செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்லாந்து!

முன்குறிப்பு: எப்போதும் நெகடிவ் மனநிலையுடன் எழுதுவதாகக் குற்றம்சாட்டுவோருக்காக ஒரு பாசிட்டிவ் பார்வை.
உலகக் கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என்று கங்குலியிடம் கேட்ட நிருபருக்கு என்ன கொழுப்பு இருக்க வேண்டும்? மனுஷன் நொந்துபோய் இருக்கும் நேரத்தில் இதெல்லாம் கேட்டால் அவருக்கு கோபம் வரும் அதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதானே இப்படிக் கேட்கத் துணிந்தீர்கள். ஆனால் புண்களால் பண்பட்டிருக்கும் கங்குலி என்ன சொன்னார்? இந்த மாதிரி ஆதரவு ஊகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாரா இல்லையா? அவரு எங்க ஆள். அவருக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எந்த அணியாவது ஜெயிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ இல்லையோ, தோனி அணி தோற்க வேண்டும் என்று அவர் நிச்சயம் விரும்புவார். அந்த வகையில் அவரும் ஐபிஎல் அதிபரின் கட்சித்தான். பின்ன... என்.....ன.... அடி... கொஞ்ச நஞ்சமா?

ஆனால் அவருக்கு ஒரு கசப்பான சேதி கிடைத்திருக்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் டிராவிட் அணியின் கதையை முடித்து வைத்தது வங்கதேசம்தான். இந்த முறையும் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானுடன் அந்த அணி ஆடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், இது நடக்காது போலத் தெரிகிறது. அதுவும் 19-ம் தேதி தோனியை அணியை எதிர்த்து ஆட வேண்டிய அதே மைதானத்தில் நடந்த பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானிடம் வங்கதேசம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது. சேஷாத்தும், மிஸ்பாவும் பின்னியெடுத்துவிட்டார்கள். அதனால், இந்த முறை அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இருந்தாலும் டாக்கா மைதானத்தில் வங்கதேச அணி துடிப்பாய் ஆடினால் நல்லது. நெதர்லாந்து, அயர்லாந்து, வங்கதேசத்துக்கு நமது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.
..
.

3 கருத்துகள்: