ஜக்கம்மாவுக்கு சேட்டிலைட் போன் லைன் கிடைக்கவில்லை என்று நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் ஆவிகளுடன் கெட்ட ஆவிகள் சேர்ந்து செய்த சதியால் நேற்றைய கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் கணிப்பு தவறிப்போய்விட்டது. அது தவறிப் போனதற்கு மல்லையா - மோடி இடையேயான பேச்சு முறிந்து போனதும் ஒரு காரணம்.
அப்புறம் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெக்கான் இடையேயான ஆட்டத்தில் நாம் சொன்னதுதான் நடந்தது. ஆனாலும், சென்னைக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற நமது குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும வகையில் பாலாஜியையும் கடந்த முறை வாய்ப்புக் கொடுக்கப்படாத அஸ்வினையும் அணியில் சேர்த்து தமிழ்பேசும் மக்களுக்கு உற்சாகம் கொடுத்தனர். இதுபோக முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோரும் ஆடுலெவன் அணியில் இருந்தனர். அதனால், தோனி, சீனிவாசன் மீதான குற்றச்சாட்டுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவதாக குடுகுடுப்பை தெரிவித்திருக்கிறார்.
இன்று ஒரேயொரு போட்டிதான். டெல்லி அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் ஆமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என சாமான்ய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
யூசுப் பதானின் ஆட்டத்தைக் கண்டு டெல்லி அணி பீதியில் உறைந்து போயிருக்கிறது என்ற தகவல் நட்பு வட்டத்தின் மூலமாகத் தெரியவந்திருக்கிறது. யுவராஜ் அணியை சுருட்டியது போல ராஜஸ்தான் அணியிடம் பந்தா பண்ண முடியாது என்பது கம்பீர் வகையறாவுக்கு நன்றாகவே தெரியும். இன்னொரு பக்கம் ஸ்மித் வேறு மிரட்டுவார்.
ஆனாலும் தில்ஷானும் சேவக்கும் கடந்த போட்டியில் சரியாக ஆடாத வெறியில் இருக்கிறார்கள். கிலியை ஏற்படுத்தும் நான்னஸ் பவுலிங் ராஜஸ்தானின் டாப் ஆர்டரை உடைக்க வாய்ப்பிருக்கிறது.
சரி முடிவுக்கு வரலாம். இந்த முறை மோடியிடம் இருந்து எந்த போனும் வரவில்லை. ஆட்டம் நடக்கப் போவது பெரிய மோடியின் இடம் என்பதால் இந்த மோடி அமைதியாக இருப்பது போலத் தெரிகிறது. இதனால் இருதரப்புப் பேச்சுக்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஜக்கம்மா லைனும் இன்னும் சரியாகவில்லை.
கிரக சஞ்சார நிலைப்படியும், சில டெலிபதி தகவல்களின் அடிப்படையிலும் பார்க்கும்போது டெல்லி அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தெரிகிறது. அடுத்த போட்டியிலிருந்துதான் வார்னேக்கு நல்ல காலம் பொறக்குது.
...
...
.
continue your prediction.
பதிலளிநீக்குஎனக்கும் டெல்லிக்குத் தான் வெற்றின்னு தோணுது. நல்லாருக்கு உங்க ப்ரெடிக்ஷன்.
பதிலளிநீக்கு