சனி, 13 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு? எம்ஐ - ஆர்ஆர் 1

நேத்து தாதா டீம்தான் ஜெயிக்கும்னு குடுகுடுப்பை சொன்ன அருள்வாக்கு பலித்துவிட்டதைப் பார்த்து நைட் ரெண்டு மணி வரைக்கும் பாராட்டுக்கள் குவித்து கொண்டிருந்தன. அந்த மாதிரி இன்னிக்கு மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச்ல யார் ஜெயிக்கறாங்கன்னு சொல்லிடுங்கன்னு நிறையபேர் கடிதம் மூலமும் தந்தி மூலமும் கேட்டுக்கிட்டாங்க.  அவங்களுக்கெல்லாம் நான் சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு. இனிமே கடிதம் எழுதறதா இருந்தா புறா மூலம் அனுப்புங்க. லெக்பீஸ் சாப்பிட்டு நாளாச்சு.

நேத்து அருவாக்கு சொன்ன அடுத்த நிமிஷத்திலேயே  நாலு விக்கெட்டு காணாமப் பறிகொடுத்து கோல்கத்தா டீம் பதறிப் போயிருந்திச்சு.  கவலைப்பட வேண்டாம் விதி வேற மாதியிருக்குன்னு இ-மெயில் அனுப்பின பிறகுதான் கானுக்கு உசிரே வந்தது.

சரி இன்னிக்குக் கதைய பார்ப்போம். மும்பை இந்தியன்ஸ் டீம்ல பொலார்டு, பிரேவோ இன்னிக்கு விளையாடப் போறதில்ல. பொலார்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனாலும் தெண்டுல்கர், ஜாகீர், ஹர்பஜன், மலிங்கா, ஜெயசூர்யா இருக்கிறதால கொஞ்சம் பலம் அதிகம்தான்.

வார்னே டீம்ல ஸ்மித், யூசுப் பதான். டெய்ட் தவிர வேற யாரும் உருப்படியில்ல. ஆனாலும் யார் எப்படி ஆடுவாங்கன்னு சொல்ல முடியாது. ஏன்னா எல்லாமே மோடி கைலதான் இருக்கு. வேணுன்னா பாருங்க ஆட்டத்தில பல எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும்.

சரி கெலீக்கப் போறது யாருன்னுதான கேக்கறீங்க.. என்னோட கணிப்புப் பிரகாரம் இன்னிக்கு கெலீக்கப் போறது மும்பைக்காரங்கதான். சொந்த கிரவுண்டும், ஆவிகளோட நடமாட்டத்தையும் வெச்சுப் பார்த்தா இதுதான் சரியா இருக்கும்.

குடுகுடுப்பை சொன்னா தப்பாது...

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக