுசு காரை இந்தியாவுக்குக் கொண்டுவர சச்சின் விரும்பினார்.  அதற்காக அப்போதைய பாஜக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். தமக்குச் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று. தீயணைப்புக் கருவிகள், அரசுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றுக்கெல்லாம் வரிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறியிருந்த பாஜகவின் பிரமோத் மஹாஜன், சச்சினுக்கு உடனடியாக வரிவிலக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். அது பிறகு சர்ச்சையானது.


நாட்டுப்பற்று தேசப்பற்று என்று பிதற்றிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிசிசிஐ அணி சார்பில் இனி 20 ஓவர் போட்டியில் விளையாட மாட்டேன் என்று அறிவித்த சச்சின், இன்னும் ஐபிஎல் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார்.


சரி முதலில் உலகக் கோப்பை என்ன விலை என்று கேளுங்கள். அப்புறம், பாரத ரத்னாவுக்கும் நோபல் பரிசுக்கும் பேரம் பேசலாம்...
..


...


..

20 கருத்துகள்:

 1. தனது தவறான பழக்க வழக்கங்களால் தனது திறமையை வீணடித்தவர் வினோத் காம்ப்ளி.அதற்காக சச்சினை விமர்சிப்பது அர்த்தமற்றது. ஆனால் சச்சினுக்கு பாரத் ரத்னா பட்டம் கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று. கிரிகெட் போர்டு இந்திய அரசாங்க அமைப்பு அல்ல. அதனால் கிரிகெட் விளையாடுபவர்கள் இந்திய மக்கள் சார்பாக விளையாடுபவர்கள் என்று சொல்ல முடியாது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் சாதிப்பவர்கள் மட்டுமே இது மாதிரியான பட்டங்களுக்கு தகுதியானவர்கள். தகுதியற்ற அரசியல் தலைவர்களையெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆடும் நாம் திறமையான ஒரு விளையாட்டு வீரரை விவாதப் பொருளாக ஆக்க வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 2. //சச்சின் 1989-ம் ஆண்டில் அணிக்கு வந்தார். முதல் 2 போட்டிகளிலும் முட்டை அடித்தார். 5 ஆண்டுகள் வரை அவரால் சதம் அடிக்க முடியவில்லை

  anal avaroda contribution niraiyave irunthuchu .

  பதிலளிநீக்கு
 3. தப்பு தப்பா சொய்ல கூடாது , சச்சின் ண இப்படி லாம் சொய்ளறது , சரி இல்ல

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்குப் பிடிக்கலைனா இப்படி பேசறதா . காம்ளி சோபிக்காமல் போனதுக்கு சச்சின் எப்படி காரணம் ஆக முடியும் ?? அதுவும் இல்லாமல் , பாஸ்ட் ப்வ்ளிங்கில் காம்ளி பலமுறை திணறியதன் காரணமாகத்தான் வெளியேற்றப் பட்டார்.

  பதிலளிநீக்கு
 5. நண்பரே... முதலில் விஷயங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். வினோத் காம்ப்ளியைவிட சச்சின் விளையாட்டில் உயர்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவர்களது சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு விளையாட்டைப் பாருங்கள். சரி உங்கள் கணக்குப்படி வினோத்தின் திறமையை இந்தியா வீணடித்துவிட்டதாகக் கூறுகிறீர்களே... அதற்கு வருகிறேன்.

  விளையாட்டைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்தில் எப்படி விளையாடினார்கள் என்பது முக்கியமல்ல, இப்பொழுது எப்படி ஆடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

  காம்ப்ளியின் கடைசி ஐம்பது ஒருநாள் போட்டிகளை எடுத்துக் கொள்வோம். அவர் அவ்வப்போது டீமுக்கு வந்து சென்று கொண்டிருந்தவர் என்று கிரிக்கெட் தெரிந்த எல்லாருக்கும் தெரியும். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தினார்?

  கடைசி ஐம்பது போட்டிகளில் காம்ப்ளி 5 அரைசதமும் ஒரேயொரு சதமும் மட்டுமே அடித்தார். மொத்த ரன்களைக் கணக்கிட என்னிடம் வசதில்லை. ஆனால் அவரது கடைசி 36 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மூன்றே அரைசதம் மட்டும் அடித்திருந்தார்.

  அதே காலகட்டத்திலிருந்து டெண்டுல்கரின் ஐம்பது மேட்சை எடுத்துக் கொள்வோம். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காரணம் அவர் தொடர்ந்து நன்றாக ஆடினார். 8 சதமும் 11 அரைசதமும் அடித்திருந்தார். மொத்த ரன்களை நான் கணக்கிடவேண்டியதில்லை நீங்களே புரிந்திருப்பீர்கள். காம்ப்ளியை 2000ம் ஆண்டு அணியிலிருந்து தூக்கியபொழுது அவரது ஆவ்ரெஜ் வெறும் 32 தான். அதே நாள் சச்சினின் ஆவ்ரேஜ் 42...

  முதலில் புள்ளி விபரங்களைத் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. டெஸ்டில் அவர் நன்றாக ஆடியிருந்தாலும் ஒழுக்கமின்மை நடத்தை காரணமாகவே அவர் அணியிலிருந்து தூக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே!!

  பதிலளிநீக்கு
 7. நண்பரே! மிகசரியான பதிவு. F1 கார் பந்தய வீரர் michael schumacher $10 மில்லியன் சுனாமி நிதி கொடுத்தார். 90 % இந்தியனால் ஹீரோவாக போற்றப்படும் சச்சின் ஒரு பைசா கூட தரவில்லை. இங்கு நான் நிதி தரவேண்டும் என்று சொல்லவரவில்லை, ஆனால், வித்தியாசத்தை பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஹலோ பாஸ்.. முதல்ல அந்த பெராரி மேட்டர் எப்படி துரோகமாகும்..???

  இந்திய கிரிக்கெட்டின் ஒரு சாதனைக்கு இதனை நாம் செய்யலாம் என நமது அரசாங்கம் முடிவெடுத்தே இதை செய்தது.. 2003ல சட்டமே உருவாச்சு.. பரிசா கிடச்ச காருக்கு வரியும் இல்லாம இருந்துட்டா நல்லாயிருக்கும்னு எல்லா மனுசங்களுக்கும் தோணுமே.! அத சச்சின் செய்தாமட்டும் ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் வருது..

  கொஞ்சம் ஆதவா அவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.. காம்ப்ளி அணியிலிருந்து விளக்கப்பட்டதுக்கும் சச்சின் துரோகம் செஞ்சார்னு சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லையேங்க.. அப்பவே சச்சின் ஆடுறதுல நுணுக்கங்கள் சரியாக இருக்குன்னு கவாஸ்கர் புகழ்ந்தார்.. காம்ப்ளி பேட்டியில் என் நெருங்கிய நண்பர் எனக்கு உதவவில்லை என கூறினார்.. வாய்ப்பை தவற விட்டால் என்னதான் செய்ய முடியும்.??? நன்றி மறக்கா சச்சின் ரோஹன் கவாஸ்கருக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்.. ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை.. அதன் பிறகு சச்சின் விட்டுவிட்டார்.. இதுயென்ன அரசாங்க வேலையா வேலை செய்யாட்டியும் பரவாலன்னு வச்சிக்க சொல்லி ரெக்கமண்டேஷன் சொல்ல.. கேம் பாஸ் கேம்.. வேலைக்காகாட்டி போயிட்டே இருக்க வேண்டியது தான்.. இது சச்சினுக்கே நாளை ஏற்படலாம்..

  சச்சின் இனி 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என சொல்லியது அவரை ஒதுக்கி இளைஞர்களுக்கான போட்டி போட்டி என பிதற்றியதாலே.!!!

  ஐபிஎல்லின் அவரை யாரும் அப்படி ஒதுக்கவில்லையே.!! மும்பை அவரை விடாது காத்து தானே வருகிறது.. எதை துரோகம் என சொல்கிறீர்கள்..???

  பதிலளிநீக்கு
 9. கருத்துகளுக்கு மிக்க நன்றி. பெராரி கார் விவகாரம் துரோகமல்ல என்று கூறுவதை ஏற்கமுடியவில்லை. அரசியல்வாதிகள் அனைவரும் இதைப்பயன்படுத்தினால் ஒப்புக் கொள்வீர்களா?

  இளைஞர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால், ஒருநாள், டெஸ்ட் போட்டிகளும் இருக்கின்றனவே, ஐபிஎல் போட்டியில் விலகினால்கூட இந்திய இளைஞர் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கத்தான் போகிறது.

  பதிலளிநீக்கு
 10. அதிர்ஷ்டமும், உழைப்பும் சேர்ந்த ஒரு விஷயம் சச்சின்.

  எல்லோரும் எப்போவும் நல்லவரா இருக்க முடியாது.

  தனக்கு கிடச்சிருக்க மிகப்பெரிய புகழ வச்சுக்கிட்டு அவரு கேப்டன் பதவிய கேட்டா முடியாதுன்னு சொல்ல ஆளில்ல...........

  காம்ப்ளிக்கு, யுவராஜ் சிங் மாதிரி அதிர்ஷ்டம் இல்ல..........என்னா தனி மனித ஒழுக்கம் தான் ஒருவர மேல கொண்டு போகும்...........

  பதிலளிநீக்கு
 11. //இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று கருதப்பட்ட இருவரும் உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது, பின்னர் தெரியவந்தது. நெருக்கடியான தருணங்களில் சச்சின் எனக்கு கைகொடுக்கவில்லை என்று காம்ப்ளி வெளிப்படையாகவே தெரிவித்தார். //டெண்டுல்கர் வந்தார், ஆடினார், அணியில் நிரந்தர இடம் பிடித்தார் என்பதும், காம்ப்ளி வந்தார் சொதப்பினார், வீட்டுக்கு அனுப்பினார்கள் இவை இரண்டும் சம்பந்தமில்லாத இருவேறு நிகழ்வுகள். காம்ப்ளி அணியில் இடம் நிலைத்திருக்க தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை பெரும் முழுப் பொறுப்பு அவருடையதே. இன்னொரு தனிப்பட்ட நபர் எனது ஆட்டத்திற்கு உதவில்லை, அல்லது அவரால் என் ஆட்டம் பாதிக்கப் பட்டது என்பதெல்லாம் பேத்தல். அப்படி நம்பியிருந்தால் அவர் கிரிக்கெட் ஆடவே லாயக்கில்லாதவறேன்று பொருள், வீட்டிற்கு அனுப்பியது சரிதான்.

  பதிலளிநீக்கு
 12. //ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.//இது சிக்கலான செய்தி, முடிந்த வரை விலகி இருப்பதே பாதுகாப்பு. என்னிடம் புக்கிகள் வந்தார்கள் என்றாலே போதும், "இவன் பணம் வாங்காமலா இருந்திருப்பான்" என்று பேச ஆரம்பித்திருப்பார்கள். மேலும் விஷயமே வெளிவராத நேரத்தில் அது குறித்து பேசுவது வம்பை விலைக்கு வாங்கும் செயல். சச்சின் நிலையில் யார் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 13. Sachine is great player and great man. I do not understand, why people complain who is in the top. we can not compare with anyone with Sachine.

  பதிலளிநீக்கு
 14. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்கு திறமை இருந்தால் யாருடைய தயவும் தேவை இல்ல. இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பௌன்செர் பந்துகளை எதிர்கொள்ள முடியாததே இதற்கு காரணம் என நான் அறிந்த உண்மை. காம்ப்ளியால் சச்சின் இடம் ஒன்றும் பறிபோக போவதில்லை. இதை பற்றி கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போகலே கூறிய காணொளி இதோ.

  http://www.youtube.com/watch?v=obmHUq4F-gs

  பதிலளிநீக்கு
 15. ok sir. Blog OC la than irukku. Adichi vidunga. Yaar kaeppanga?

  பதிலளிநீக்கு