கடந்த போட்டிகளிலெல்லாம் குடுகுடுப்பையின் ஜக்கம்மா அருள்வாக்கு அப்படியே நடந்திருக்கிறது. இல்லையில்லை. என்ன நடக்குமோ அதைத்தான் குடுகுடுப்பை வழியாக ஜக்கம்மா சொன்னது. இதெல்லாம் வெறும் ஊகம் எனச் சிலர் சொல்கிறார்கள். அது தவறு. முறையாக ஆய்வு செய்யப்பட்டு, வீரர்களின் திறமையும், மைதானாத்தின் சீதோஷ்ண நிலையும் கணக்கில் கொள்ளப்பட்டு அறிவியல்பூர்வமான முறையில் ஜக்கம்மாவிடமும் அண்டைநாட்டு ஆவிகளிடமும் கேட்டுத்தான் அருள்வாக்குச் சொல்லப்படுகிறது. காணிக்கைகளுக்காகவோ லெக்பீஸுகளுக்காகவோ இது சொல்லப்படுவதல்ல. அப்படியிருக்கும்போது குடுகுடுப்பை சொல்வது எப்படித் தப்பாகும்? மகாஜனங்கள் சிந்திக்க வேண்டும்.
சரி போகட்டும் இன்றைய ஆட்டங்கள் பற்றிப் பேசுவோம். முதல் ஆட்டம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் தாதாவின் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும். முதல் போட்டியில் வென்றுவிட்ட மிதப்பு நைட் ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. அந்தப் போட்டியில் அவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதைப் பார்த்து ஊரே சிரிக்கிறது. ஆனாலும் வெற்றி வெற்றிதானே. அதனால் அந்த அணியே மீண்டும் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் அணி, தென்னாப்பிரிக்க வீரர்களைத்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. பவுச்சரும், காலீஸும் நேற்றுத்தான் பிளைட் பிடித்து கோல்கத்தா வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அணியில் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இது போக நம்ம டிராவிட், கும்ளே, கோஹ்லி, பாண்டே என உள்ளூர் மிரட்டல்களும் இருக்கின்றன. மோர்கன் வேறு எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் தற்போது மோடியுடன் விஜய் மல்லையா பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவுப்படியே வெற்றி தோல்விகள் இருக்கும். ஆயினும் விதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா?
நேற்றிரவிலிருந்தே ஜக்கம்மாவுக்கு லைன் கிடைக்கவில்லை. ஆனாலும் ஆவிகள் நடமாட்டத்தை வைத்துக் கணக்கிட்டதில் பெங்களூர் அணிதான் வெற்றிபெறும் எனத் தெரியவந்திருக்கிறது.
...
,

என்ன அண்ணாச்சி, உங்க கணிப்பு ஊத்திக்கும் போல இருக்கே ;-)
பதிலளிநீக்குஏதோ கெட்ட ஆவியோட சதி இருக்கு அண்ணாச்சி...
பதிலளிநீக்குHello Friend, Hope everything is fine.
பதிலளிநீக்குI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)