அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த குடுகுடுப்பை நேற்றுத்தான் டிஸ்சார்ஜ் ஆனார். நர்சுகளுடனான அவரது வாய்க்காத் தகராறுகளைத் தீர்த்து வைத்து, பில் வருவதற்குள் பின்பக்கச் சுவர் ஏறித் தவ்வி ஓடி வருவதற்குள் பெரும் பாடாவிட்டது. வந்ததும் வராததுமாக இன்றைக்கு ஐபிஎல் போட்டிகளை நான்தான் கணிப்பேன் என்று கூறினார். அவருக்காக ஜக்கமாவுக்கு லைன் போட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.
டெக்கான், பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 203 ரன்கள் எடுத்ததை நினைவி்ல் கொள்ள வேண்டும். இதுவரை பந்தா மட்டுமே காட்டிவரும் யுவராஜ் சிங், இந்தப் போட்டியிலும் தொடர்ந்து பந்தா காட்டுவார். ரவி போபரா, பிஸ்லா ஜோடி இன்னிக்கு ஆடாவிட்டால் கஷ்டம்தான்.
டெக்கான் அணி பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஸ்ட்ராங். கில்கிறிஸ்ட் மட்டுமே அனைவரையும் துவைப்பார். அவர் சீக்கிரமே அவுட் ஆனால் அணி படுத்துவிடும். ஆனால், ஆவிகளைப் பிடித்து உடுக்கை அடித்து விசாரித்ததில் அப்படி எதவும் நடக்காது எனக் கூறியுள்ளன. அதனால் இன்றைய வெற்றி டெக்கான் அணிக்கே.
உடுக்கையில் வார் பிடிக்கும் அளவுக்குக் கூட குடுகுடுப்பையின் உடல் நலம் இன்னும் தேறவில்லை. இந்தக் கணிப்பு எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. எதற்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒரு மனுப் போட்டுவிடுவது நல்லது.

..
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக