வெள்ளி, 12 மார்ச், 2010

30 ரன்னில் 4 விக்கெட்: அதெல்லாம் டிரிக் என்கிறார் கங்குலி

"வணக்கங்க... எப்படி ஜெயிச்சீங்க..."


"எனக்குத் தெரியாதுங்க... இன்னிக்கு மேட்சில நீங்க ஜெயிக்கறதா ஏற்பாடு பண்ணிருக்கோன்னார் மோடி. அதுபடிதான் எல்லாம் நடந்தது.... நம்ம கையில என்ன இருக்குங்க..."

"முதல் ஓவர்லய அவுட் ஆனீங்களே... அசிங்கமா இல்லயா"

"இதுக்கெல்லாம் அசிங்கப்பட்டா முடியுமா பாஸ்... முதல் ஓவர்லயா அவுட் ஆகறதெல்லாம் நாங்க நேத்தே மோடியோட பேசும்போது ஏற்பாடு பண்ண ட்ரிக் பாஸ்... 4 விக்கெட் விழுந்த உடனே அவங்க ரொம்ப அசால்டா விளையாடினாங்க... அந்த நேரத்துல எங்க ஆளுங்கள எகிறி அடிக்க வெக்கனும்கறதுதான் ஏற்பாடு... மத்தபடி நானெல்லாம் கிரவுண்டல நின்னா கைய மேல தூக்கியே அம்பயரு டயர்டாயிருவாரு..."

"ஓ சூப்பர் ட்ரிக். இதுவரைக்கும் நாங்க கேள்விப் பட்டதேயில்ல"

"ரொம்ப புகழாதீங்க... கான் கோச்சுக்குவார்"

"உங்க ஆளுங்க பந்துவீசும்போது கேட்ச்ச விட்டதெல்லாம்கூட இதே ட்ரிக்தானா?"

"சரியா கண்டுபிடிச்சீங்க... மைநேம் இஸ் கான் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கித்தரேன்"

"அதெல்லாம் வேண்டாம் சார்... அதவிட தண்ணியில்லாத கிணத்துல குதிக்கலாம்.... "

"....................."

"கடைசியா ஒரு கேள்வி சார்... அடுத்த மேட்ச்ல ஏதாவது டிரிக் இருக்கா...?"

"ஜூகி சாவ்லாவ வெச்சு ஒரு ட்ரிக் இருக்கு... நீங்க பாக்கத்தான போறீங்க எதிரணி டவுசர் கிழியறத... ஆனா நான் வழக்கம்போல டக் அவுட்தான் ஆவேன்... அதுவும் ஒரு ட்ரிக்தான்.... இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது.... அங்க பாருங்க கான் வர்றாரு... ஓடுங்க ஓடுங்க..."


...

..

2 கருத்துகள்: