மும்பை-ராஜஸ்தான் ஆட்டத்தில் பல திருப்பங்கள் ஏற்படும். ஆனால் இறுதியில் மும்பைதான் ஜெயிக்கும் என ஆவிகளிடம் கேட்டுக் கணித்துக் கூறிய குடுகுடுப்பைக்கு புறா மூலம் பாராட்டுக் கடிதங்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.. யூசுப் பதான் 100 ரன் அடித்ததும் எஸ்எம்எஸ்சில் மிரட்டல் விடுத்த மகளிர் அணிக்கு எனது அன்பான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேட்டைக்காரன் சி.டி. அனுப்புவதாக நீங்கள் விடுத்த மிரட்டல்களைக் கேட்டு எங்க வீட்டு நாய் காய்ச்சலில் படுத்திருக்கிறது.
டெல்லி-பஞ்சாப் ஆட்டத்தைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பஞ்சாப் அணியில் யுவராஜ், லீ எல்லாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். சங்ககாரவைத் தவிர வேறு யார் அந்த அணியில் இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியாது. லீ துபாய்க்கு ஊசி போடப்போயிருக்கிறார். ஊசி கிடைக்காவிட்டால் இன்னும் 10 நாளைக்கு அவர் வரமாட்டாராம். கட்டிப்புடி வைத்தியமும் கிடையாதாம். பின்ன எப்படி இவங்க ஜெயிக்கப்ப போறாங்க.
அதனாலே ஒத்த வரியில சொல்லலாம் ஜெயிக்கப் போறது டெல்லிக்காரங்கதான்.
இந்த ஊரு இன்னுமா நம்ம நம்பிக்கிட்டிருக்கு...
..
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக