வெள்ளி, 12 மார்ச், 2010

ஐபிஎல் எகத்தாளம்; உள்ளூர் கோஷ்டிக்கு வயித்தெரிச்சல்

ஐபிஎல்லின் விர்... விர்... வளர்ச்சியால் மேவாயைச் சொறிந்து ஆயாசப்பட்டவர்கள் ஐசிஎல்காரர்கள் மட்டும்தான். அதுவே வயிற்றெரிச்சலாக மாறிக் கொஞ்சகாலத்துக்கு குதித்துக் கொண்டிருந்தார்கள். இப்போ வயிறு எரிந்து வெறும் சாம்பல்தான் இருக்கிறது. ஐசிஎல்லில் இருந்து ஒருவர் பின் ஒருவராக மடார் மடார் எனக் மோடியின் காலில் வந்து விழுந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பந்து பொறுக்கிப் போடவும், தண்ணீர் கொண்டுவந்த கொடுப்பதற்கும் யூஸ் பண்ணலாம். அது பழைய கதை.

இன்று ஐபிஎல் கரகாட்டம் தொடங்க இருக்கும் நிலையில், மோடி மீது ஏற்கெனவே கடுப்பில் பவார் கோஷ்டி முறுக்கிக் கொண்டு நிற்கிறது. பவார் கோஷ்டின்னா மும்பை கிரிக்கெட் சங்கம். பல ஜாம்பவான்களை உருவாக்கினாதாச் சொல்லுவாங்களே அந்தச் சங்கம்தான். ஐபிஎல் போட்டி தொடக்க விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பலைன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. எனக்குத் தெரிந்த வரைக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை இவங்களுக்கு அனுப்பியிருக்க மாட்டாங்கன்னு தெரியுது. வாங்கடே ஸ்டேடியத்துல மேட்ச் நடந்த வரைக்கு மும்பை சங்கத்துக்கு 20 பிரசண்ட் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருந்தது. மாமன், மச்சான், மச்சினிச்சி, ரெண்டுவிட்ட கொழுந்தியாளுக்கெல்லாம் டிக்கெட் கொடுத் பந்தா பண்ணுனவங்களுக்கு இப்போ அழைப்பே இல்ல. அதான் இந்த மாப்பிள்ளை முறுக்கு.

இது போக, உயிரோட இருக்கும் டெஸ்ட் வீரர்களுக்கெல்லாம் டிக்கெட் அனுப்பனுங்கறது மரபாம். அதுவும் இப்ப காத்துல போச்சாம். பவார் காதுல அதான் புகை கிளம்பிருக்கு போல.

நம்ம வீட்டு கல்யாணத்துக்கு நமக்கே இன்விடேஷன் கேட்கலாமா பாஸ். முக்காடு போட்டுக்கு போய் கொட்டிகிட்டு வந்திடுங்க. யூடியூப் லிங்க மத்தவங்களுக்கெல்லாம் அனுப்பி லைவ்ல பாக்கச் சொல்லுங்க. அவங்க எப்பவும் இப்படித்தான பாஸ்.

..

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக