செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வரிசையில் நிற்கும் நாள்

அன்று பி.டி. கத்திரிக்காய்க்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். ஜெய்ராம் ரமேஷுக்கு நெருக்கடி கொடுத்து எப்படியாவது அந்த பி.டி. கத்திரிக்காய் வரவிடாமல் செய்து விடலாம் என்று கூறினார்கள். ஆனால், இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. புத்திஜீவிகளைக் கொண்ட அவரது தலைமையிலான மரபுப் பொறியியல் குழு பி.டி.கத்திரிக்காய்க்கு ஆசீர்வாதத்துடன் அனுமதி வழங்கியது. ஆதர்ஷ், போஸ்கோ ஆலை, லாவாசா மலை நகரம் போன்ற திட்டங்களில் "எல்லாம் முடிந்த பிறகு" சீனுக்குள் வந்தவர். பேருக்குத் தடை விதிக்கும் பணியைச் செய்து சுற்றுச் சூழலுக்கு நல்லவர் என்கிற பெயரைத் தட்டிச் செல்கிறார். இப்போது பிடி கத்திரிக்காயை எல்லோரும் மறந்து போனார்கள். ஜால்ரா போடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் இவர் இப்போது ஹீரோவாகிவிட்டார். நமது நாட்டு ஹீரோக்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். இப்போது கையெழுத்து வேட்டை மீனவர்கள் பிரச்னைக்காக நடக்கிறது. நடக்கட்டும் நடக்கட்டும்.

இன்று சேப்பாக்கத்தில் டிக்கெட் கொடுக்கிறார்களாம். காலையில் சீக்கிரமே சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும். 4 மேட்ச் இருக்கின்றன. மார்ச் 20-ம் தேதி தோனி அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன. மற்ற மூன்றும் வேறு நாட்டு அணிகளுக்கு இடையேயான போட்டி. மீனவர் பிரச்னைக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு நேரே சேப்பாக்கம் வந்து விடவும். நேரில் பார்க்க விருப்பமில்லாதவர்கள் ஈஎஸ்பிஎன், ஸ்டார் தொலைக்காட்சிகளுக்கு கேபிள் ஆபரேட்டரிடம் சொல்லி வைக்கவும்.

..

1 கருத்து: