கூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...
திங்கள், 4 மே, 2009
விளம்பரம் செய்ய விவஸ்தையில்லையா?
கிரிக்கெட் வீரர்களின் டீ சர்ட், ஹெல்மெட், பேட், முன்புறம், பின்புறம், ஆடுகளத்தின் நடுவில், ஸ்டம்பில், எல்லைத் தடுப்புகளில் என எல்லாப் பக்கங்களையும் விளம்பரங்களால் ஆக்கிரமித்திருக்கின்றன. இதுபோக சதித்திட்டம் தீட்டுவதற்காக ஏழரை நிமிட இளைவெளி வேறு. சரி போகட்டும் விளம்பரம் செய்வதுதான் இவர்களது நோக்கம் எனத் தெரிந்துவிட்டது என்று கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கும் எம் போன்ற கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் வர்ணணையாளர்கள் புது மாதிரியாகச் சீண்டிப் பார்க்கிறார்கள். இவ்வளவு காலமும் சிக்ஸர் என்று அழைக்கப்பட்டு வந்ததை இப்போது டிஎல்ஃப் மேக்சிமம் என்கிறார்கள். வன்முறையாக எழுதுகிறேன் என நினைக்காதீர்கள், கிரிக்கெட்டின் அடிப்படைகளை அழிக்கத் தொடங்கியிருக்கும் இவர்களது நாக்குகளை தீயிலிட்டுக் கருக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக