வியாழன், 10 பிப்ரவரி, 2011

சச்சின் செய்தது துரோகமில்லையா?

மு.கு: சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர், அவரது கிரிக்கெட் சாதனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் வேறு யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இவ்வளவு சீனியராக ஆன பிறகும் பயிற்சிகளைத் தவறவிடாத அவரது பண்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளம். இவை எதையும் நாம் விமர்சிக்கப்போவதில்லை.

கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை தெய்வமாகவும் நினைக்கும் நமது நாட்டில் நோஐபிஎல்  அதிபரின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால், ஆட்டோ காசையும், அடியாள்கள் கூலியையும் அவரிடமே வசூலிக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் பக்தகோடிகளுக்கு நமது வேண்டுகோள்.

பிசிசிஐ அணியையும் அது நாட்டுக்குச் செய்யும் சேவைகளையும் போற்றிப் புகழ்பவர்கள் நமது நாட்டில் அதிகம். ஆனால், அந்த அணியை விமர்சிப்பவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.  இந்தச் சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் மிரட்டுகின்றனர். ஏன் குறிவைத்து அடிக்கப்படுகிறோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது புதிதல்லவே.
சச்சின் பற்றி எழுதியதற்காக ஏராளமான கண்டனங்கள் வந்தன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அதன்பொருட்டு இங்கு மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.

சச்சின் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தவர்கள், ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டும் மறுக்கவேயில்லை. அதுதான் சூதாட்ட ஊழலை மறைத்தது. ஐசிசியால் அசாருதீன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. ஆனால், பிசிசிஐ அவருக்கு கௌரவம் அளிக்கிறது. இதுதான் பிசிசிஐயின் லட்சணம்.

 நாட்டுக்காகத்தான் இந்தக் கிரிக்கெட் அணி ஆடுகிறது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், மேட்ச் ஃபிக்சிங் செய்வது என்பது நமது மொழியில் கூறினால், தேசத் துரோகம்தானே. அதற்கு அரசு தண்டனை வழங்கியிருக்க வேண்டுமே. அவ்வளவு பெரிய துரோகம் செய்தவருக்கு ஓராண்டுகூட சிறைத்தண்டனை இல்லையே? ஏதோ கம்பெனி விவகாரம் போல பிரச்னை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டதே!

இப்படியொரு துரோகம் நடக்கும்போது எனக்குத் தெரியும் என்று சச்சின் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தெரிந்தே ஒரு தேசத்துரோகம் நடக்கும்போது அதைக் கண்டுகொள்ளாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவரை கடவுளாகப் போற்றுவது எந்த வகையில் நியாயம்? இதை மன்னிக்கும் அளவுக்கு நமது தோல் தடித்துவிட்டதா என்ன?

சச்சின் சிறந்த ஆட்டக்காரர் என்பதற்காக இதை மன்னித்துவிடலாம் என்றால், கொஞ்சம் கூடுதல் பெருந்தன்மையுடன் ஆ.ராசாவையும் மன்னித்துவிடலாம். அதைவிடக் கூடுதல் பெருந்தன்மை இருந்தால் கசாபைக்கூட மன்னிக்கலாம். பாவம் அவர்களும் திறமையானவர்கள்தானே!
--------------------------------------

மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் பற்றிய சர்ச்சை எழுந்த நேரத்தில் நமது கிரிக்கெட் வீரர்கள் சொன்னது கீழே தரப்பட்டிருக்கிறது. யார் மீதான புகாரும் நிரூபிக்கப்படாத நேரம் அது. சில மாதங்களுக்குப் பிறகுதான் அசார், ஜடேஜா மீது புகார் நிரூபணம் ஆனது. அதுவும் குரோனியே சொன்ன பிறகுதான். அதன் பிறகு சச்சின் உள்ளிட்ட அனைவரும் என்ன பேசினார்கள் என்பது நமக்குத் தெரியும். எல்லோரும் சேர்ந்து தங்களது கிரிக்கெட் வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்வதையே முக்கியமாக நினைத்தார்கள். ஒரு சிலரைப் பலிகடாவாக்கிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்கள்.

Manoj Prabhakar: I cannot disclose the names of team-mates or of any other person involved in offering the bribe to me for losing... because if I do so, my life will be in danger. I was given a threat to that effect by persons who offered me a bri be. I am also afraid that I will be sued or prosecuted for defamation if I disclose the names. I have no evidence to prove my statements... The prosecution or the suit will ruin me... These are the reasons why, initially, I did not speak out for three ye ars and why, now, I cannot disclose the names of the culprits.

Sachin Tendulkar: I do not believe that matches are fixed or can be fixed... Within my knowledge, no match has ever been fixed. I never got the feeling that any of my team-mates deliberately played a bad shot to get out. Speaking for myself, I... decide to take an occasional risk which works most of the times but fails occasionally. A batsman who can deliberately get out would indeed be a super technician. He will use his expertise for playing well rather than for getting out.
The statements made by Manoj Prabhakar have no foundation. He has made a specific allegation that in the India-Pakistan match which was played in Sri Lanka in the Singer Cup series in 1994, a team-mate had offered him Rs.25 lakhs to play badly. If Manoj had the courage to say this, he should have had the courage to name the player.

Mohammed Azharuddin: I do not think that any match can be fixed... It is true that I dress well. I also like to live in a good style. I have a house in Hyderabad and a flat in Bombay. My accounts are quite clear. The tax authorities are the best j udges of that.

Nayan Mongia: We earn about Rs. 40 lakhs a year officially from the BCCI. In addition, we make quite some money in other lawful ways as in advertisements. There is no need to look beyond it. The team meets very often, we are together for long hour s, we discuss our strategy but never, never, is there even a whisper of fixing a match or of betting.

Ajay Jadeja: Fixing a match requires a great amount of homogeneity which is not to be found in a pronounced manner in our team...
I believe that people bet on cricket. But a player can make far more money by playing well and winning a match than by playing badly and losing a match...
I do not think that in today's Indian team, there is any player who bets on the game. It is true that at one time, friends used to have access to the players' enclosure and sometimes they used to speak on mobile phones. Now mobiles are not allowed after we leave our hotel. No friends are now allowed in the players' enclosure, much less in the dressing room.

Sunil Gavaskar: I think that it is impossible to fix a match. In my fairly long experience... I have never known that any match was fixed. You cannot fix a match by buying over a couple of players.
Some people are firing shots in a dark room to hit someone. But there is no one in the room. So the shots only damage the room. That room is Indian cricket... Anyway, if Manoj Prabhakar had a story up his sleeve, he could have approached his captain, vice-captain, coach or team manager, which he never did. I do not believe his story.

Kapil Dev: In my entire career as a player, I was never approached by anyone for match-fixing. I guess that there is large betting on cricket, but the evil of betting can be dealt with only by the police. Today there is so much cricket that there is much betting also. Those who lose their bets are the first to blame the players for playing bad deliberately.
Fixing a match does not mean fixing all the players in the team. It is possible to approach a couple of star players and fix a match... But in my experience no match was fixed.
I am of the opinion that the Board should set up a private agency to find out the assets of players. That will give some clue whether players lay bets or agree to fix matches.

Ajit Wadekar: During my long term as a manager and even a longer term as a Test player, I never suspected that any player was involved in betting. But, as a manager, I felt that the priorities of the players were all wrong. They attended too many parties and mixed with too many outsiders just to keep their own allowances intact. Their attention is not all focussed on the game of cricket...
The episode of offer of Rs. 25 lakhs narrated by Manoj Prabhakar has no foundation in fact. I was the manager of the team at that time. But he did not tell me a word about it.

Sanjay Manjrekar: The statements made by Manoj Prabhakar are wholly untrue... It is well known that matches have been won by tail-enders oftentimes... That makes match-fixing difficult to believe.
Sandeep Patil: I have seen one of the leading players in the Indian team talking on the mobile phone right through the tour for long periods like 20 minutes from the balcony of the Lords dressing room. I wrote to the Board that players should not be allowed to take mobile phones with them once they leave the hotel. My suggestion was readily accepted. I had also complained to Mr. Jag Mohan Dalmiya that I suspected that two persons, one of them a player and the other closely connected with him, wer e leaking important information to the press. I was also unable to understand why Dr. Ali Irani was allowed to attend the team meetings on the eve of the match or at any time.

I have experienced that the press knew the composition of the team before the team was officially declared.
D.V. Subba Rao: I was the manager of the Indian team which toured West Indies from February to May 1997... My experience belies the allegation of match-fixing in Indian cricket.

Sunil Dev (manager of the Indian team on the tour of South Africa and Zimbabwe in 1996-97): Betting on cricket takes place heavily in India. It has been there for about ten years. It has assumed a large proportion since the introduction of one-day games. There is heavier betting on one-day matches because they are result-oriented. I cannot identify any particular player who bets on cricket but I am fairly certain that members of the team do lay a bet and one can only bet to lose. It is easy to ge t run out or hit a lofted shot. Coaches can detect a deliberate under-performance and so can students of the game. We may have lost some matches because some of our players laid bets to lose.

Matches can be and are fixed but they can be fixed only for losing, not for winning...
The Board cannot do anything about disproportionate assets of the players. But I have a feeling that one or two players have acquired disproportionate assets.

..
...

..

18 கருத்துகள்:

 1. என்னவென்று சொல்லுவது இந்த மதம் பிடித்த கிரிகெட் பற்றி

  பதிலளிநீக்கு
 2. கிரிக்கெட் இன்று ப‌ண‌த்திற்காக ம‌ட்டுமே ஆட‌ப்ப‌டுகிற‌து.
  என்ட‌ர்டென்மெண்ட் என்ற‌ த‌ளத்திலிருந்து, சினிமாவும், கிரிக்கெட்டும் மாறிவிட்ட‌ன.
  ஸ்டார் அந்த‌ஸ்து, த‌னிந‌ப‌ர் வ‌ழிபாடு ஆகிய‌வை இவ்விரு துறைக‌ளையும் க‌றையாக்கி விட்ட‌து எனலாம். ச‌ச்சின், தோனி, அமிதாப், ர‌ஜினி போன்றோர் அவ‌தார புருஷர்க‌ளாஆக்கப்பட்டு விட்டார்க‌ள். அத‌னால் தான் அவ‌ர்க‌ளை பூச்சிக்கொல்லி ம‌ருந்து விற்கும். கோலா க‌ம்ப‌னிக‌ள் முப்ப‌து கோடிக‌ள் கொடுத்து விள‌ம்ப‌ர‌ம் செய்து நூறு கோடி ம‌க்க‌ளை பெய்டு பைப்ப‌ர் எலிக‌ளை விட‌க்‌ கேவ‌ல‌மாய் ப‌லியாக்குகிறார்க‌ள். இவ‌ர்கள‌து ப‌ணஆசையால் ஆபத்தான‌ அற்ப பொருள்க‌ளுக்கு விளம்ப‌ர‌ம் த‌ருவ‌தால், நாட்டின் நீர்வளமும், ம‌க்க‌ளின் உட‌ல்ந‌லமும் க‌டுமையாய் பாதிக்க‌ப‌டுகிற‌து என்ப‌து இந்த‌ க‌ட‌வுள்க‌ளுக்கு தெரியாதா? நீங்க‌ள் சொல்வ‌தை வேத‌ வாக்காய் ந‌ம்பும் அப்பாவி ப‌க்த‌ர்க‌ளுக்கு வ‌ர‌ம் த‌ர‌ முடியாதுதான், சாப‌மாவ‌து த‌ராம‌ல் இருக்க‌லாம் தானே. இந்த‌ ப‌க்த‌ர்க‌ள் தன் தோள்க‌ளில் உங்க‌ளை தூக்கி, நீங்க‌ள் ஒளி வட்ட‌த்தில் வ‌த்திருக்கிறார்கள். அவர்க‌ளை உங்க‌ளின் சுய‌லாப‌த்திற்காய் அழித்து விடாதீர்க‌ள்.

  பதிலளிநீக்கு
 3. நண்பரே... உங்கள் கோபத்திற்கான காரணம் புரிகிறது.. நான் சச்சின் நல்லவர் என்று நிரூபித்து எனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை, அதேசமயம் நீங்கள் நியாயமில்லாதவர் என்று நிரூபித்து ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இருப்பினும் சில கருத்துக்கள் வைக்கவேண்டுமல்லவா.

  முதலில் கிரிக்கெட்டுக்கான (மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்கும்) பெட்டிங் உண்டு. அதை அரசின் முறையான அனுமதியோடுதான் நடத்துகின்றனர். ஆக, சூதாட்டத்திற்கு முதலில் அனுமதி கொடுப்பதே அரசுதான். பின்னர் சூதாட்டத்தில் சூதாடி விதி மீறினால் அதற்கு பணம் வாங்கிய ப்ளேயர்கள் என்ன செய்யமுடியும்... அப்படியே இருந்தாலும் சச்சினுக்கு எத்தனையோ நெருக்கடி இருந்திருக்கலாம். அதனால் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். உங்கள் கேள்வியை சச்சினை விசாரிக்கும்பொழுது கேட்காமலா போயிருப்பார்கள்?? எதையும் அவர்கள் நிலையிலிருந்து யோசிக்கலாமே??? தவிர, சச்சின் இதுவரை கள்ளத்தனமாக பணம் வாங்கியிருப்பதாக ஒரு கிசுகிசு கூட வந்ததில்லை... சமீபத்தில் ஒரு மதுபான விளம்பரத்தை அவர் மறுத்தது ஞாபகத்திற்கு வரலாம்.. நான் ஒன்றும் தூக்கி வைத்து கொண்டாடச் சொல்லவில்லை.. சச்சினை ஆடுகளத்தில் மட்டுமே பாருங்கள். ஆடுகளத்திற்கு வெளியே, சச்சின் ஒரு சிறந்த வியாபாரி! அவ்வளவே...

  பதிலளிநீக்கு
 4. @ vasan

  அருமையாகச் சொன்னீர்கள் தங்கள் கருத்துக்கள் 100% உண்மை, எனது கருத்தும் அதே.

  பதிலளிநீக்கு
 5. @ ஆதவா
  //ஆடுகளத்திற்கு வெளியே, சச்சின் ஒரு சிறந்த வியாபாரி! அவ்வளவே... // ஒப்புக் கொள்வோம்.

  //சச்சினை ஆடுகளத்தில் மட்டுமே பாருங்கள்.// என்பதைப் பார்ப்போம். சச்சின் ஒரு சிறந்த ஆட்டக் காரர், டெஸ்டுகள் என்று பார்த்தால் ஆனால் அவரது ஆட்டம் தேசத்துக்கு பிரயோஜனமாக இருந்ததில்லை, சொந்த ரெகார்டுகளுக்கும், விளம்பரங்களில் அவர் நடித்து பணம் பன்னவுமே அவரது ஆட்டத்தை பயன்படுத்தியுள்ளார், உள்ளத்தில் அணி வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணமில்லை.

  பதிலளிநீக்கு
 6. கீழே முறையே வீரரின் பெயர்-டெஸ்டுகளில் தமது அணி வெற்றி பெற்ற மேட்சுகளில் மட்டும் ஆவரேஜ்-எல்லா மேட்சுகளிலும் சேர்த்து ஆவரேஜ். [இது தோராயமான எண்கள், ஆனாலும் இதன் மூலம் சொல்ல வரும் விஷயம் மட்டும் நூறு சதம் உண்மை, இதில் ஒரு நாள் மேட்சுகளைச் சேர்க்கவில்லை].
  ஸ்டீவ் வாக் -80-க்கும் மேல் -55
  விவியன் ரிச்சர்ட்ஸ் -80-க்கும் மேல் -55
  டெண்டுல்கர்-55-55
  கவாஸ்கர் -45-55
  முதலிரண்டு பேருக்கு அணி வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. டெண்டுல்கருக்கு அணி வெற்றியடையுதோ தொல்வியடையுதோ கவலையில்லை, கவாஸ்கருக்கு அணி நாசமாப் போகட்டும் என் ரெகார்டு நல்லாயிருந்தா போதும். [மஹா மட்டமான ஆடக் காரர்].

  பதிலளிநீக்கு
 7. @jayadev das: என்ன நண்பரே வாக்குவாதத்தில் ஈடுபட ஆசையா.???
  ஏன் இப்படி செய்கிறீர்கள்.???

  சச்சின் தனக்காக ஆடுகிறார் என்று ஏற்கனவே பல பேர் சொன்ன கருத்துகளுக்கு பதில் எக்கசக்கமாக சொல்லி அலுத்து போனதை திரும்பவும் தோண்டி எடுத்து பூஜை செய்வது எதற்காக.???

  //[மஹா மட்டமான ஆடக் காரர்]//

  வன்மையாக கண்டிக்கிறேன்.. நண்பரே இப்படியெல்லாம் செய்வது நியாயமா.??? எல்லோருக்கும் பிடித்த ஒருவரை இப்படி சொல்வதா.??? வேண்டாமே.!!!

  பதிலளிநீக்கு
 8. புளியங்குடி நண்பரே.!!! வணக்கம்..
  கிரிக்கெட்டின் கடவுள் அவர் என பெருமைக்காக சொல்வது.. அதற்கென அவர வரம் கொடுக்க சொல்லு, மறைஞ்சு மேஜிக் காட்ட சொல்லுன்னு சொல்லபடாது.. (நோ நோ நோ க்ரையிங்)அவரும் மனுசர் தானே பாஸ்.. நமக்குன்னு ப்ரச்சனை வரக்கூடாதுன்னு எல்லோரும் நினைக்கிறது தானே.!!! நான் இல்லை நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படி தானே செய்திருப்போம்.. அவர் சூழ்நிலையை எப்படி இருந்திருக்குமோ.!!! அத விடுங்க பெராரி கார பத்தி போன பதிவுல நீங்க பதில் சொல்லியிருந்தீங்க.. அது துரோகம்னு ஏத்துகவே முடியாது பாஸ்.. சச்சின் உலகளவுல சாதிச்சிருக்கார்ல ராஜா அப்படி என்ன சாதிச்சார்(1.76லட்சம் கோடி சாதனைன்னு சொல்லபடாது..)

  பதிலளிநீக்கு
 9. @ தம்பி கூர்மதியன்

  அன்பரே, தங்கள் கருத்துக்கு நன்றி.
  //சச்சின் தனக்காக ஆடுகிறார் என்று ஏற்கனவே பல பேர் சொன்ன கருத்துகளுக்கு பதில் எக்கசக்கமாக சொல்லி அலுத்து போனதை திரும்பவும் தோண்டி எடுத்து பூஜை செய்வது எதற்காக.???// சச்சின் பற்றி நான் எழுதுவது முதல் தடவை, நீங்கள் சொல்லியிருப்பதை நான் படித்ததில்லை. நான் மேற்சொன்ன புள்ளி விவரம் உண்மை, எண்கள் மட்டும் குத்து மதிப்பாகப் போட்டிருக்கிறேன், அவற்றில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்.
  //எல்லோருக்கும் பிடித்த ஒருவரை இப்படி சொல்வதா.??? வேண்டாமே.!!!//
  கவாஸ்கர் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டுமென்று நினைக்க தனிப்பட்ட விரோதம் எனக்கொன்றுமில்லை. நாம் பொதுவாக ஆட்டத்தை ரசித்துப் பார்க்கிறோம், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல், காலை வாருதல், பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்தல் போன்றவற்றைக் கவனிப்பதேயில்லை. உலகின் முன்னணி பேட்ஸ்மன் தனது அணியின் வெற்றிக்காக ஆடவில்லை என்ற கவாஸ்கரைப் பற்றிய டெஸ்ட் புள்ளி விவரம் தெரிய வந்த போதுதான் அதிர்ச்சியாக இருந்தது. இதே புள்ளி விவரத்தை சச்சின் பற்றியும் கூறியுள்ளார்கள், இதை அவரே ஒப்புக் கொண்டுமிருக்கிறார். [தனது ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை, அதை மாற்ற விருபுவதாக ஒரு பேட்டியில் சச்சினே கூறியிருக்கிறார்]. சிறந்த மட்டையாளர் என்ற முறையில் பார்த்தால் கவாஸ்கர் மிகச் சிறந்த வீரர் தான். தங்களுக்கு அத்தோடு திருப்தி என்றால் அது பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கிரிக்கெட் என்பது ஒரு பந்தை மாங்கு மாங்கு என கட்டையால் அடிப்பதற்கும் மேல் என்று பார்த்தால் அவர் சிறந்த ஆட்டக் காரர் அல்ல. தன்னுடைய சொந்த ரெகார்ட் என்பதற்கும் மேல் அணியின் வெற்றி என்ற ஒன்றும் இருக்கிறது, அதைப் பற்றி கவலைப் படாத ஒருத்தரை என்னால் சிறந்த வீரராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. @jayadev Das: உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே.!!!

  //நீங்கள் சொல்லியிருப்பதை நான் படித்ததில்லை.//

  ஓ.. அப்படியா.. அதை நான் படித்தே, விளக்கியே நாட்கள் பல சென்றுவிட்டன.. அதற்காக பெரும் புள்ளிவிவரங்களை சேகரித்து பெரும் போராட்டம் பிறகு சச்சின் தனக்காக ஆடவில்லை என்பதை நிருபித்தோம்..

  //நாம் பொதுவாக ஆட்டத்தை ரசித்துப் பார்க்கிறோம், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல், காலை வாருதல், பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்தல் போன்றவற்றைக் கவனிப்பதேயில்லை.//

  நம் நாட்டில் எங்கு தான் அரசியல் இல்லை நண்பரே.!! கக்கூஸில் கூட அரசியல் இருக்கிறது..

  //தனது ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை, அதை மாற்ற விருபுவதாக ஒரு பேட்டியில் சச்சினே கூறியிருக்கிறார்//

  ஐயோ நண்பரே.!! அது தான் துவக்க ஆட்டகாரராக இருப்பதால் தன்னால் அதிக மேட்சுகளில் மேட்ச் வின்னராக இருக்கமுடிவதில்லை என்னும் ஏக்கத்தில் சொன்னது..

  //என்னால் சிறந்த வீரராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

  அருமை.. என்னால் என சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது.. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்..

  பதிலளிநீக்கு
 11. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்...
  வெற்றி என்பது ஒற்றை மனிதனை வைத்து வருவதல்ல. சச்சின் ஒத்துழைக்காததால் அணி தோற்றது என்று சொல்வது நியாயமில்லை.. ஒரு மேட்ச் தோற்றால் அது சச்சின் தான் காரணம் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது/.

  டெஸ்ட் அரங்கில் சச்சினைக் காட்டிலும் சிறப்பாக விளையாடி வருபவர் காலிஸ்தான். என்னைப் பொறுத்தவரையில் ஜெயசூர்யா, காலிஸ், கவாஸ்கர் போன்ற பலருக்குப் பின்னர்தான் சச்சினே வருகிறார். என்றாலும் தற்போது ஆடி வரும் ஃபார்மை கவனித்தீர்களா ஜயதேவ்? கடந்த இரண்டு வருடங்களின் புள்ளிப் பட்டியலைத் தருகிறேன். பிறகு, சச்சின் அணிக்காக ஆடினாரா இல்லை தனக்காக ஆடினாரா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். முன்பே குறிப்பிட்ட மாதிரி, தற்போது டெஸ்டில் இந்தியா நம்பர் ஒன்னில் இருப்பதற்கு சச்சின் மட்டுமே காரணமல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

  2008 லிருந்து 2010 வரை - 59 இன்னிங்ஸில் 12 சதம், 2 இரட்டை சதம், 11 அரை சதம் உட்பட 3326 ரன்கள், எடுத்திருக்கிறார். அதற்கு முன்பே இப்படி ஆடவேண்டியதுதானே என்று கேட்டுவிடாதீர்கள். விளையாட்டு என்றால் ஏற்ற இறக்கம் இருக்கத்தான்செய்யும். சச்சின் சொந்த சாதனைக்காக நீண்ட நேரம் களத்தில் நின்று பந்தை வீணடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?? முன்பெல்லா 90 ரன்களுக்கு மேல் சச்சினுக்கு மந்தம் ஏற்படும். அது அவருக்கு இயல்பான விஷயம்.. பதட்டமடைந்துவிடுவார். அதனால்தான் நிறையதடவை 90 - 99 ரன்களுக்குள் அவுட் ஆகிவிடுவார். ஆனால் இன்றைக்கும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 86.18 ல் இருக்கிறது... ஒருநாளில் 17000 டெஸ்டில் 14000 ரன்கள் தாண்டியபிறகும் ஆவ்ரேஜும் ஸ்ட்ரைக் ரேட்டும் குறையாத ஒரே ஆள் சச்சின் தான்.

  அணிக்காக ஆடவில்லை, சொந்த சாதனைக்காக என்றால் மற்ற வீரர்களெல்லாம் அணியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்????

  போங்கப்பா... போயி புள்ள குட்டிங்கள படிங்க வையுங்கப்பா.... கப்பித்தனமா பேசிகிட்டு......

  பதிலளிநீக்கு
 12. 4-வது வீரராக களம் இறங்க வேண்டிய சச்சின் முதல் வீரராகத்தான் இறங்குவேன் என்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக கிரெக் சாப்பல் கூறியிருக்கிறார்.

  சூதாட்ட சர்ச்சைக்கு சரியான பதில் இல்லை.

  பதிலளிநீக்கு
 13. போராட வேண்டும், தவறுகளை சுட்டி காட்ட வேண்டும் என்று நினைத்தால் கிரிகெட் மட்டுமல்ல இந்தியாவின் ஒவ்வொரு பொட்டிக்கடையில் கூட அநியாயம் நடக்கிறது. அதற்க்கவெல்லாம் நீங்கள் கூப்பாடு போடா தயாரா..
  இல்லை ஒரு டைம் பாசுக்காக என்றால் சச்சினை விட்டுவிடுங்கள். வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.
  கலைஞர் குடும்பம் போதாத..உங்கள் எழுத்து திணிக்கும் டைம் பாசிர்க்கும்

  பதிலளிநீக்கு
 14. @ஆதவா

  நான் சொல்ல வரும் விடயம் இன்னமும் உங்களைச் சேரவில்லை என்று தெரிகிறது! கவாஸ்கர், டெண்டுல்கர் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதிலும் இருவருமே மலை போல ரன்களை குவித்து வைத்திருக்கிறார்கள் என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அந்த ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவியதா என்றால் இல்லை என்பதுதான் பதில். [இது டெஸ்ட்களின் புள்ளி விவரங்களை மட்டுமே வைத்து சொல்லப் பட்டது, ஒருநாள் ஆட்டத்தைப் பற்றி அல்ல.] டெஸ்டுகளில் இந்திய அணி ஆடிய ஆட்டங்களில், வெற்றி பெற்ற மேட்சுகளில் மட்டும் இந்த வீரர்களின் ஆவரேஜ் என்ன, அவர்களின் வாழ்நாள் ஆவரேஜ் என்ன என்று பார்க்கும்போது டெண்டுல்கரின் அவரேஜ் இரண்டிலுமே ஒன்றேதான், கவாஸ்கருடையது வெற்றி பெற்ற மேட்சுகளில் வாழ்நாள் ஆவரேஜை விடக் குறைவு. இதிலிருந்து வரும் conclusion இவர்கள் மனதில் அணி வெற்றியடைய வேண்டுமென்ற நோக்கம் இல்லை [அந்த வகையில் கவாஸ்கருடையது இன்னமும் மோசம்]. அதே சமயம் ஸ்டீவ் வாவ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் ஆட்டத்தைப் பார்க்கும் போது, அவர்கள் எப்போதெல்லாம் நன்றாக ஆடினார்களோ அப்போதெல்லாம் அணி வெற்றியடைந்திருக்கிறது, வெற்றியடைந்த மேட்சுகளில் ஆவரேஜ், வாழ்நாள் ஆவரேஜை விட 20 ரன்கள் அதிகம். இது நான் தயாரித்ததல்ல கிரிக்கெட் விமர்சகர்கள், நோக்கர்கள், புல்லியிலாளர்கள் தயாரித்த கணக்கு அந்த கணக்கிலிருந்து சொல்லியுள்ள தீர்ப்பு.

  பதிலளிநீக்கு
 15. @ Jayadev Das

  இப்படியான புள்ளிவிபரங்களை கொண்டு பார்க்கும் பொழுது அப்படித் தெரியலாம்./.. சச்சின் தோற்ற மேட்சிலும் சதம் அடித்திருக்கிறார். வென்ற மேட்சிலும் அடித்திருக்கிறார். ஆகமொத்தத்தில் அவரோட ஆவ்ரேஜ் அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் சொன்ன ஸ்டீவ் வாக் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் அணி வெல்வதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. அவர்களும் ஒரு காரணம் அவ்வளவே... இந்திய அணி சமீப இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறப்பான டெஸ்ட் அணி கிடையாது. (இப்பொழுதும் கூட தப்பித்தவறி ஒன்றாம் இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன்) சச்சினை நீங்கள் ஏன் மையப்படுத்தி சொல்லவேண்டும்? மற்ற வீரர்களின் திறமையை நீங்கள் ஏன் சொல்லக் கூடாது???

  சொந்த சாதனைக்காக ஆடுகிறார் என்றால் இந்நேரம் அதிக ரன்கள், அதிக சதங்கள் என்று எல்லா சாதனைகளையும் “அதிகம்” செய்திருக்கலாமே... சச்சின் ஒவ்வொரு சாதனைகளும் செய்துவருவதுதான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா?
  இவ்வளவு பேசுகிற நீங்கள் சச்சினை ஏன் கேப்டன் பதவியிலிருந்து தூக்கினார்கள் என்று நினைத்தீர்களா??? சச்சின் கேப்டனாக இருந்திருந்தால் இந்நேரம் அணியின் ரேங்கிங் ஐந்துக்கும் மேலே இருந்திருக்கும். இன்றும் தான் கேப்டனாக இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் ரிக்கி பாண்டிங் மத்தியில் சச்சின் ரொம்ப தேவலை!!!

  பதிலளிநீக்கு
 16. ///இதிலிருந்து வரும் conclusion இவர்கள் மனதில் அணி வெற்றியடைய வேண்டுமென்ற நோக்கம் இல்லை///

  இதை எப்படி நீங்கள் முடிவு செய்வீர்கள்?? எனக்கொரு உதவி செய்யுங்கள்... வென்ற மேட்சுகளில் அதிக ஆவ்ரேஜ் உள்ளவரின் பட்டியலைத் தரமுடியுமா??? மொத்தம் எத்தனை பேரின் ஆவ்ரெஜ் அதிகம் இருக்கிறது என்று நான் தெரிந்து கொள்ளவேண்டும்!!!

  பதிலளிநீக்கு
 17. @ Jayadev Das

  இந்த இரண்டு இணைப்புகளை கொஞ்சம் பாருங்கள் ஜெயதேவ்..

  தோற்ற மேட்சுகளில் அவரவர் அடித்த ரன்களும் ஆவ்ரேஜுகளும்... இதில் சச்சின் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்?? அவருக்குப் பின்னே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கவனியுங்க்ள்..

  பிகு : 1000 ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டது.

  http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;orderby=batting_average;qualmin1=1000;qualval1=runs;result=1;template=results;type=batting

  http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;orderby=batting_average;qualmin1=1000;qualval1=runs;result=2;template=results;type=batting

  பதிலளிநீக்கு
 18. @ ஆதவா ...

  நீங்கள் சொன்ன தளங்களைப் பார்த்தேன். வெற்றி பெற்ற மேட்சுகளில் ஆவரேஜ் என்னவென்று பார்த்தேன், அப்புறம்தோற்ற மேட்சுகள் என்பதை விட வாழ் நாள் ஆவரேஜ் என்னவென்று பார்த்தேன்:
  Name-No.of Matches-Avg-No.of Total matches-Total Avg
  விவியன் ரிச்சர்ட்ஸ்- 63 - 52.43 -121 - 50.23
  ஸ்டீவ் வாவ்- 86-69.46- 168-51.23
  கவாஸ்கர்-23-43.97-125-51.12
  டெண்டுல்கர்- 61-67.56 - 177-56.94
  இன்சமாம்-49-78.16-120-49.6

  நான் முன்பு சொன்ன விடயங்களை தினமணிக்கதிரில் கொஞ்ச நாளைக்கு முன்பு பார்த்தது. ஸ்டீவ் வாவ் வெற்றி பெற்ற மேசுகளில் அவரேஜ் 20 ரன்கள் அதிகம். [இன்சமாமும் சூப்பர்]. கவாஸ்கருடையது பரிதாபம். விவியன் ரிச்சர்ட்ஸ் அந்த சமயத்தில் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார், அதற்க்கப்புறம் மாற வாய்ப்பில்லை, தினமணி தகவல் தவறா? தெரியவில்லை. மொத்தத்தில் டெண்டுல்கர் ரெக்கார்ட்ஸ் பற்றி நான் சொன்னது, எண்ணியது தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு