ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உலகக் கோப்பை கவுன்டவுன் 20: குவார்ட்டர் கோயிந்தன் பதில்கள்

அதைப் படிக்கும் முன் இதைப் படிக்க: கீழ்க்காணும் பதில்கள் அனைத்தும் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் குவார்ட்டர் கோயிந்தன் அவர்கள் தனது அனுபவ அறிவைக் கொண்டு எழுதியவை... கேள்விகள் அனைத்தும் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் கேட்கும் அளவுக்குத் தரமானவை.

ஐசிசி தலைவர் தலைவர் யாரு?

சரத் பவார்.


பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் யாரு?
ஜக்மோகன் டால்மியா


ரெண்டு பேருக்கும் என்ன உறவு?

வாய்க்காத் தகராறு ஏகப்பட்டது... இவரு நல்லவரு... அவரு ரொம்ப நல்லவரு...


இப்ப என்ன அக்ரிமெண்ட்?

நான் திருடினத நீ காட்டிக் கொடுக்கக்கூடாது... நீ திருடினா நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்.  


கொல்கத்தாவுல என்ன பிரச்சனை?
ஆடுற தெரு கோணலா இருக்காம்.
எதனால இந்தப் பிரச்சனை?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா.கோணலான தெருவ சரி செய்ய முடியாதா?
அத சரி செய்யறதுக்குத்தான் நம்ம நிதியமைச்சர்லேருந்து பொதுப்பணித்துறை வரை எல்லாம் வரிஞ்சு கட்டியிருக்காங்க.


இவங்களுக்கு வேற வேலையே இல்லையா?
இது என்ன தமிழக மீனவர் பிரச்னையா... கண்டுக்காம விடுறதுக்கு... கிரிக்கெட்டுமா கிரிக்கெட்டு...


கடைசியா ஒரு கேள்வி... கொல்கத்தாவுல குத்தாட்டம் நடக்குமா நடக்காதா?
ஐசிசி தலைவர் சரத் பவார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா...
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக