சனி, 19 பிப்ரவரி, 2011

சச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்கை

சச்சினுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருவது பற்றி நண்பர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், பிறருடைய மனதைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதற்கு நோஐபிஎல் அதிபர் முன்வந்திருக்கிறார்.


இதுபற்றி நேற்றிரவு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பது மற்றவர்களைப் போலவே எனக்கும் தெரியும். எனினும் கிரிக்கெட்டில் உள்ள மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் எழுதப்படும் படைப்புகளில் சச்சினைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. எல்லாவகையிலும் கிரிக்கெட்டை ஆக்கிரமித்திருக்கும் சச்சினை விட்டுவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி எழுதச் சொன்னால் எப்படி? (கைதட்டல்)

அதனால், கிரிக்கெட்டுக்கு எதிராக ஏதாவது எழுதும்போது அனிச்சையாகவே சச்சினும் தோனியும் வந்துவிடுகிறார்கள். அவர்கள் திறமையானவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுத்ததில்லை. நையாண்டி செய்யும் இடங்களில் அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும்கூட அவர்களின் திறமைக்கும், புகழுக்கும் எனது அடிமனம் தரும் அங்கீகாரமே காரணம்.

இந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டதே, ஐபிஎல் போட்டிகள் மூலமாக கிரிக்கெட் எப்படி வியாபாரமாக்கப்படுகிறது, அதில் நகரங்களின் பெயர்களும் நாட்டின் பெயர்களும் எப்படிப் போலித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை விவாதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது நாட்டில் கிரிக்கெட் மறுஆய்வுக்கு உட்பட வேண்டும், அதுபற்று ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே நமது விருப்பம். அதற்கான களமாகவே இதை நான் கருதுகிறேன். நமது அதீத எதிர்ப்பின் காரணமாக தொடங்கப்பட்ட நோக்கத்திலிருந்து நமது கம்பெனி சற்று விலகியது போன்ற பிரமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தம்பி கூர்மதியான், முகிலன், ஆதவா, ஜெயதேவ் தாஸ் ஆகியோரின் கருத்துக்கள் நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.

அதனால் பொதுமக்களின் சென்டிமென்ட் கருதி சச்சினை விவாதத்தில் இருந்து விலக்கிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதுவரை யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. எனினும் பிசிசிஐயிடம் இருந்து கிரிக்கெட்டையும் கிரிக்கெட்டிடம் இருந்து நாட்டையும் காப்பாற்றும் நமது போர் தொடரும்.
 
..
..

2 கருத்துகள்:

  1. நன்றி.!!

    தங்கள் நோக்கம் சிறந்தது.. அதை வலியுறுத்த சச்சின் தேவையில்லை.. அதீத அரசியல் கட்சிகள், மேல் பிரமுகர்கள் என ஆராய்ந்து வெளிகொண்டுவர வேண்டுகிறேன்..

    தங்களின் இந்த முடிவை மதிக்கிறேன்.. வேண்டுகோளுக்கு இணங்கி செயல்பட்டதற்கு தங்கள் மதிப்பு பெருகிட்டது.. ஐபிஎல் எதிராக தங்கள் குரல் மேலோங்க வாழ்த்துகிறேன்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  2. Please change your decision. come and write against sachin. i am ur fan about sachin blogs.

    பதிலளிநீக்கு