மோடிக்கு கட்டம் கரெக்டா இருக்கு. எப்பவுமே குரு உச்சம். அதனாலதான் உள்ளூர்ல தெளிய வெச்சு அடிச்ச பிறகும் உலகத்துக்கே நாட்டாமை ஆகியிருக்காரு. பில்கேட்ஸும் ஸ்டீவும் வந்து இவர்கிட்ட பிஸினெஸ் கத்துக்கணும். பாருங்க சிதம்பரத்தையே மிரட்டுறாரு. போன வருஷம் தென்னாப்பிரிக்காவையே கலங்க வெச்சாரு. மீடியாவுக்கெல்லாம் தண்ணி காட்டி வந்து பாருங்கன்னு முறுக்குறாரு. நல்லவரோ கெட்டவரோ கிரிக்கெட் இனிமே எப்படி இருக்கணும்னு இவர்தான் முடிவு பண்ணனும் போல இருக்கு.
ஐபிஎல் பத்தி எழுதறதுக்கு ராயல்டி தரணும்னு சொல்லிக்கிட்டிருக்காரு. காசு இல்லாம ஒரு படம் கூடத் தரமாட்டாராம். நாம திருடிப் போட்டா நமக்குத் தண்டம் போடுவாறான்னு தெரியல. அப்படி நோட்டீஸ் எதுவும் வந்தா பஞ்சாயத்து பண்றதுக்கு ராம்ஜெத் மெலானியத்தான் புடிக்கணும்.
ஐபிஎல் பத்தி இப்பல்லாம் நாங்க குறை எதுவும் சொல்றதில்ல. வந்தமா குத்தாட்டம் பாத்தமான்னு போய்க்கிட்டேயிருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஆமாங்க இளைஞர்களுக்கும் கிழவங்களுக்கும் அவங்க நல்லதுதான் பண்றாங்க. அதே மாதிரி, இந்திய டீம்லயும் பாரமாதா டீம்லயும் இடம் கிடைக்காதவங்களுக்கெல்லாம் ஐபிஎல் நல்ல வாய்ப்புன்னு எங்க ஊர்ல பேசிக்கறாங்க. ரிடயர்டானவங்க, ஓய்வுன்னு சொல்லி பதுங்கியிருக்கவங்க, தண்ணிபாட்டில் கொண்டுபோய் கொடுக்கறவுங்க இவங்களுக்கெல்லாம் ஐபிஎல் வாழ்வு கொடுக்கதுன்னு நெனைக்கிறபோது நாம வளத்த கிரிக்கெட்ட எப்படியெல்லாம் காப்பாத்தறாங்களேன்னு கண்ணுல தண்ணி முட்டுது.
இதப்பத்தி போனவாரம் பேசிக்கிட்டிருக்கும்போதுதான் கிரிக்கெட் விமர்சகர் சிவச்சாமி வந்தார். அவர் வந்தாலே கிரினிட்ஜ், குண்டப்பான்னு காணமப் போனவங்களைப் பத்திப் பேசிய உசிர வாங்குவாரு. இப்ப என்ன பிளேடப் போடப்போறாருன்னு பாத்தப்ப, போன வருஷத்தில சக்சஸ்புல் டீம் எதுன்னு தெரியுமான்னு கேட்டார். நான் ஆஸ்திரேலியான்னேன். பக்கத்துல நின்ன பொடியன் சவுத்தாப்ரிரிக்கான்னான். ரெண்ணு பேரையும் செத்த எலிமாதிரி பாத்தார் சிவசாமி. போங்கடாங்...அது பங்ளாதேஷ்ன்னார். எங்களுக்குத் தெரியும்னு அவர சமாளிச்சு அனுப்பிட்டு கூகுள்ள தேடினா அவர் சொன்னது சர்தான். புள்ளி விவரமெல்லாம் இப்படித்தான்னா, நாங்க ஒன்னா நம்பர்னு நம் ஆளுங்க காலர தூக்கி விட்டு அலையறதாப் பாத்து சிரிப்புத்தான் வருது
சரி விடுங்க, இப்ப நம்ம கவலையெல்லாம் சின்னச்சாமி ஸ்டேடியதிலேர்ந்தும் சிதம்பரம் ஸ்டேடியத்திலேர்ந்தும் வழக்கமா வரக்கூடிய ஓசி டிக்கெட் வந்து சேருமாங்கிறதுதான். தவத்த கலைச்சிட்டு கேலரி பக்கமா உக்காந்து பாத்தோம்னா ஆட்டம் தெளிவாத் தெரியும். குப்புனு ஒரு ஆட்டம் பாத்தா ஆறு மாசத்துக்கு தாங்கும்.
.
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக