செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

தோனியைப் பழிவாங்கப் போவது யார்?

உன் வலைப்பதிவைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது என்று தேசபக்தர் ஒருவர் நேற்றிரவு நோஐபிஎல் அதிபருக்கு போன் செய்து சொன்னார். இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோயில், மசூதி, சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர் கூறினார். நோஐபிஎல் அதிபரைக் கண்டித்து ஜனாதிபதிக்கு தந்தி அடித்து வருவதாகவும், அவரது ரேஷன்கார்டு, பால்கார்டு, விசிட்டிங் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் கேன்சல் செய்து இந்திய தேசத் துரோகி என்று நாடு கடத்துவதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. 


உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில்இந்தப் போட்டியில் தோனியைப் பழிவாங்கப் போவது யார் என்று ஆளுக்கு ஆள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படிப் பழிவாங்குவது யாரோ அவர்தான் அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு கேப்டனாக வருவார் என்று கணிக்கப்படுகிறது.


அதுசரி, தோனியை ஏன் பழி வாங்க வேண்டும்? அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம் மீண்டும் அளிக்கப்படுகிறது.

கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் டிராவிட் தலைமையில் பிசிசிஐ அணி களம் இறங்கியது. ஒரு பிரிவில் 4 அணிகள். டிராவிட் அணி இருந்த பிரிவில் இலங்கை, வங்கதேசம், பெர்முடா அணிகள் இருந்தன. லீக் சுற்றில் மொத்தமே 3 ஆட்டங்கள்தான். குறைந்தது 2 போட்டியில் ஜெயித்தால் அடுத்த சுற்றுக்குப் போய்விடலாம்.


முதல் போட்டியிலேயே டிராவிட் அணி வங்கதேசத்திடம் தோற்றுப் போனது. அடுத்து பெர்முடா அணியிடம் 250-க்கும் அதிகமான ரன்களில் ஜெயித்தது. அடுத்த இலங்கையிடம் தோற்றது. இந்த 3 போட்டிகளில் தோனி எடுத்த ரன்கள் முறையே -முட்டை, 29, முட்டை- அதாவது தோற்ற போட்டிகள் இரண்டிலும் முட்டை எடுத்தார்.


 இப்படி முட்டை எடுத்தவர்தான் இன்று கேப்டன் என்பதால். இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக முட்டை எடுத்தால் அடுத்த உலகக்கோப்பை போட்டியில் கேப்டனாக இருக்கலாம். அந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப் போகிறதோ?

.
.
.

6 கருத்துகள்: