வியாழன், 11 மார்ச், 2010

ஐபிஎல்: எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்?

கிரிக்கெட் போட்டியின்னா ஆட்டோல ஆள்பிடிச்சுக் கூட்டிட்டுப் போன காலமும் இருந்துச்சி. அப்புறம் டிக்கெட் வெச்சாய்ங்க. அப்புறம் நம்ம தூர்தர்ஷன்ல ப்ரீயா காட்டினாங்க. சில நேரம் ஹைலைட்ஸ் மட்டுமாவது போட்டாங்க. ரேடியோல லைவ் கமென்ட்ரி கொடுத்தாங்க. எப்படியோ ரொம்பச் செலவில்லாம கிரிக்கெட்ட பாக்க முடிஞ்சது. 80கள்தான் கிரிக்கெட் வணிகமயமான காலகட்டம். அதுவும் 87 உலகக் கோப்பைக்குப் பிறகுதான் இந்த விளம்பரங்கள் அதிகமாகி கிரிக்கெட் வீரர்கள் வியாபாரிகளா மாறினாங்க. சாலிடர் விளம்பரமும் பூஸ்ட் விளம்பரமும் பேமஸ் ஆனது அந்தச் சமயத்திலதான்.

கிரவுண்டு, பேட், தொப்பி, சட்டை, பேண்டு, ஸ்டம்புன்னு எல்லாப் பக்கமும் விளம்பரங்கள் அதிகமாச்சு. கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களா மாறினாங்க. வாரியங்கள் கொடுக்கற சம்பளத்தவிட நூறுமடங்கு அதிகமாக விளம்பரக் காசு அவங்களுக்குக் கிடைச்சது. ஒரு வகையில கிரிக்கெட் வளர்றதுக்கும் இந்த செழிப்புதான் காரணம். ஆனா இந்த ஐபிஎல் வந்த பிறகு மோடி பண்ற அளும்பு தாங்க முடியல. எப்படியெல்லாம் காசு பாக்க முடியும்னு அலையறானுவ. கேட்டா, இது வியாபாரம்தான்னு வெளிப்படையா ஒத்துக்கிட்டு பேச்ச முடிச்சிக்கிறாங்க.

இப்பிடியே போனா இன்னும் என்னென்ன வகையிலெல்லாம் நம்ம மோடி சிந்திப்பாருன்னு யோசிச்சதுல சிந்தின முத்துக்களத்தான் கீழே சொல்லியிருக்கேன்.

1. போன ஐபிஎல்ல சிக்சர்ங்ற பேருக்கு பதிலா டிஎல்எஃப் மேக்சிம்னு சொல்லி விளம்பரப்படுத்தினாங்க. இதே மாதிரி ஃபோர் அடிச்சா பஜாஜ் பல்சர் மீடியம்னு சொல்லி பல்சர் பைக்குக்கு விளம்பரம் பண்ணிச் சம்பாதிக்கலாம். முடிஞ்சா பந்து போற வேகத்திலேயே பல்சர் போற மாதிரி கிராபிக்ஸ் ரெடி பண்ணி எக்ஸ்ட்ரா காசு பாக்கலாம்.

2. லஞ்ச் டைம்ல ப்ளேயர்ஸ் எல்லோரும் ரூம்ல போயி தனியா இருக்கறதுக்கு பதிலா, நடு கிரவுண்டலேயே சாப்பாடு பரிமாற வைக்கலாம், அத சேனல் 4 பிக்பி ப்ரோக்ராம் மாதிரி லைவ்ல தனி நிகழ்ச்சியா பாப்புலராக்கலாம். முனியாண்டி விலாஸ் ஸ்பான்ஸர் கேக்கலாம்.

3. ஐபிஎல்ல 10 ஓவர் முடிந்சதும் ஏழரை நிமிஷம் பிரேக் உட்டாங்க. இப்ப குறைக்கப் போறாங்களாம். அதெல்லாம் வேண்டாம். ஒவ்வொரு ஓவர்லயும் மூணு பால் முடிஞ்சதும் ஒரு பிரேக் விடலாம். குறைஞ்சது ரெண்டு விளம்பரம் போட டைம் கிடைக்கும். நம்ம ஆளுங்க என்ன போட்டாலும் பாப்பாங்க. ஆக்ஸ் மாதிரி விளம்பரம் போட்டா எல்லாம் மறந்திரும்.

4. அவுட், லெக்பை, பை, வைட், நோ பால் எல்லாத்துக்கும் பேர மாத்தியே ஆகணும். லெக்பை பதிலா மூவ் க்ரீம் பேர் வைக்கெலாம்.

5. சிக்சர், போர், அவுட் நேரங்கள் தவிர சீயர்லீடர்ஸ் எல்லாம் சும்மாதான் உக்காந்திருக்காங்க அப்போ அவங்கள ஆடவெச்சு மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்தலாம், நமீதா கண்டிப்பா வரணும், கலைஞர் டிவிக்கு மட்டும்தான் ரைட்ஸ்.

6. இப்பல்லாம் கிரவுண்ட்ல ஆடறபோதே பிளேயர்ஸுக்கு மைக் கொடுத்திருக்காங்க. அதனால ஒவ்வொருத்தரையும் லைவ்ல பேட்டி எடுக்கறதுக்கு என்டிடிவில நல்ல காசு கொடுப்பாங்க. ஸ்டுடியோவில அஜய் ஜடேஜாவும் மந்திரா பேடியும் இருக்கணும்.

7. அம்பயர் பில்லி பவுடனின் பெட்ரூம்ல உள்ள பர்னிச்சர், சோபா செட்டெல்லாம் எப்டியிருக்குன்னு டாக்குமென்ட்ரி எடுத்து வெச்சுக்கிட்டு, அம்பயரின் படுக்கையறைக் காட்சிகள் அப்பிடின்னு ஒரு சிடி இருக்குன்னு சொன்னா சன் நியூஸ்ல 10 கோடிக்கு வாங்குவாங்க.

9. சென்னையில மேட்ச் நடக்கும்போது "கிரிக்கெட்டுக்கு வாழ்வுதந்த நேசத்தலைவனுக்கு" பாராட்டு விழான்னு சிதம்பரம் ஸ்டேடியத்தில நடத்தணும். தெண்டுல்கர், தோனியெல்லாம் கண்டிப்பா வந்திரணும். வராட்டி அழகிரி வந்து கூப்பிட வேண்டியிருக்கும். டெலிகாஸ்ட் ரைட்ஸ் மட்டும் 100 கோடிக்குப் போகும். அப்புறம் வீரர்களுக்கெல்லாம் வீட்டு மனைகள் கிடைக்கும்.

10. வீரர்களெல்லாம் ஹோட்டல்ல இருந்து கிரவுண்டு வர்றபோது திறந்த ஜீப்ல அல்லது பஸ்ல ஊர்வலம் நடத்தலாம். அவங்களப் பாக்கறதுக்கு கூட்டம் சேரும். இரண்டு பக்கமும் ப்ளெக்ஸ் போடு வெக்கறதுக்கு காசு வாங்கிடலாம்.

11. வீரர்கள் யாரும் நிர்வாகத்துக்கு தெரியாமா ஆட்டோக்ராப் போடக்கூடாது. ஒரு ஆட்டோ கிராபுக்கு ஆயிரம் ரூபான்னு ரசிகர்கள்கிட்ட வசூல். 500 வீருக்கு 500 கம்பெனிக்கு.

12. ஐபிஎல் பேர வெச்சு ப்ளாக் எழுதணும்னா லட்ச ரூபா கட்டி ப்ரான்சைஸ் வாங்கணும்னு ஒரேயடியாப் போட்டா, இந்த மாதிரி உருப்படாத யோசனை சொல்றவங்க குறைவாங்க.

..

..

2 கருத்துகள்:

  1. கிரிக்கெட் வணிகமயமானதன் விளைவாய் தரமிழந்த கிரிக்கெட்டைத்தான் பார்க்க முடிகிறது! அதனை சூப்பராக கிண்டலடித்துள்ளீர்கள்.தொடரட்டும் ...வாழ்த்துக்கள்!
    M.சரன் (http://moneybharati.blogspot.com)

    பதிலளிநீக்கு
  2. உருப்படாத யோசனையா.. இல்ல இல்ல, உங்க யோசனைல ஒன்றை இப்ப செயல்படுத்தறாங்க, மூணு பாலுக்கு ஒருமுறை விளம்பரம் வருது.

    மீதி யோசனைகளும் கூடிய சீக்கிரம் வரலாம். இப்படியே போனா ஆறு விளம்பரத்துக்கு பின் ஒரு பந்து வீசற நிலை வந்தாலும் வரும்.

    பதிலளிநீக்கு