சனி, 1 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 49: பாகிஸ்தானுக்குத் துரோகம்

1992 உலகக் கோப்பை மியான்தத் - கிரன்மோரே
பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்பார்கள். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பார்கள். நாட்டு நடப்பைப் பார்க்கும்போது அது உண்மை என்பது தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் ஏமாளி, அப்பாவி முகத்தையும் நாம் பார்க்க வேண்டும். 

அதிபரும், பிரதமரும், நாடாளுமன்றமும் இருக்கும் ஒரு நாட்டில் இன்னொரு நாடு உளவு வேலை செய்தால் சம்பந்தப்பட்ட நாடு என்ன செய்ய வேண்டும்? உளவாளியைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட நாட்டைக் கூப்பிட்டு "ஜாக்கிரதையாக இரு" எனக் கண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் எதிர்ப்பாவது தெரிவிக்க வேண்டும் இல்லையா? 


ஆனால் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளை ஏவுகணை வீசி அழித்துக் கொண்டிருப்பது அமெரிக்க உளவுத்துறை. அந்த உளவு வேலைக்கு காவல் வேலை பார்ப்பது பாகிஸ்தான் அரசு. எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. சொந்த நாட்டில் சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வோருக்கு இந்த நாடு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் பாகிஸ்தானின் லட்சணம். இந்த நாட்டை பயங்கரவாத நாடு என்று சொல்லி நமது கோபத்தைக் காட்டுவதைவிட, கொஞ்சம் கரிசனப் பார்வை பார்த்தால் அது ஒரு கிறுக்குத்தனமான நாடு என்பது புரியும்.அந்த நாட்டுக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இந்த ஏமாளி, அப்பாவிப் பட்டங்கள் அப்படியே பொருந்தும். 2009 மார்ச்சில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வந்த பஸ்ஸை நோக்கி  பயங்கரவாதிகள் சுட்டு ஐந்தாறு பாதுகாப்பு போலீஸாரைக் கொன்றனர். இலங்கை வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். அன்றிலிருந்து இந்தப் பயங்கரவாத முத்திரை கிரிக்கெட்டுக்கும் குத்தப்பட்டது. ஆஸ்திரேலியா முதல் வங்கதேசம், ஜிம்பாப்வே வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு நாடு வந்து ஆடும் என்ற எதிர்பார்ப்பில்  இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடந்ததால், அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தையும் இந்தியா பறித்துக் கொண்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை கெஞ்சிய பிறகும் "இதுதான் முடிவு, முடிந்ததைப் பார்த்துக்கொள்" என்ற ரீதியில் தன்னிச்சையான முடிவுகளை ஐசிசி மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்தது. இதை நம்பிக் கடன் வாங்கி விட்டோம், நாட்டின் பெயர் கெட்டுப் போகும், வேண்டுமென்றால் துபை போன்ற வேறெங்காவது பாகிஸ்தான் பேனரில் போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கதறிப் பார்த்தது. ஆனால், இந்தியா அந்த வாரியத்தை ஒரு "செத்த எலியைப்" போலத்தான் பாவித்தது.

அடுத்து ஐபிஎல். மும்பை பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்கக்கூடாது என இந்தியா என்ற முகத்திரையை அணிந்து கொண்டு பிசிசிஐ அழுகுணி ஆட்டம் ஆடியது. அதையும் அந்த கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது.  இப்போது சூதாட்ட சர்ச்சைக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ற ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. யார் யாரெல்லாம் அணியில் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் தடைக் காலத்தில் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. இப்படி எல்லா வகையிலும் ஒரு கிரிக்கெட் அணி நொந்து போனபோது, இந்தியக் கிரிக்கெட் வாரியம் எந்த வகையிலும் ஆதரவுக் கரம் நீட்டவில்லை என்பதுடன் போதிய அளவு தொந்தரவுதான் கொடுத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் எப்படிப் போனாலும் பிசிசிஐக்குக் கவலையில்லை. எப்போதாவது அந்த நாட்டு அணியுடன் ஆடினால், ஏதோ எதிரியுடன் போர் நடப்பதைப் போல இந்தியர்கள் எல்லாம் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.  அப்போது சச்சினும், தோனியும் பல்லிளிக்கும் விளம்பரங்களுக்கான வருவாய் கொட்டும். அது மட்டும்தான் பிசிசிஐக்கு வேண்டும். அதைக் கொண்டுதானே மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை மிரட்ட முடியும்.

.

4 கருத்துகள்:

 1. //யார் யாரெல்லாம் அணியில் இருக்கிறார்கள்? யார் யாரெல்லாம் தடைக் காலத்தில் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை//

  ??

  பதிலளிநீக்கு
 2. People who feel sorry for Pakistan or Pakistan cricket board will end up with their foot in their mouth eventually. Even after all the bans and no matches being played in Pakistan, neither the board nor the players have not gotten poor, in fact the players have made more money by losing the matches rather than winning them. Pakistan's last promising wicketkeeper ran for his life from middle-east and the icing on the cake is Miandad's son is married to Dawood's daughter. The author of this blog will expect us to welcome Dawood's son-in-low to India to play cricket because he is a poor pakistani cricketer's son neglected by India.

  பதிலளிநீக்கு
 3. Nee India Patri ennada theriyum.. Poda un vaya mudikkuttu..

  பதிலளிநீக்கு