செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி!

ஹலோ மிஸ்டர் பரட்டை நான் கமலஹாசன் வந்திருக்கிறேன். ஏதோ ஹெல்ப் வேண்டுமென்று கூப்பிட்டிருந்தீர்கள் என மெயில் வந்தது... சொல்லுங்க உங்க வேலையை முடித்துவிட்டு நான் பாராட்டுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு  ஐயாவை வாழ்த்திப் பேசவேண்டும். கண்ணீர் வடிக்க வேண்டும்...ம்ம்

டேய் டேய் என்னடா மிமிக்ரி பண்ற சப்பாணிதானடா நீ... போய் எண்ணெய எடுத்திட்டு வந்து தேயிடா... ஓடு ஓடு... சீக்கிரம்.................... இதெப்படி இருக்கு?

பரட்டையண்ணே பரட்டையண்ணே எப்டீண்ணே கண்டு பிடிச்சீங்க... ஆத்தாதான் இப்படி சொல்லிக் குடுத்தது... இஸ்கூலு பசங்க மாதிரி டீசன்டா பேசினா எந்த நாயும் திட்டாதுன்னு சொல்லிச்சு... அதான் அப்பிடி பேசினேன்...

ம்... வரவர இவனுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சுடோய்... ஒழுங்கா எண்ணெய் தேய்க்கலைன்னா... ரெய்னா மாதிரி உன்னையும் தண்ணிபாட்டில் தூக்குற வேலைக்கு அனுப்பிடுவேன்....

அதத்தாம்ணே நானும் கேக்கணுன்னு இருந்தேன்... அந்த ஆளுங்கெல்லாம் பந்து எறியறதுல மக்கா இருக்காங்களாம்ணே... நேத்து வராட்டிக்கு சாணி எறியற எடத்துக்கு வந்து அதிசயமா பாத்திட்டு இருந்தாங்கண்ணே...
இங்கயும் வந்திட்டாங்களா... டேய் சப்பாணி... சாணி எறியறத மட்டும் அவங்களுக்கு சொல்லிக் குடுத்திறாதேடா... இந்த ஊருல சாணி எறியறத நாங்கதான் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கோம்னு.... நம்மளயெல்லாம் வெளிய அனுப்பிச்சிருவாங்க... அப்புறம் அவங்களைக் கேட்டுத்தான் சாணி தட்ட முடியும்...

நான் என்ன முட்டாளாண்ணே... அவங்கள ஓட வைக்கிறதுக்காக...."என் சுதந்திரம் என்பது உங்கள் சுதந்திரத்துக்குள் இல்லை. நான் ஒரு வியாபாரி.  கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீந்திக் கொண்டிருப்பவன். சாணி தட்டுவது என் ரத்தத்தில் ஊறிப்போனது. எனக்கு வேறெதுவும் தெரியாது" அப்டீன்னு மிமிக்ரி பண்ணினேன்...

நீ புத்திசாலிடா...

ஆமா பரட்ட... மயிலும் இப்படித்தான் இடியட் இடியட்னு பாராட்டும்... ஆனா அவங்க கேக்க மாட்டேங்கறாங்கண்ணே... உன்னயப் பிரதமரா ஆக்குறோம்... அனுஷ்காவ கட்டி வெக்கிறோம்... எப்படியாவது எறியறதுக்கு சொல்லிக் கொடுத்திடுன்னு கெஞ்சினாங்கண்ணே...

அட... இதப் பாருடா... ஆங்...

ஆனா... நம்ம அளவுக்கு அவங்களுக்கு திறமை பத்தாதுண்ணே... சுவத்துல எறியச் சொன்னா ஆள அடிக்கிறாங்க பரட்ட... ஏதோ போகட்டும்னு சொல்லிக் கொடுத்தேன்... நீதான் அடுத்த பிரதமர்னு சொல்லிட்டு போயிருக்காங்க... பிரதமராயிட்டா நிறைய பேருக்கு எண்ணெய் தேய்க்கலாமாண்ணே...

"அதிகமா ஆசைப்பட்ட சப்பாணியும் முறுகலா தோசைசுட்ட சம்சாரமும் உருப்பட்டதா நியூஸே இல்லே"

என்ன பரட்டையண்ணே என்னையச் சொல்லிபுட்டு நீயே மிமிக்ரி பண்ணி நக்கல் பண்ற... இரு.. இரு... ஆத்தாகிட்ட சொல்லி குதிரநாயகம் படத்தை எடுத்து டூரிங் டாக்கீஸ்ல போட்டுக் காட்றேன்...

..

.

1 கருத்து:

  1. Mr. Noipl, ithayum konjam pathivu seyungal. Last month, all IPL Teams shows negative margin in Parliment Accounts Commitee. Ithu oru maraikapatta seithi. aveargea 200 crores nastam kamichanga thirutu payaluva.

    பதிலளிநீக்கு