வியாழன், 18 மார்ச், 2010

ஐபிஎல் வெட்டுகுத்து: லீ தரப்பின் ஏடாகூடக் கருத்து

அரசு பெரிதா, இல்லை கிரிக்கெட் பெரிதா என்று கேட்டால் நம் மக்களில் பாதிப்பேர் கிரிக்கெட்தான் பெரிது என்பார்கள். அப்படித்தான் விதைக்கப்பட்டிருக்கிறது. அரசை ஆட்டுவிக்கும் அளவுக்கு கிரிக்கெட் வளர்ந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிடப்பட்டிருந்த நாள்களில், தேர்தலும் நடந்ததால் பாதுகாப்புச் சிக்கல் கருதி போட்டிகளைத் தள்ளி வைக்கும்படி நம் உள்துறை அமைச்சர் கேட்டார். கவனிக்க வேண்டும் உத்தரவிடவில்லை. கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையப் பரிசீலித்த ஐபிஎல் தரப்பு, நாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை எனச் சொன்னது.  

அரசு தரப்பில் பலமுறை கெஞ்சியபிறகே விவகாரம் முடிவுக்கு வந்தது. அதுவும் சில வாரங்களிலேயே தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

இதேபோல மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, வீட்டுக்குப் போன இங்கிலாந்து அணியைக் கழுத்தைப் பிடித்து இழுத்து வந்தார்கள். அந்த அளவுக்கு செல்வாக்குச் செலுத்த முடிந்தது. நூற்றாண்டுக் கணக்கில் வெள்ளையர்களுக்கு அடிமையாகக் கிடந்த நமக்கு இந்த அதிகாரம் தேவைதான்.

சரி தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்துக்கு வருவோம். கிங்ஸ் லெவன் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீக்கு முழங்கையில் பிரச்னை. மிகச்சிறந்த பவுலர். சினேகமாகப் பழகுபவர் என்றும் கூறுவார்கள். முழங்கைப் பிரச்னைக்கு ஏதோ ஊசி போட்டால்தான் சரியாகும் என்றார்கள்.  துபாய் போகிறார் என்றார்கள். இப்போ ஆஸ்திரேலியா போவதாகச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கிரிக்கெட் வாரிய அனுமதிக்காகத்தான் என்று இப்போது கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஏஜ் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தியில் "பாதுகாப்பு காரணங்களுக்காகவே பிரெட் லீ ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாக" லீயின் மேலாளர் உறுதி செய்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்கும்வரை சண்டிகரில் இருப்பது பாதுகாப்பானது இல்லையென்பதால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதாக அந்தச் செய்தியி்ல் கூறப்பட்டிருக்கிறது.

போகிற போக்கில் இந்தியாவி்ல் பாதுகாப்பு இல்லை என்பது போலக் கொளுத்திப் போடப்படும் விஷயம்தான் இது. இந்த ஏடாகூடச் செய்தி பற்றி பிரெட் லீயிடம் உரிய விளக்கம் கேட்காவிட்டால் அரசை விட தனியாருக்குச் சொந்தமான பிசிசிஐ உயர்ந்தது என்றுதானே அர்த்தமாகிறது?
..
..
.



2 கருத்துகள்:

  1. கண்டிப்பா லீ விசயத்துல ஏதோ உள்குத்து இருக்கு..

    இந்த ஆஸ்திரேலியாக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லை. பாண்டிங் வேற எதோ காண்டுல இருக்கான்போல..

    இதுல பி.சி.சி.ஐ கை எதுவும் இருக்குமான்னு தெரியல. ஆனா பி.சி.சி.ஐ இந்த காரணத்த வச்சி ஆஸ்திரேலியாக்காரனுகள ஐ.பி.எல் விட்டு வெளியேத்தனும்.

    பதிலளிநீக்கு
  2. நாம அவங்கள பாத்து இனவெறின்னு சொலறோம். பதிலுக்கு அவங்க இங்கே பாதுக்காப்பு இல்லன்னு சொல்றாங்க போல. நடக்கட்டும் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு