
இன்றைய போட்டியை வைத்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடைபெறுகிறது என்று பெரிய பெரிய ஊடகங்களே தெரிவித்திருக்கின்றன. இது ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றுகட கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய சூதாட்டப் பணம் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பயன்படுத்தப் படாது என்று நாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சரி அது வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வநாசம் செய்தது பிசிசிஐ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எங்களைப் பிச்சைக்காரர்களைப் போல நடத்தாதீர்கள் என்று இஜாஸ் பட் கதறியதைக் கூட நாம் அறிவோம். ஐசிஎல் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்காக பாகிஸ்தான் வீரரை, இங்கிலாந்தின் சுழற்பந்து பயிற்சியாளராகக் கூட இந்தியாவுக்கு வரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டி பாதிக்கும் என்பதால், இலங்கையும் - இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது பிசிசிஐ. இலங்கை அணி பாகிஸ்தானில் தாக்கப்பட்ட பிறகு, வங்கதேசம் பாகிஸ்தானுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தபோதும், அதைக் கெடுத்தது பிசிசிஐ. இன்னும் பாகிஸ்தான் எந்த வகையிலெல்லாம் பிசிசிஐயால் இழிவுபடுத்தப்பட்டது என்பதை அனைவரும் தயவு செய்து அனைவரும் தேடி படிக்கவும்.
இந்திய வெளியுறவுத் துறை, உள்துறை ஆகியவற்றின் பேச்சைக்கூட பிசிசிஐ கேட்டதில்லை. தேர்தல் காரணமாக இரண்டாவது ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று உள்துறை மன்னர் சிதம்பரம் கேட்டுக் கொண்ட பிறகும் கூட வம்படியாக இருந்தது. பலவகையிலும் கண்டிப்புடன் கூறிய பிறகுதான் அந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், யார் தேர்தலையும் இனப்படுகொலையையும் கவனித்தார்கள்?
இப்படி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த எதேச்சதிகாரப் போக்குக் கொண்ட பிசிசிஐ அணிதான் ஜெயிக்க வேண்டுமா? உண்மையான சண்டை எங்கோ நடந்துகொண்டிருக்கையில், அந்தப் பகைமையைக் காசாக்க நினைப்பவர்கள் இவர்கள். உண்மையிலேயே கிரிக்கெட்டை விரும்புவோர்கூட இந்த "போலி அணி" ஜெயிப்பதை விரும்பமாட்டார்கள். மேட்ச் பிக்சிங் மூலமாகக் கூட.
...
poda koyya!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குme too support your views
பதிலளிநீக்குyena solla varenga?///???????????????
பதிலளிநீக்குmm. aravekkaattu thanamaa ennamo kirukiringa..
பதிலளிநீக்குkiruthuthanamaa irukku..
seriyana rendunkettaan intha blogger.
neenga pakistan karara?
பதிலளிநீக்கு