வியாழன், 18 மார்ச், 2010

ஐபிஎல் புலி ஜோசியம்: பச்சைத் தமிழன் தினேஷுக்கு வெற்றி!

பல வகையிலும் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளைச் சரியாகக் கணித்துக் கூறியதால், சிங்கப்பூர், பர்மா,மலேசியா, தாய்லாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் நமது புகழ் எக்கச்சக்கமாகப் பரவியிருக்கிறது. இந்தப் புகழை செவ்வாய், புதன், நிலா உள்ளிட்ட வெவ்வேறு கிரகங்களுக்கும் கொண்டு செல்வது குறித்து வலுவான உத்தியை வகுத்திருக்கிறோம். அதன்படி, வண்டலூர் பகுதியில் புலி ஜோசியம் பார்க்கப்படுவதாகத் தகவல் அறிந்து நமது கணிப்புக் கோரிக்கையை ஃபேக்ஸ் மூலம் அங்கு அனுப்பி வைத்தோம்.

இன்றைய முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐயோ பாவம், றெண்டு அணி கேப்டன்களும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார்கள். டெல்லி அணிக்கு நியாயப்படி சேவக்தான் கேப்டனாக இருக்க வேண்டும். ஆனால், கம்பீர் கேப்டனாக இருக்கிறார். இப்போது அவரும் போய்விட்டார். இப்போதாவது சேவக் கேப்டனாக வேண்டும். ஆனால் அப்படி நடக்காது என்கிறார்கள். சேவக் தனது முடிவில் உறுதியாக இருந்தால், பச்சைத் தமிழன் தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கும்.

மும்பைக்கு எதிரான போட்டியின்போது அவர்தான் கேப்டனாக இருந்தார். அப்போது அணி என்ன பாடுபட்டது என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது. மற்றபடி பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் இன்னமும் அணி ஸ்ட்ராங்தான். தில்ஷன் பட்டையைக் கெளப்புவார் என எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஹேடன்தான் துருப்புச் சீட்டு என்றார்கள். அவர் இன்னமும் தூக்கத்திலிருந்தே விழிக்கவில்லை போலத் தெரிகிறது. இந்த லட்சணத்தில் மங்கூஸ் பேட்டை எடுத்துவந்து அவுட் ஆனால், ரசிகர்கள் எகனமொகனையாகத் திட்டுவார்கள். கோல்கத்தா அணியுடன் தோற்க வேண்டிய ஆட்டத்தை ஜெயித்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. தோனி போய் ரெய்னா வந்திருப்பது சென்னைக்குப் பெரிய சோகம்.

இந்த அறிகுறிகளின்படி பார்த்தால் டெல்லி அணிதான் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என புலி ஜோசியம் சொல்கிறது. புலி சொன்னால் தப்பாது.

4 கருத்துகள்:

  1. தினேஷ் கார்த்திக் பச்சத் தமிழன்னா பத்ரிநாத் மஞ்சத் தமிழனா? :)).

    எனக்கு இந்த சென்னை - டெல்லி ரெண்டு டீமையும் பிடிக்கலைப்பா.. ஒரு ஃபிகர் கூட வந்து நின்னு கொடி காட்ட மாட்டேங்குது..

    அட்லீஸ்ட் சென்னையில நடந்தாவாவது நம்ம லட்சுமி ராய் வரும். இங்க ஒன்னியும் காணோம். இந்த ஆட்டம் நான் பாக்க மாட்டேன் போ...

    பதிலளிநீக்கு
  2. பச்சைத் தமிழன் தினேஷை மஞ்சத் தமிழன் ஹெய்டன் (ஆமா சென்னை வந்துட்டா அல்லாரும் தமிழந்தான்) அடிச்சித் துவச்சிட்டாரு போல?

    பதிலளிநீக்கு
  3. எப்படியாவது மனச தேத்திக்கிட வேண்டியதுதான்....

    பதிலளிநீக்கு