புதன், 17 மார்ச், 2010

ஐபிஎல்: உள்ளே வெளியே


மும்பைதான் வெற்றிபெறும் என்று கணித்துக் கூறிய பென்டகன் புகழ் வாஸ்து நிபுணருக்கு தொலைபேசி, இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக பாராட்டுச் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. இந்தப் பாராட்டுச் செய்திகளை பிரிட்டனின் டவுனிங் தெருவுக்கு பார்வார்ட் செய்திருக்கிறார் அந்த மாமேதை. இதன் மூலம் கார்டன் பிரௌனிடமிருந்து அவருக்கு அடுத்த அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் போட்டிகளில் பலருக்கு வாஸ்து சரியில்லை போலிருக்கிறது. ஆமதாபாத்தில் டேர் டெவில்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சேவக் அடித்த பந்தைப் பிடிக்கப்போய் ஸ்மித்தின் விரல் ஒடிந்துவிட்டது. இந்த ஆண்டு இனி வரும் போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம்.

அதேபோல் கோல்கத்தா அணியுடனான போட்டியில் பாண்ட் வீசிய பந்து தோனியின் வலது முழங்கையைப் பதம் பார்த்தது. ஒருகையைப் பயன்படுத்தி அவர் தொடர்ந்து ஆடினாலும், 10 நாள் வீட்டிலிருக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. தம்பி ரெய்னாவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால் தமிழன் என்ற முறையில் பாலாஜி, அஸ்வின், பத்ரிநாத் போன்றவர்களில் யாருக்கேனும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் சொன்னால் அவர்களுக்கெல்லாம் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் போதவில்லை என்கிறார்கள். அப்படியெனில் இலங்கைத் தமிழன் என்ற முறையில் முரளிதரனையாவது கேப்டனாக்கியிருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. சென்னை அணியில் தமிழினம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய போட்டியில் கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக முதல் ஓவரிலேயே கௌதம் கம்பீர் வெளியேறிவிட்டார். அவர் இல்லாமல் 9 விக்கெட்டுகளைக் கொண்டே நேற்று டெல்லி அணி ஆடியது. டெல்லி அணிக்கு தினேஷ் கார்த்திக் என்ற பச்சைத் தமிழன் கேப்டனாக இருந்தார். உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமே சேர்த்த அவருக்கு நமது பாராட்டுக்கள். கேப்டன் பதவி கிடைத்ததாலோ என்னவோ, கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் என எல்லாவற்றையும் அவர் கோட்டை விட்டார். வரும் போட்டிகளிலும் கம்பீர் ஆடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர்வேதேசப் போட்டிகள் முடிந்துவிட்டதால் பொலார்டும் பிரேவோவும் ஏற்கெனவே மும்பை அணியின் இணைந்து முதல் போட்டியில் ஆடிவிட்டார்கள்.

அதேபோல கோல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கெயில் 20-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் காயத்திலிருந்து குணமடைந்திருப்பதால், கிங்ஸ் லெவன் அணியின் அடுத்த போட்டியில் அவர் ஆடக்கூடும்.


இன்றைய நிலவரம்

உள்ளே

பிரேவோ - மும்பை இந்தியன்ஸ
பொலார்டு - மும்பை இந்தியன்ஸ
கெயில் - நைட் ரைடர்ஸ்
ஷான் மார்ஷ் -  கிங்ஸ் லெவன்


வெளியே


தோனி  -சென்னை சூப்பர் கிங்ஸ்
ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்
கம்பீர் - டேர் டெவில்ஸ்



சொதப்பல் ஆட்டம் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியில் இதில் சேர்க்கப்படவில்லை. கோல்கத்தா அணியில் அப்படியொருவர் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

...

..

6 கருத்துகள்:

  1. hello sir, stop teasing dada... you will wonder when he unleashes his true power...

    பதிலளிநீக்கு
  2. சிங்கத்த சீண்டினாலாவது சீறுமான்னு பார்க்கத்தான்... மத்தபடி அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட வாய்க்காத் தகராறு எதுவுமில்ல...

    பதிலளிநீக்கு
  3. சிங்கம் அசிங்கமாயிருச்சி.. இனிமே பேசாம கமெண்ட்ரி குடுக்கப் போக வேண்டியதுதான்.


    ரெய்னாவை கேப்டன் ஆக்குனது எனக்கும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. அட்லீஸ்ட் ஹெய்டனக் கூட கேப்டனாக்கி இருக்கலாம். என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  4. பாஸூ, இன்னொரு முக்கியமான விசயத்தை கவனிச்சீங்களா??

    எவனோ புரளியக் கிளப்பி விட்டுட்டான் போல, சென்னை டீமத் தவிர மத்த எல்லா டீமும் ப்ளூ கலர்ல இருக்காய்ங்க..

    பதிலளிநீக்கு
  5. எல்லாரும் ப்ளூவா... இது புசுசால்ல இருக்கு...

    பதிலளிநீக்கு
  6. Thalaivar Ganguly always SINGAM ...

    Dada adichudhaan Jeykkanumnu avasiyam illa.. Dada captain aa irundhaale podhum..

    Dada voda captaincy a paakave kodi kangal thevai...

    பதிலளிநீக்கு