வெள்ளி, 19 மார்ச், 2010

ஐபிஎல் கடையடைப்பு: கங்குலி ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த வலைப்பூவை எழுதுவதில் உதவியாக இருப்பது காஜா பையன்தான். முன்பொரு காலத்தில் முக்குத் தையல் கடையில் காஜா போடும் பையனாக இருந்த அனுபவத்தைக் கொண்டுதான் அவனை வேலைக்குச் சேர்த்தோம். வெட்டுவது, ஒட்டுவது, திரட்டிகளில் இணைப்பது போன்ற வேலைகளெல்லாம் அவனது கைவண்ணம்தான்.

ஐபிஎல் போட்டிகளைப் பற்றித் தாறுமாறாக எழுதுவதை தொடக்கத்திலிருந்தே அவன் எதிர்த்து வந்தான். தப்புத் தப்பாக கணிப்பெழுதும் உங்களுடன் வேலைக்கு இருப்பதை விட மீண்டும் காஜா போடுவதற்கே போய்விடலாம் என்றும் அடிக்கடிக் கூறிவந்தான்.

இப்படியொரு சூழலில் குலசாமி கோயிலுக்குச் செல்வதாகக் கூறி ரெண்டு நாள் விடுப்பில் அவன் சென்றிருக்கிறான். அவன் செய்த வேலைகளைச் செய்யுமளவுக்குத் திறமை பெற்றோர் வேறு யாரும் இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் இந்த வலைப்பூவை குறைந்தபட்சம் ரெண்டுநாள்கள் தற்காலிகமாக மூட வேண்டியதாகிறது.

இந்த அறிவிப்பு கங்குலி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாகத் தெரிகிறது. அவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை யாரும் தடுக்க வேண்டாம். ஐயோ பாவம், வேறு எதற்குத்தான் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது?

இந்தக் கடை மூடியிருக்கும் காலத்தில் தயவு செய்து யாரும் எதிரணியைச் சேர்ந்த முகிலனின் வலைப்பூவுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மீறிச் செல்வேன் என்று அடம்பிடித்து கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு கம்பெனி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. அந்த ஆபத்தான வலைப்பதிவு:

http://cricketpithatralkal.blogspot.com/

..

.

2 கருத்துகள்:

  1. இதுலயும் கங்குலியைக் காலவாராம இருக்க மாட்டீரு போலயே??

    பதிலளிநீக்கு
  2. கடையைத் திறக்கும் வரை காலவரையின்றி உண்ணாவிரதம் இருப்பதாக சச்சின் ரசிகர் மன்றம் அறிவித்திருக்கிறதே? அதை நீங்கள் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு