வியாழன், 18 மார்ச், 2010

ஐபிஎல் பஞ்சாயத்து: கத்ரீனா அணிக்கு வெற்றிவாய்ப்பு!

நெனச்ச மாதிரியே வாஸ்து மாமேதைக்கு கார்டன் பிரௌனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. டவுனிங் தெரு வீட்டில் நாய்க்குட்டியை எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக இருவரும் ஆலோசிக்க இருப்பதாகத் தெரிகிறது. அந்த ஆலோசனை முடிந்ததும் ரஷியாவுக்குப் பறந்து மெத்வதேவின் காரில் ஸ்டெப்னியை எங்கு பொருத்துவது என்பது குறித்த மேல்நிலை அவசரக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
அதுவரை ஐபிஎல் போட்டிகளை கணித்துத் தருவதற்கு வேறு யாரையேனும் நியமித்துக் கொள்ளும்படி மின்னஞ்சல் வழியாக அந்த மாமேதை கேட்டுக் கொண்டார். இதன் பிறகுதான் ஒரு பயங்கரமான முடிவு எடுக்கப்பட்டது. மோடியிடமே போன் செய்து கேட்டுவிடுவதென்று

இன்னிக்கு ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூரில் நடக்கும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பாங்கன்னு அவர்கிட்ட கேட்டபோது, அவர் சொன்ன தகவல் கீழே அப்படியே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்துக்கூட மாறாமல்.
"ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் அவங்க அக்கவுண்ட் ஆரம்பிக்கலை. கிட்டத்தட்ட 2008ம் இதே மாதிரி தான் ஆரம்பிச்சாங்க. கடைசியில அவங்க தான் சேம்பியன். இந்த தடவை அப்பிடி முடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க டீமோட சிறந்த வீரர்கள் எல்லாம் காயப்பட்டு இருக்காங்க. ஸ்மித், பதான், மஸ்கரானஸ் இப்பிடி. ஷான் டெயிட்டும் எதிர் பாத்த அளவுக்கு சோபிக்கலை. வார்னேவுக்கு எதாவது மிராக்கிள் நடந்தாத்தான் உண்டு.

பெங்களூரு போன போட்டில ஜெயிச்ச உற்சாகத்துல இருப்பாங்க. அதோட இது அவங்க சொந்த மைதானம்ங்கிறதால ரசிகர்கள் ஆதரவு இருக்கும். அதோட காலிஸ் மாதிரி ஆளுங்க இருக்கிறதால தைரியமா இருப்பாங்க. வெற்றி வரிசையை மாத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. 

இந்தப் போட்டியில பெங்களூரு ஜெயிக்கத்தான் வாய்ப்பு நிறைய இருக்கு"

மேற்படி தகவல், போனில் மோடி கூறியதுதான். இந்தக் கருத்துக்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், அமெரிக்காவாழ் முகிலன் என்பவர் இதைத் தம்முடைய கருத்து என அவருடைய பிளாக்கில் எழுதியிருப்பதாக அறிகிறோம். இது சுத்துப்பட்டி 18 கிராமங்களின் பொது நன்மைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனால், இது தொடர்பாக சின்னக்கவுண்டரை அணுகி பஞ்சாயத்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெற்றி நம் பக்கந்தான்.


...

..

2 கருத்துகள்:

  1. யோவ் மோடி என் கிட்ட ஃபோன் செஞ்சி இந்த விசயத்தை சொல்லிட்டு நான் சொன்னதா போடாத அப்புறம் ஷில்பா ஷெட்டிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாருய்யா.. அதான் நானேஏஏஏஎ சொல்ற மாதிரி அதைப் போட்டேன். நீரு என்னன்னா இப்பிடி மோடி பேரப் போட்டுப்புட்டியேய்யா??

    மோடி ஒரு போட்டியை நடத்துற நடுநிலைமைல இருக்குற நாட்டாமை. அவரு எல்லாம் இப்பிடி கருத்து சொல்லக்கூடாதாம்ல?

    பதிலளிநீக்கு
  2. இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?

    பதிலளிநீக்கு