செவ்வாய், 1 மார்ச், 2011

மேட்ச் ஃபிக்சிங் செய்ததா தோனி அணி?

எப்படி பறந்து பறந்து அடிக்கிறாரு... நம்மால முடியுமா?
மேட்ச் ஃபிக்சிங் என்பது சூதாட்டத்துடன் தொடர்புடையது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் குழு தொடங்கப்பட்டபோதே இது வெறும் நாடகம் என்பதைக் கூறுவதற்காகத்தான் கைக்காசை செலவு செலவு நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.  ஏனென்றால் ஐபிஎல் என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரே நோக்கத்துக்காக செயல்படுகிற, மூடிய அமைப்பு. விளையாடுவது அரசாங்கங்கள் அல்ல. அரசாங்கங்களே ரகசிய உடன்பாடுகளைச் செய்துகொண்டு காய் நகர்த்தும் காலம்தான் இது. என்றாலும் இந்த ரகசிய உடன்பாடுகளை மூடிய அமைப்பில் மிக எளிதாகச் செய்து  கொள்ள முடியும்.

சினிமாவில் ரசிர்களைக் கவருவதற்காக, இந்த இடத்தில் பாட்டு, இந்த இடத்தில் பைட்டு வைக்க வேண்டும் என்று டைரக்டர் திட்டமிடுகிறார். இசை, நடனம், கதை முடிச்சுகள், பின்னணி என பார்ப்பவர்களைக் கட்டிப் போடுவதற்கான அனைத்து அம்சங்களுக்காகவும் சினிமாகக்காரர்கள் மெனக்கெடுவார்கள். இதெல்லாம் வெளிப்படையானவை. ஹீரோ குண்டடி பட்டு இறந்தால், அவர் நிஜமாவே இறப்பதில்லை என்னும் பிரக்ஞை நமக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

ஐபிஎல் போன்ற கிளப் ஆட்டங்களுக்கும் இந்த சுவாரஸ்யம் மிக முக்கியம். எல்லாப் போட்டிகளும் பரபரப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் திருப்தியடைவார்கள். என் ஊர் ஜெயித்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைவார்கள். போட்டிகள் சுவாரஸ்யமற்று இருந்தால், சம்பந்தப்பட்ட அணிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக லீக்குக்கே சிக்கல் ஏற்படும். ரசிகர்கள் சலிப்படைவார்கள். சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் உள்பட என்னவெல்லாமோ செய்பவர்கள், அணிகள் சொதப்புவதை விரும்புவார்களா என்ன?

அதற்காகத்தான் ரகசிய உடன்பாடுகள் செய்யப்படுகின்றன. முதலாளிகள் பேசிக்கொள்கிறார்கள். போட்டி எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஸ்கிரிப்ட் எழுதப்படுகிறது. வீரர்களுக்கு ஒத்திகை நடத்தப்படுகிறது. கன கச்சிதமாக மைதானத்தில் நாடகம் அரங்கேறுகிறது. பெர்பார்மன்ஸ் சூப்பர் என்றபடி ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் செய்வாரே, அந்த மாதிரியான பெர்பார்மன்ஸ் என்பது ரசிகர்களுக்குப் புரிவதில்லை.

இந்த உலகக் கோப்பை போட்டியிலும், தொடக்கத்திலிருந்தே சுவாரஸ்யம் மிஸ்ஸிங். பரபரப்பே இல்லாமல் போட்டி போய்க்கொண்டிருந்தது. இப்படியே போனால், கத்துக்குட்டி அணிகளை விலக்கிவிட்டு 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் போட்டியைத்தான் நடத்த வேண்டியிருக்கும் என்றுகூட ஐசிசி யோசிக்கத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில்தான், இலங்கை - பாகிஸ்தான், தோனி அணி - இங்கிலாந்து இடையேயான போட்டிகள் நடந்தன. இதில் ரகசிய உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் மஹில ஜெயவர்த்தனவும், சமரவீரவும் 1,2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்குதான் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொழும்பு சூதாட்டக்காரர் ஒருவர், பல லட்ச ரூபாய்க்கு பெட் கட்டியிருந்ததாகவும், அதன்படியே சமரவீரவும், ஜெயவர்த்தனவும் ஆடியதாகவும் கூறப்படுகிறது. இதனை ஐசிசி விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

இதே சர்ச்சை இங்கிலாந்து அணியுடன் தோனி அணி மோதிய ஆட்டத்திலும் எழுந்திருக்கிறது. சூதாட்டத் தரகர்களுக்கு மிகமிகச் சாதகமான ஆட்டம் இது. ஸ்டிராஸின் சேசிங் ஆட்டத்தைப் பார்த்த எவரும் அந்த அணி தோற்கும் என்ற கூறியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கச்சிதமான, பொறுப்பான ஆட்டமாகத் தெரிந்தது. ஆனால், அவர் 43-வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே எடுத்ததும் ஜாகீர்கானின் பந்துவீச்சுக்கு 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கிச் சென்றது. இதன்பிறகு கடைசி இரு ஓவரில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு தெரிந்தது. அதுவும் கடைசி ஓவர் சிக்சருக்குப் பிறகு அந்த அணி வெற்றிபெற்றுவிடும் என்றே அனைவரும் கருதினர். கடைசி பந்துவரை கொண்டு செல்லப்பட்ட ஆட்டம், இறுதியில் டையில் முடிந்தது.

கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடத்தப்படும்போது, லைவ் ஃபிக்சிங், லைவ் பெட்டிங் நடத்தப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் பணம் கட்டினால், 4 மடங்கு பணம் கிடைக்கும், ஒரு மணிநேரத்தில் பணம் கட்டினால் 2 மடங்கு பணம் கிடைக்கும் என்பது போல. ஆட்டத்தின் போக்குக்கேற்பவும் இந்த மடங்குகள் அதிகமாகும். அதாவது, இங்கிலாந்து தோற்கும் நிலையில் இருக்கும்போது, ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டி ரிஸ்க் எடுப்பவர்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். இந்த லைவ் பெட்டிங்தான் இங்கிலாந்து - தோனி அணி இடையிலான ஆட்டத்தில் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆட்டத்தின் தேவையற்ற, நாடகத்தனமான பல திருப்பங்களைப் பார்க்கும்போது நமக்கும் அதே சந்தேகம் வருகிறது. சூதாட்டம் நடந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், மேட்ச் பிக்சிங் நடந்ததா, அதில் இந்திய அணி என்று கூறிக் கொள்ளும் குழுவில் உள்ள எவருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.  2000-ம் ஆண்டில் முக்கியத் தலைகளை விட்டுவிட்டது போல, இந்த முறை யாரையும் தப்ப விட்டுவிடக்கூடாது, அது அவராக இருந்தாலும் சரி, இவராக இருந்தாலும் சரி.

பி.கு.: இந்தக் கட்டுரையின் தலைப்பில் கேள்விக்குறி இடாமல் எழுத வேண்டும், மேட்ச் ஃபிக்சிங் நடந்தது உண்மைதான் என்று எழுத வேண்டும் என்பதுதான் நோஐபிஎல் அதிபரின் ஆசை. ஆனால்,  ஏற்கெனவே இப்படிக் கூறிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது மஹில ஜெயவர்த்தன மான நஷ்டஈடு வழக்குத் தொடர்ந்திருப்பதால், எந்த ரிஸ்க்கும் இப்போதைக்கு வேண்டாம் என்று நோஐபிஎல் அதிபர் முடிவு செய்திருக்கிறார்.
..
..

7 கருத்துகள்:

 1. // எந்த ரிஸ்க்கும் இப்போதைக்கு வேண்டாம் என்று நோஐபிஎல் அதிபர் முடிவு செய்திருக்கிறார்.
  ..

  விவராமா இருக்கீங்களே

  விருது கொடுத்துருக்கோம் வாங்க

  நாமே ராஜா, நமக்கே விருது-4

  http://speedsays.blogspot.com/2011/03/4.html

  பதிலளிநீக்கு
 2. அலசி ஆராய்ந்து இருக்கீங்க ..அதுவும் இங்கிலாந்து அணி கடைசி பந்தில் அடித்து விட்டு இரண்டாவது ஓட்டம் ஓட எத்தனிக்க கூட இல்லை .... !!!

  இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

  பதிலளிநீக்கு
 3. niceஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் திலன் சமரவீரா ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் டிவி செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


  Read more: http://karurkirukkan.blogspot.com/2011/03/blog-post_02.html#ixzz1FR2E1Qnm

  பதிலளிநீக்கு
 4. இந்த மாதிரி நடக்க அணியில் உள்ள அத்தனை பெரும் ஒத்துழைத்தால் முடியும், அவ்வாறு இருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் IPL மூலம் கொளுத்த காசு பார்க்கும் இவர்களுக்கு சூதாட்டம் மோளம் வரும் பணம் ஜுஜுபி. நன்றாக ஆட வேண்டுமென்றே ஒவ்வொரும் முயல்வார்கள், இல்லாவிடில் அணியில் இடம் போச்சு, IPL பணம் போச்சு, அம்போ தான்.

  பதிலளிநீக்கு
 5. ஆனால், சூதாட்டத்துடன் தொடர்பில்லாத மேட்ச் பிக்சிங் நடக்க வாய்ப்பிருக்கிறதுதானே...

  பதிலளிநீக்கு
 6. yes, i read somewhere that Shane Warne twitted about this "match tie" even before the match starts. KALI KAALAM

  பதிலளிநீக்கு
 7. அப்படியே நேர்ல பார்த்த மாதிரி அடிச்சு தள்ளுறீங்க?

  Senseless post!

  பதிலளிநீக்கு