கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் 196 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தார். வெளியேயிருந்த தற்காலிக கேப்டன் திராவிட், இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். கடுங் கோபம் அடைந்த தெண்டுல்கர், டிரஸ்ஸிங் ரூமில் திராவிட்டுடன் சண்டையிட்டது நல்ல நகைச்சுவையாக இருந்தது. அதன் பிறகு இன்று வரைக்கும் திராவிட்டுக்கும் தெண்டுல்கருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தெண்டுல்கர் மிக நல்லவர். அணியின் வெற்றியே கருமமென ஆடுபவர். வேறென்ன சொல்ல, திராவிட் கேப்டனாக இருந்த காலத்தில் அவரை முடிந்தவரை சச்சின் இம்சித்தார் என்று கூறினால் பக்தகோடிகள் நம்பவா போகிறார்கள்?
சரி கதைக்கு வாங்க. நம்ம ரியல் சூப்பர் ஸ்டார் ப்ரீமியர் லீக் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ரிஷிகேஷுக்கு சேட்டிலைட் போன் வழியாகப் பேசினோம்.
கேள்வி: நொந்திரன் படப்பிடிப்பில இருக்கறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, நீங்க இங்க என்ன பண்றீங்க?
எட்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு எறும்பா பிறந்திருந்தேன். அந்த எறும்போட ஜீவ சமாதியத் தேடித்தான் இங்கு வந்திருக்கேன். எல்லாம் மாயா.
உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் இப்படி பேசுறீங்க?
பிரச்னை எனக்கில்ல. அவங்களுக்குத்தான். அந்தப் பிரச்னை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்.
நொந்திரன் படத்தோட கதை என்ன?
அத வெளியே சொல்லக்கூடாதுங்கறது டைரக்டர் உத்தரவு. இருந்தாலும் உங்களுக்குச் சொல்றேன் வேறு யாருக்கும் சொல்லீறாதீங்க. ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டிக்கிட்டிருந்தா. அப்ப ஒரு காக்கா வந்து வடையத் தூக்கிட்டு போயிருச்சு.....
சார் மீதிக் கதைய சொல்ல வேண்டாம். த்ரில் போயிடப்போகுது. நாங்க தியேட்டர்லேயே பாத்துக்கறோம். ஆமா காக்காவா நீங்கதானே நடிக்கிறீங்க?
எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க. சரிதான். பாட்டி வேஷத்தில ராய் நடிக்கிறாங்க.
அத விடுங்க சார். இன்னிக்கு ஐபிஎல் மேட்ச்சில டெக்கான் ஜெயிக்குமா? மும்பை ஜெயிக்குமா?
ஜெயிக்கறது ஜெயிக்காம போகாது. ஜெயிக்காம இருக்கிறது ஜெயிக்காது.
ஓ. புரியுது. மும்பை ஜெயிக்கும்னு சொல்றீங்க சரிதானே?
நான் ஒரு தடவை சொன்னா...
சார் புரிஞ்சிடுச்சி.. புரிஞ்சிடுச்சி... போதும். ஐபிஎல் போட்டியில உங்க வாய்ஸ் யாருக்கு...?
நான் யாருக்கும் வாய்ஸ் கொடுக்கறதும் இல்லை. கை தட்டறதும் இல்லை. இத்தனை நாளா மண்டை காய்ஞ்சது பத்தாதா? ஆனாலும் நான் வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவேன். அது நூறு வருஷத்திலேயும் நடக்கலாம், முன்னூறு வருஷத்திலேயே நடக்கலாம். நன்றி.
..
.
supernna.......?
பதிலளிநீக்குசூப்பரு பாஸு.. எப்பிடி இப்பிடியெல்லாம்?? உக்காந்து யோசிப்பீங்களோ??
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதான் பாஸ். அந்த கடுப்போட தான் சச்சின் பவுலிங் போட்டு மொயின் கான் விக்கெட்டை எடுத்து மேட்சுக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் குடுத்து ட்ராவிடுக்குப் போக வேண்டிய பேரைத் தட்டிப் பறிச்சிட்டாரு.
ஜகா சொல்றத கேட்டுக்கறேன்...
பதிலளிநீக்கு...............
உண்மையைச் சொல்றதுக்கு உக்காந்து யோசிக்கணுமா பாஸு...