வியாழன், 25 மார்ச், 2010

சச்சினின் முகங்கள்


அசார் என்றால் தொழுகை என்று அர்த்தம். ரீபோக் ஷூ விளம்பரத்துக்காக, ஷூவில் அசார் என கையெழுத்திடப் போய் பெரிய சர்ச்சையில் சிக்கினார் அசார். எல்லோரும் பழமைவாதிகளாக இருக்கின்றனர் என்று கூறிய அவர், கடைசியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதே அசார், சூதாட்டப் புகாரில் சிக்கியபோது, சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால்தான் என் புகழைக் கெடுக்கிறார்கள் என்று கூசாமல் சொன்னார். அதே அசார், அதே சிறுபான்மை இனத்தைக் காரணம் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த சூதாட்டப் புகார் பற்றி சச்சினிடம் கேட்டபோது, அசாருக்கு புக்கிகளுடன் தொடர்பிருந்தது பற்றி தமக்குத் தெரியும் என ஒப்புக் கொண்டார். குற்றத்துக்குத் துணை போனதற்காக சச்சினுக்கு பெரிய தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை. குற்றத்தை மறைத்ததற்கு அணியைவிட்டு நீக்கப்படுவோம் என்ற பயம்தான் காரணமாக இருக்கக்கூடும்.

சச்சின் ஆடவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகே களத்துக்கு வந்த வினோத் காம்ப்ளி, சச்சினுக்கு முன்பே செஞ்சுரி அடித்தார். சச்சினுக்கு முன்பே இரட்டைச் சதமும் அடித்தார். சச்சினை விட மிக வேகமாகப் புகழ் உச்சியையும் எட்டினார். சச்சின் அளவுக்குத் திறமையும் இருந்தது. ஆனால், 96 உலகக் கோப்பையுடன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. ஒரே காரணம் ஆர்வத்துடன்கூடிய உழைப்பு இல்லாதுதான். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆடிய பிறகும் எந்த பயிற்சியையும் சச்சின் தவற விடமாட்டார். அது அவருடைய தனித்தன்மை.

அசாரிடமிருந்த கேப்டன் பதவி, சச்சினுக்குத் தரப்பட்டது. அதை அவரால் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. பேட்டிங் பாதிக்கப்படுவதாகச் சொன்னார். வழிநடத்தும் திறமையில்லாததுதான் அதற்குக் காரணம். மற்றதெல்லாம் சப்பைக் கட்டு.

90 ரன்களுக்குப் பிறகு சச்சின் எப்படி ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அணி எந்த நிலைமையில் இருந்தாலும் கட்டைதான் போடுவார். அது அவருடைய சுயநலம். பலர் இதை ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடந்த ஒரு போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சச்சின் அவுட் ஆனார். அந்த 12 ரன்களை எடுக்காமல் மேலும் 3 பேர் அவுட் ஆகி தோற்றுப் போனார்கள். சச்சின் மேட்ச் வின்னர் இல்லை. ஆனால், அவர் இல்லாமல் மேட்சை ஜெயிக்கவும் முடியாது.  அவர் இல்லாத இந்திய அணி, கேள்விக்குறிதான்?

இன்றைய ஐபிஎல் போட்டியை சச்சினுக்கும் தோனிக்கும் இடையேயான போட்டியாகக் கருதிப் பார்க்க வேண்டும்.
..
..
.

12 கருத்துகள்:

 1. //பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடந்த ஒரு போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சச்சின் அவுட் ஆனார். அந்த 12 ரன்களை எடுக்காமல் மேலும் 3 பேர் அவுட் ஆகி தோற்றுப் போனார்கள். //

  அந்த போட்டியில முதுகுவலியோட விளையாடினாரு சச்சின். முதுகுவலியோட 130+ ரன் ஒரு மனுசனால அடிக்க முடியும்ங்கிறப்போ மீதி இருக்குற மூணு மடையன்களால 12 ரன் எடுக்க முடியல?

  //சச்சின் மேட்ச் வின்னர் இல்லை. ஆனால், அவர் இல்லாமல் மேட்சை ஜெயிக்கவும் முடியாது. அவர் இல்லாத இந்திய அணி, கேள்விக்குறிதான்?
  //

  இது என்ன ஸ்டேட்மெண்ட்? சச்சின் மேட்ச் வின்னர் இல்லைன்னா, சச்சின் இல்லாத இந்திய அணி எதுக்கு கேள்விக்குறியாகனும்?

  சச்சின் மேட்ச் வின்னர்தான். பல சான்றுகளோட நிரூபிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே இது கசப்பான உண்மைதான்.
  ...........

  12 ரன்கள் எடுக்கணும்... நாம செஞ்சுரி அடிச்சாச்சு... 12 ரன் எடுக்கறதும் எடுக்காததும் நம்மை எந்த விதத்திலயும் பாதிக்காது....


  தெண்டுல்கர் என்னதான் சுயநலமா ஆடினாலும் அந்த ஆட்டத்தாலதான் பல நேரங்கள்ல இந்தியா ஜெயிக்குது. அணி ஜெயிக்கறதுக்கு அவர்தான் காரணம். ஆனா அணி ஜெயிக்கறதுக்காக அவர் ஆடல. எப்ப அவர் நிறைவடையறாரோ அப்ப ஒதுங்கிடுவார். அணி ஜெயிப்பது அவரது நோக்கமல்ல (பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுடனான சில போட்டிகள் தவிர்த்து). அவர் நல்லா ஆடறதால அவர் இல்லாத இந்திய அணி கேள்விக்குறிதான்.

  நான் சொல்வது தவறாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் தவறாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. //12 ரன்கள் எடுக்கணும்... நாம செஞ்சுரி அடிச்சாச்சு... 12 ரன் எடுக்கறதும் எடுக்காததும் நம்மை எந்த விதத்திலயும் பாதிக்காது....//

  சென்சுரி எடுத்ததும் அவுட்டாயிரலாம்னா எதுக்கு 130 வரைக்கும் இருக்கணும்? 100 அடிச்சதும் அவுட்டாயிட்டுப் போயிரலாமே?

  நீங்க சொல்ற விளக்கம் கேணத்தனமா இருக்கு..

  பதிலளிநீக்கு
 4. அதாவது, 100 ரன்களுக்குப் பிறகே அவுட் ஆனால் பரவாயில்லை என்கிற எண்ணம்தான். அதற்காக வேண்டுமென்றே யாராவது அவுட் ஆவார்களா?

  கேணத்தனம்? இருக்கலாம். ஆனால் நான் மேற்சொன்னபடிதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. SACHIN SUPPORTERS PLS REPLY

  IN THAT FAMOUS 12 RUNS PAKISTAN MATCH,

  SACHIN WOULD HAV WON THE MATCH,

  IF HE HAS 12 RUNS NEEDED FOR HIS CENTURY OR DOUBLE CENTURY

  IF HE NEEDS ANOTHER 12 RUNS FOR A PARTNERSHIP RECORD ,OR ANY RECORD

  HE IS A SELFISH PLAYER NO DOUBT ABT IT ,

  IN ANOTHER WORDS ,HE IS A GREAT,(SELFISH) GREATEST BATSMEN EVER

  NO ONE WILL BEAT HIS RECORDS,BZ NO ONE WILL GET CHANCE TO PLAY FOR A COUNTRY AT AGE 16 ,UNLESS HE IS A PAKISTANI,AND IF HE HAS HAPPENS TO BE A PAKISTANI HE WILL BE BANNED AFTER 10 YEARS ,DEFINETELY

  பதிலளிநீக்கு
 6. SORRY I MISSED THAT,IAM A SACHIN FAN TOO ,LOV TO WATCH HIM BAT

  MISSED MY CLASSES AND SO MANY IMPORTANT THINGS IN LIFE TO WATCH HIM BAT

  BUT I CANT DENY ,HE IS A SELFISH BATESMAN

  பதிலளிநீக்கு
 7. இல்லை
  சுயநலம் என்பது உங்கள் கற்ப்பனை

  100 ரன்னுக்கு மேல் முதுகு வலியுடன் எப்படி ஆடினார் என்பதை அந்த ஆட்டம் பார்த்தவர்களுக்கு தெரியும்
  அடுத்த நாள் அணியின் பயிற்சியாளர் ஆச்சிரியபட்டார்
  முதல் நாள் இரவு முதுகு வலியால் அவர் தூங்க முடியாமல் அவதி பட்டார்
  ஆனாலும் சிறப்பா விளையாடி ரன் சேர்த்தார்
  வெற்றி மிக அருகில் வந்ததும் அதிக முதுகு வலியால் அவதி பட்ட அவ்ர் ஆட்டத்தை விரைவில் முடித்துவிடலாம் என்ற ஆசையும் அடிக்க பார்த்தார் எதிர்பாராமல் ஆட்டம் இழந்தார்

  சமிபத்திய ஆஸ்திரேலியா போட்டியில் அவர் 175 அடித்து 18 பந்துக்கு 19 ரன் தேவை என்ற நிலையில் ஆட்டம் இழந்தார்
  ஆனால் அடுத்து ர"ஜடேஜா உள்ளிட்டவரின் முட்டாள் தனமான ஆட்டத்தால் தோற்றது
  துவக்கம் முதல் 47 ஓவர் ஒருவர் ஆடி ஆட்டமிழந்தால் சுயநலமா??

  எல்லாத்தையும் அவரே செய்யா மீதி 10 பேர் எதுக்கு??

  அது அவரை பிடிக்காத சிலரின் முட்டாள் தனமான வாதம்
  அந்த தோல்விகள் கற்றுகொடுத்த பாடத்தால் தான் சமிபகாலமாக அணியின் வெற்றி அருகில் வந்ததும் அதிக கவனதோடு அடுகிறார்(இங்கிலாந்து எதிரான டெஸ்ட்)

  பதிலளிநீக்கு
 8. ஐபிஎல் யாருக்கு
  http://priyamudan-prabu.blogspot.com/ ஓட்டு போடுங்க

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப கேனத்தனமா இருக்கு உங்க கருத்து , சச்சின் அந்த மேட்சுல சுயநலமா ஆடி இருந்தா எதுக்கு தன்னால் அணி வெற்றி பெற்று விட்டது என்ற சுயநல சாதனையை அவர் தவற விட வேண்டும்... தான் அடித்ததினால் தான் அணி வெற்றி பெற்றது என்று இருந்தால் ஒரு சுயனலவாதிக்கு எவ்வளவு பெருமை , அந்த சுயநலத்தை அவர் ஏன் விட்டு தர வேண்டும்

  பதிலளிநீக்கு
 10. your saying like its not indian team its "Sachin only". he did his part extreamly well. but in a team there is another 10 members. what about others? your saying like if team's target is 100 runs he should score century!!! its foolish

  பதிலளிநீக்கு