வெள்ளி, 12 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு? கேகேஆர் - டிசி 1

ஏய் இந்த டீம்ல யார்லாம்பா இருக்காங்க. அந்த டீம்ல யார்லாம்பா இருக்காங்கன்னு கேட்டு காலையிலேயிருந்து ஒரே போன் காலா வந்துக்கிட்டே இருந்திச்சு. எனக்குத் தெரியாதுப்பா. யார்லாம் இருக்காங்க. யார்லாம் ஊர்ல இருக்காங்க. யார்லாம் ஃபிட்டா இருக்காங்கன்னு ஓனர்களுக்கே கடைசி நேரத்திலதான் தெரியவரும். அப்புறம் எனக்கு மட்டும் இப்பவே எப்படித் தெரியும்னு சமாளிச்சேன்.

உண்மையும் அதான். கோல்கத்தா தாதா டீம்ல மெக்கல்லம், கெய்ல் மாதிரி முக்கியப் பிரமுகர்களெல்லாம் நாட்டுக்காக வெளையாடப் போய்ட்டாங்க. மிச்ச சொச்சங்கள்தான் இருக்காங்க. டெக்கான் டீம்ல கில்கிறிஸ்ட், கிப்ஸ் இருக்காங்க. லக்ஷ்மண் வேற இருக்காரு ரெண்டு பக்கமும் ஓய்ஞ்சு போனவங்கதான் அதிகம்.

சரி மேட்டருக்கு வருவோம்.. யாரு கெலீக்கப் போறாங்க? ரெண்டு டீமோட ஸ்டெரெங்த், வீக்னெஸ் வெச்சு எவனாது இந்த டீம்தான் ஜெயிக்கும்னு சொன்னான்னா அது பைத்தியக்காரத்தனம். ஏன்னா இவங்க இந்த நேரத்தில எப்படி விளையாடுவாங்கன்னு யாருக்குமே தெரியாது.

ஆடற இடம் ரெண்டு பேருக்கும் பொதுவானதுங்கறதால அத வெச்சும் கணிக்க முடியாது.

ஒரேயொரு வாய்பிருக்கு. 2008ல டெக்கான் அணிய ரெண்டு முறையும் கோல்கத்தா ஜெயிச்சது. 2009-ல ரெண்டு முறையும் டெக்கான் ஜெயிச்சது. அப்படிப் பார்த்தா இது தாதாவோட முறை...

இந்த முடிவ சொல்றதுக்கு வேற சில காரணங்களும் இருக்கு. அதெல்லாம் ராணுவ ரகசியம்.

குடுகுடுப்பை சொன்னது சரியா இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.. தப்பா இருந்தா மெயில் மட்டும் சொல்லுங்க...

...

..

4 கருத்துகள்:

  1. //
    குடுகுடுப்பை சொன்னது…

    நான் ஒன்னும் சொல்லலியே?
    //

    யோவ் என்னய்யா சொன்னியரு தம்பிகிட்ட

    பதிலளிநீக்கு
  2. ஜெபஸ்டீன் நாம சொன்னது என்னிக்குத் தப்பாப் போயிருக்கு... ஒரு கொத்துப் பரோட்டா ஆர்டர்....


    குடுகுடுப்பை பாஸ்... இது சின்னக் குடுகுடுப்பை... உங்க அளவுக்கு வர முடியுமா?

    நசரேயன் அண்ணாச்சி... காப்பாத்துங்க காப்பாத்துங்க...

    பதிலளிநீக்கு