திங்கள், 15 மார்ச், 2010

டிராவிட்தான் தோல்விக்குக் காரணம்: தோனி அதிரடி


தோனி உட்கார்ந்திருக்க, அவருக்கு முன்பு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தார் தியாகி. 304, 305... என போய்க்கொண்டிருக்க..அவருடைய கால் முட்டிகள் ரெண்டும் பூசணிக்காய்களாக மாறிக்கொண்டிருந்தன. "எப்பிடிப் போட்டாலும் அடிக்கிறாங்கப்பா" என தியாகி புலம்பிக் கொண்டிருந்தார்.




தோனியிடம் நமது கேள்விகள்....

"ஏன் ரொம்ப கோபமா இருக்கீங்க"

"உருப்படி இல்லாத ஆளுகள வெச்சிக்கிட்டு என்னங்க பண்றது?"

"யார சொல்றீங்க"

"யாருமே சரியா ஆடமாட்டேங்கிறாங்க... அப்புறம் எப்படி டீம் ஜெயிக்கும்"

"மோர்கல், கெம்ப் எல்லாம் நல்லாத்தானே ஆடினாங்க"

"அதெல்லாம் யாருக்கு வேணும். நம்ம சீயர்லீடர்ஸ் ஒழுங்க ஆட வேணாமா? நம்ம பசங்க அதாலதான் சோர்ந்து போயிட்டாங்க..."

"ஆமாமா ரொம்ப முக்கியமான விஷயம்... அது சரி ஏன் தோத்தீங்க..."

"சும்மா தோத்து பாத்தோம்... "

"........"

"இந்த மேட்ச்ல சிலர் துரோகம் பண்ணிட்டாங்க... எல்லாம் டிராவிட் சொல்லிக் கொடுத்துத்தான்..."

"டிராவிட்டா.... சும்மா விளையாடாதீங்க..."

"உங்களுக்குத் தெரியாதுங்க அவரப் பத்தி... கங்குலி கேப்டனா இருந்தபோது, அவர வீட்டுக்கு அனுப்பறதுக்காக எல்லாரையும் மோசமா விளையாட வெச்சதே நம்ம சுவருதாங்க..."

"அப்படியா..."

"ஆமா... அந்த இ-மெயில் மேட்டர் கூட அவரோட சதிதான்"

"ஆக நல்ல மேட்டர் சிக்கியிருக்கே"

"அதே மாதிரிதான் டிராவிட் கேப்டனா இருந்தபோது வேர்ல்டு கப் மேட்ச்ல நான் செஞ்சேன்..."

"சரியான பதிலடி.."

"இப்ப தியாகி மாதிரி ஆளுங்க அதே மாதிரித்தான் செய்யறாங்க.... அதான் சொல்றேன்... எங்க தோல்விக்கு சுவரத் தவிர வேற யாரு காரணமா இருக்க முடியும்?"



டிஸ்கி: இது வெறும் கற்பனைதான்.  ஓசி டிக்கெட் கிடைக்காததால் இது எழுதப்பட்டதாக நினைப்பது மிகவும் தவறான கண்ணோட்டம். படம் தற்செயலானது...
...


..

1 கருத்து: