திங்கள், 22 மார்ச், 2010

ஐபிஎல் அருள்வாக்கு: மோடி அருள் ஷாருக் பக்கம்!

எச்சரிக்கை: கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி தொடர்கிறார்.

குலசாமி கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டுச் சென்ற காஜா, சேரக்கூடாத ஆள்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்விட்டான். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சூப்பர் ஓவர்வரை செல்லும் என ரூ.150 பெட் கட்டி ரூ. 1500 ஜெயித்திருக்கிறான். இதையடுத்து த்ரிஷாவுடன் டேட்டிங் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அவனது இடத்துக்கு ஆள்கேட்டு தினத்தந்தி "ஆள் தேவை" வரி விளம்பரப் பகுதியில் ரூ.50க்கு 15 வார்த்தை விளம்பரம் செய்திருந்தோம். அதைக் கண்டு கங்குலி உள்ளிட்ட பலர் மனுப் போட்டிருந்தார்கள். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இன்றைக்கு மும்பை அணியும் கோல்கத்தா அணியும் மும்பையில் மோதுகின்றன. மும்பைதான் ஜெயிக்கும் என்பது அனைவரின் கணிப்பு. ஆனால் இந்த முறை அது நடக்கப் போவதில்லை என என் மனதுக்குப் பட்டது. நமது சந்தேகத்தைக் கொண்டு பொதிகை மலையடியில் அருள்வாக்குச் சொல்லும் பேச்சியம்மாவிடம் சென்றோம். அவர்தான் நமக்குச் சில முக்கிய விஷயங்களைச் சுட்டிக் காட்டினார். மும்பை அணியில் பலருக்கு சந்திராஷ்டமம் நடப்பதும் சந்திராஷ்டமக் காலத்தில் தொட்டது கெட்டப் போகும் என்கிற முன்னோர் சொல்வழக்கும் அவர் சொல்லத்தான் நமக்குத் தெரிந்தது.

இது தவிர கடந்த ஆட்டத்தில் காலிஸிடம் சிக்கி மும்பை பந்துவீச்சாளர்கள் சின்னா பின்னமாகியிருக்கிறார்கள். அதே போல் முக்கிய பேட்ஸ்மேன்களும் கும்ளேயில் சுழலில் அரண்டுபோயிருக்கிறார்கள். பிரேவோவும், பொலார்டும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன் என்பதைத் தவிர மும்பை அணிக்கு நல்லசேதி வேறெதுவும் இல்லை.

அதே நேரத்தில் கோல்கத்தா அணியில் கெய்ல் சேர்கிறார். அவரது சிறப்பான தொடக்கம் அந்த அணிக்கு வலுச் சேர்க்கும் என்பது பேச்சியம்மா அருள்வாக்கு. கார்த்திக் பவுலிங் கலக்குகிறார். அதனால் மோடியின் அருள் இவர்கள் பக்கமே. மற்றபடி மொத்த பெட்டிங் தொகை எந்தப்பக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.

கங்குலியை மீறி நைட்ரைடர்ஸ் அணி எப்படி ஜெயிக்கப்போகிறது என்பதைக் காண மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

..
..

4 கருத்துகள்:

 1. திரும்ப கடை தொறந்துட்டாப்ல இருக்கு??

  காஜாப் பையன் இல்லாம எப்பிடி ஓடுது?

  பதிலளிநீக்கு
 2. என்ன பண்றது பொழப்பை ஓட்ட வேண்டியிருக்கே...

  பதிலளிநீக்கு
 3. மோசமான கேப்டன் போல் நான் நடத்தலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இங்க. :))

  பதிலளிநீக்கு
 4. சங்கக்கர ரெண்டு தடவை இருக்கு பாருங்க.. :)

  பதிலளிநீக்கு