ஞாயிறு, 14 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு? சென்னை - டெக்கான் 1

தாதா டீம் தோற்கப் போகிறது என்று சொன்னவுடனேயே பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. பாஸ்வேர்டை ஹேக் செய்ய முயற்சிகள் நடந்தன. மோடிக்கு மிஸ்டு கால் கொடுத்து குடுகுடுப்பையை எச்சரிக்கச் சொன்னார்கள். ஆனால் அதற்கெல்லாம் அசருகிற ஆள் இல்லை இந்தக் குடுகுடுப்பை. நேர்மை தவறாது, நேரம் தவறாது மக்களுக்கு உள்ளதை உள்ளபடி உரைக்கவே இவர் அவதாரம் எடுத்திருப்பது. எத்தனை வட்டச் செயலாளர்களைச் சமாளித்திருப்போம். இந்த மிரட்டல்காரர்களைச் சமாளிக்க முடியாது. கோச்சுக்கிட்டு தென்காசிப் பக்கம் போக முடியுமா என்ன?

இன்றைக்கு சென்னையும் டெக்கான் அணியும் மோதுகின்றன. வீட்டில் செட் மேக்ஸ் டிவி வராதவர்கள் தயவு செய்து கேபிள் டிவிக்கு பணம் கட்டவும் அல்லது தமிழ் நியூஸ் சேனல்களை ஹைட் செய்யவும்.

தோற்றுப் போன அணி என்கிற பெயருடன் களமிறங்கும் கில்கிறிஸ்ட் அணி கடைசி நேரத்தில்தான் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இருந்தாலும் கில்கிறிஸ்ட் மட்டுமே சென்னைக்குப் பீதியைக் கிளப்ப முடியும். தாதாவும் கானும் செய்த தந்திரங்களுக்கு கடந்த முறை கில்கிறிஸ்ட் பலியாகிவிட்டார் என்கிற அனுதாபம் மக்கள் மத்தியிலும் தெலுங்கு ஆவிகள் மத்தியிலும் இருப்பது கூடுதல் பலம்.

தோனி பெயரில் இன்னொரு அணி களமிறங்குகிறது. அதற்குப் பெயர் சென்னை அணியாம். பெங்களூர், டெக்கான், கோல்கத்தா போன்ற அணியினருக்கு இருக்கும் உள்ளூர்ப்பற்று உங்களுக்கு இருக்கிறதா. உங்க அணியில சென்னைகாரர்களை சிபிஐ வைத்துத்தான் தேட வேண்டும். இந்த லட்சணத்தில் உங்க அணி ஜெயிக்கிறது அப்பாவித்தனமாக சென்னைக்காரர்கள் ஆதரவு தெரிவிக்கும் கொடுமையை நினைத்து எங்கு போய் முட்டிக் கொள்வது. அட்லீஸ்ட் நமீதா, ரம்பா போன்றோரை சீயர்லீடர்ஸாகவாவது சேர்த்திருக்கலாம். ஹேடன் அடிச்சாலும் நீங்க ஜெயிக்க வாய்ப்பேயில்லை.

...

..

.

2 கருத்துகள்:

  1. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு
  2. Hello Friend,  Hope everything is fine.