ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்!

சச்சின் ஜுரம் எல்லோருக்கும் 100 டிகிரியைத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் நூறாவது சதத்தை எப்போது அடிப்பார் என்பது மட்டும் தெரியவில்லை. இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 2 ரன் எடுத்திருந்தபோது பான்டிங் அவரை பிடித்து வெளியே அனுப்பிவிட்டார். சச்சின் நூறு அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நமக்குக் கவலையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையெல்லாம் விமர்சனம் செய்யவே கூடாது என்கிற ரீதியில் நமது கடைக்கு வரும் ஒரே ஒரு வாடிக்கையாளரும் குறை பட்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

1991-92 ல் பென்சன் - ஹெட்ஜஸ் சீரியஸ், அதைத் தொடர்ந்து வந்த பென்சன் - ஹெட்ஜஸ் உலகக் கோப்பைகளில் இந்திய அணி மிகச் சுமாராக ஆடியது. இன்றைக்கு ஊரிலுள்ள அனைவருக்கும் பேட்டிங், பவுலிங் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது ரவி சாஸ்திரி அன்றைக்குத் தொடக்க ஆட்டக்காரர். உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலும் அசார் தலைமையிலான அணி,  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோற்றுப் போனது. அதிகப் பந்துகளைச் சந்தித்து குறைந்த ரன்களை எடுத்திருந்தார்.  எனது நினைவு சரியெனில், முதல் போட்டியில் 54 பந்துகளில் 27 ரன்களும், இரண்டாவது போட்டியில் 110 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தார். இந்தப் போட்டிகளில் 7 ரன்கள் மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் அசார் அணி தோற்றது.

ரவிசாஸ்திரியின் இந்த ஆட்டம் மோசமானது என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பிட்ட ஓவர்கள் போட்டியில் இப்படி ஆடவேகூடாதுதான். இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? செருப்பு மாலை. 

ஆனால், இன்றைய வீரர்களுக்கு அத்தகைய பரிசு கிடையாது. செருப்பு மாலை அணிவிப்பது தவறுதான். ஆனால், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதும் தவறு என்பதுதான் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. நூறு நூறு ரன்களாக அடிப்பதால் மட்டும் சச்சின் டெண்டுல்கரோ, பிற வீரர்களோ வளர்ந்துவிடவில்லை.  ஊடகங்களில் வெற்று உந்துதல் மிக முக்கியமான காரணம். அதன் மூலமாகத்தான், கிரிக்கெட்டும் அதன் வீரர்களும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீங்களும் நானும்கூட இவர்களை வளர்த்துவிட்டதில் ஓர் அங்கம். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த கிரிக்கெட்டைத்தான் இன்றைய வீரர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை.

இந்தியாவை பிராண்டாகவும், அதன் மக்களை சந்தையாகவும் மாற்றி வியாபாரம் செய்வதுதான் இன்றைய கிரிக்கெட்டின் உத்தி. இந்தியா என்ற பெயரில் ஆடிய அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது என்றால், அதற்குப் பின்னால், பல்வேறு வியாபார ராஜதந்திரங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. வேறு எந்த தேசபக்தியும் மண்ணாங்கட்டியும் கிடையாது.

உலகக் கோப்பைப் போட்டியில் தோனி அணி ஜெயிக்கக்கூடாது என்றோ, சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதம் அடிகக்கூடாது என்றோ நான் வேண்டிக் கொள்வது கிடையாது. ஆனால், இவர்களின் தந்திரம் தோற்றுப் போகவேண்டும் என்கிற அக்கறை எனக்கு உண்டு. 
  
 கிரிக்கெட்டை வெறும் களியாட்டமாக மாற்றிக் கொண்டிருப்பதற்காக, பிசிசிஐ மட்டும் எதிர்க்க வேண்டுமா அல்லது சச்சின், தோனி போன்ற அனைவரையும் எதிர்க்க வேண்டுமா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.  ஆனால், இந்தக் காலத்தில் ஆடப்படும் கிரிக்கெட்டையே விமர்சிப்பதுதான் நமது வழி. பிசிசிஐயும் அதன் அடிமைகளும் நமது விமர்சனத்துக்கு ஆளாவதைத் தவிர்க்கவே முடியாது.

"யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்தறே"  என்கிற கேள்விக்கு இடம் தராதவகையில் நம் கடையிலும் சரக்குத் தேடி வரும் அந்த ஒரேயொரு வாடிக்கையாளருக்காகவே இந்த விளக்கம்.

.

.
...


14 கருத்துகள்:

  1. நண்பரே சச்சினை விமர்சிக்கவே கூடாது என்று நான் என்றும் கூறியதில்லை. உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறுவதாலேயே நான் சச்சினுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. உங்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட் ஒரு விளையாட்டே கிடையாது. அது வெறும் நாடகம்தான் அல்லவா? அப்படி இருக்கும்போது விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறன் என்ற ஒன்றே உண்மை கிடையாது எனும் பட்சத்தில், அதனை விமர்சனம் செய்வதே தவறு.

    சச்சின் என்பவனாவது கொஞ்ச நேரம் வெயிலில் நின்று நடித்து பணம் சம்பாதிக்கிறான். ஆனால் அவனை இயக்கும் பின்னணிகளோ அதுவும் செய்வதில்லை. ஆனால் உங்கள் கட்டுரையோ எதவனை விட்டு விட்டு அம்பை நோவதை போலிருக்கிறது. சரி சார் நீங்க நாட்டு மேல அக்கறை கொண்டவர்தான். அதுக்காக, வெளிநாட்டு கார கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒரு தவறு கூட உங்கள் கண்ணில் படுவதில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஆனால், இன்றைய கிரிக்கெட் நாடகமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் பிரச்னை. எந்தத் திறமையும் இல்லாமல் யாரும் அணியில் இடம்பிடித்து விடமுடியாதுதான். அதை நான் ஏற்கிறேன். ஆனால், அரசியலும் பண அதிகாரமும் பிசிசிஐக்கும் ஐசிசிக்கும் வரம்புகடந்த செல்வாக்கு அளித்திருப்பதால், இந்த அணியில் இடம்பெறுவதற்கு வெறும் ஆட்டத் திறமை மட்டும் போதாது. அந்த வகையில்தான் விமர்சிக்கப்படுகின்றன.

      சச்சின் திறமையானவர் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இல்லை. அந்த விஷயத்தில் - நேரமிருந்தால் - முந்தைய பதிவுகளை படித்துப் பாருங்கள். ஆனால், இவர்கள் எல்லாம் நாட்டுக்காக ஆடுகிறார்கள் என்று ஆர்ப்பரிப்பதை ஒரு நாளும் ஏற்க முடியாது.

      அப்புறம் பிசிசிஐ மீது விமர்சனம் வைக்கவில்லை என்பது முற்றிலும் தவறானது. சாத்தான்களும் யூதாஸ்களும், அடங்க மறுக்கும் பிசிசிஐ போன்ற கட்டுரைகளைப் படிக்கவும். இந்த விஷயத்தில் இன்னும் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்.

      நீக்கு
  2. சச்சின் வளர்த்து விடப்பட்டவர் என்னும் உங்கள் கருத்தே உங்களின் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்துகிறது. சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உண்மையில் அப்படி இருந்திருந்தால் இன்று சித்தார்த் மல்லையா இந்தியா அணியின் கேப்டனாகவும், நம்பர் ஒன் ஆட்டாக்காரராகவும் இருந்திருப்பார். இந்திய வெற்றிகளுக்கு பின்னால் சில பல அரசியல்கள் ஒளிந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் சச்சின் உள்பட பிற வீரர்களை பிச்சைகாரன் ரேஞ்சுக்கு நீங்கள் வர்ணிப்பது உண்மையிலேயே எரிச்சலை கிளப்புகிறது. உங்கள் நோக்கம் சிறந்ததாக இருந்தால் அதற்காக என் வாழ்த்துக்கள். ஆனால் கட்டுரையின் நோக்கம் வெறும் தனி மனித தாக்குதல்களோடு நின்று விடுகிறதே என்பதுதான் என் ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சச்சின் வளர்த்துவிடப்பட்டவர் என்பது முற்றிலும் உண்மை. சச்சின் மாத்திரமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டே வளர்த்துவிடப்பட்டதுதான். பிற ஆட்டங்கள் அனைத்தையும் நசுக்கியதால்தான் கிரிக்கெட்டுக்குப் புகழ் கிடைத்தது. அதன் ஒரு பகுதிதான் சச்சினுக்கு சொந்தமானது. செபக் தக்ராவில் சச்சின் உலகச் சாம்பியனாக ஆகியிருந்தால்கூட யாருக்கும் தெரிந்திருக்காதல்லவா?

      சூதாட்டப் புகாரில் அசார் உள்ளிட்டவர்கள் சிக்கியபோது, சச்சின் பிறழ் சாட்சியளித்தார். பழைய கதைகளைப் புரட்டிப் பார்க்கவும். ஆனால் வசதியாக அதை மன்னித்து விட்டோம். அதன் பிறகு, இன்று வரைக்கும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோருகிறார்கள் என்றால், இது திட்டமிட்ட ஊடக அணுகல்தானே ஒழிய, வெறும் திறமை மட்டும் காரணமல்ல.

      தனி மனித தாக்குதல்கள் என்கிற உங்கள் குற்றச்சாட்டு நியாயம் இருக்கலாம். ஆனால், எனது கோணத்தில் அது வெறும் நையாண்டிதான்.

      நீக்கு
  3. ஆனால் சும்மா சச்சின் ஒரு பிராடு என்று கூறினால் கொந்தளித்து போய் வந்துவிடுவார்கள் என்று நீங்கள் கருதினால் அது தவறு. உங்கள் கட்டுரையின் நோக்கம் சச்சினை அல்லது பிற வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேசி, வெறுப்பை சம்பாதிப்பதா? அல்லது உங்களின் கருத்துக்களை கொண்டு சேர்ப்பதா? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் இப்படி ஆளில்லாத கடையில் டீ ஆத்த வேண்டியதுதான். இதனால் லாபம் ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. எந்த ஆதாரமும் இல்லாமல், சச்சினை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறுவது தவறு. கெட்டவார்த்தைகளில் திட்டுவதைத்தான் தரக்குறைவாகத் திட்டுவது என்பார்கள். அல்லது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டும். இவற்றை நான் செய்ததில்லை என்று நினைக்கிறேன். சச்சினின் முதல் சதம் முதல் சில காலம் முன்பு அடித்த ரன்கள் வரை தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தவன் நான். அதனால் ஆதாரமில்லாமல் எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை.

    ஆளில்லாத கடையில் டீ ஆத்த வேண்டியிருக்கும் என்கிற உங்கள் சாபம் பலித்தால்கூட அதன் பிறகு தொடர்ந்து - எப்பவாவது எழுதிக் கொண்டிருக்கத்தான் போகிறேன். லாபம் ஏதும் தேவையில்லை.

    இன்னும் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள். எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும் என்ற வாதத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கே வேறுபட்ட கருத்து இருக்கிறது. ஆனால் அவரது ஆட்டத்திறன் மீது எந்த வேறுபட்ட கருத்தும் கிடையாது. இதை நீங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். தரக்குறைவாக என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று சால்ஜாப்பு சொல்லலாமா. அவரை குறை சொல்லவில்லை, கிரிக்கெட்டைத்தான் குறை சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அவரை தொடர்ந்து தாக்குவது சரியா?

    பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என்று வேண்டியதும், அக்தர் ஒரு சகாப்தம் என்றும் உங்களுக்கு தோன்றியது எதனால். கிரிக்கெட் என்பது ஒரு கேலிக்கூத்து என்றால் அதில் அக்தரும் ஒரு கூத்தாடிதானே? அப்படியானால் ஒரு சில பிரபலங்கள் மீதுதான் உங்கள் வன்மமா? திரும்ப திரும்ப சச்சின் வேண்டுமென்றே பிரபலமாக்கபட்டார் என்பது விதண்டாவாதம். சச்சின் சூதாட்ட விஷயங்களை மறைத்தார் என்பது தெரியாமல் போனது என் அறியாமைதான். அதை தக்க ஆதாரத்தோடு தருவீர்கள் என்று நினைக்கிறேன்.

    எல்லாவற்றையும் ஆதாரத்தோடுதானே தருவீர்கள். டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து விரட்டத்தான் தோனி முட்டை அடித்தார் என்று கூடவே நின்று பார்த்த மாதிரி கூறியது எந்த ஆதாரத்தில்?

    ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்ற வார்த்தையை நீங்கள்தான் பயன்படுத்தினீர்கள். அதையே நான் திருப்பி சொன்னேன். நீங்கள் சொன்ன அர்த்ததில். ஆனால் நீங்கள் செய்தால் நையாண்டி, நான் சொன்னால் உங்களுக்கு சாபம். உங்களுக்கு சாபம் விட்டு எனக்கு என்ன ஆகப்போகிறது. கிரிக்கெட்டையோ, அல்லது குறிப்பிட்ட வீரர்களையோ விமர்சிப்பவர்களை, நீ நாசமா போவாய் என்று சாபம் விடுவது என்பது ஒரு உலகமகா முட்டாள்தனம் என்பது எனக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
  6. சச்சின் வரிவிலக்கு கேட்டதால் அவர் உங்களுக்கு அயோக்கியராக போய்விட்டார். அவர் சட்டப்படிதானே நடந்து கொண்டார்? 100 சதம் அவர் உத்தமராக இருந்தால் அவர் பெயர் காந்தி அல்லது மிஸ்டர் புளியங்குடி என்றல்லவா இருந்திருக்க வேண்டும். அவரும் சாதாரண மனிதர்தானே? நான் சச்சின் என்பவருக்கு சொம்படிக்கும் பக்தன் அல்ல. ஆனால் தான் எடுத்துக்கொண்ட ஒரு விளையாட்டில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, முழுதிறனையும் வெளிப்படுத்தி வருகிறார். செபக் தக்ரா ஆடியிருந்தாலும் அவர் இப்படித்தான் ஆடியிருப்பார். எல்லாமே ஒரு நாடகம், சச்சினை வேண்டுமென்றே ஒரு உலகப்புகழ் பெற்றவராக எல்லோரும் வளர்த்து விட்டார்கள் என்றால், அவரை ஒரு உலகப்புகழ் பெற்ற கேப்டனாக மட்டும் ஏன் வளர்த்து விட முடியவில்லை. அவர் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை பெற முடியவில்லை. இதுவும் நாடகத்தில் ஒரு காட்சிதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரண்பாட்டைக் கண்டுபிடித்தே தர்மசங்கடத்தில் தள்ளுகிறீர்கள் சாமி...

      http://noipl.blogspot.in/2011/04/blog-post.html

      இதையும் படியுங்கள்

      நீக்கு
  7. சிபிஐயிடம் சச்சின் கூறியது:

    The CBI Report in Full -- Part 22

    Statement of Sachin Tendulkar

    Sachin Tendulkar, former Indian captain, when asked about the India-New Zealand Test at Ahmedabad in 1999, sated that by the end of third day's play when New Zealand had lost around 6 wickets, he had thought to himself that he would enforce the follow-on the next day.

    However, the New Zealand innings dragged on till after lunch the next day and by then he himself, coach Kapil Dev, Anil Kumble and Ajay Jadeja decided that the follow-on would not be enforced since the bowlers, especially Srinath had insisted that they were very tired.

    It was a collective decision not to enforce follow-on. On being asked whether anybody could have influenced this decision since the bookies in Delhi allegedly knew one day in advance that follow-on will not be enforced, he accepted that it was possible.

    About Shobhan Mehta, the Bombay bookie, he stated that he had never met this person nor did he invite him to his wedding. During his wedding there was tight security and only select persons were invited and nobody without a proper invitation could have gate crashed.

    All speculations about himself and Shobhan Mehta were absolutely rubbish and he had never met this person any time in his life. On being asked whether he suspected any Indian player of being involved in match-fixing, Sachin stated that during his tenure as Captain, he had felt that Mohd Azharuddin was not putting in 100 per cent effort and he suspected that he was involved with some bookies.

    On being asked about the India-West Indies match at Kanpur in 1994 when Manoj Prabhakar and Nayan Mongia batted slowly, he stated that he was the vice-captain during that match and he was absolutely sure that there were no instructions from the management for Manoj Prabhakar and Nayan Mongia to bat slowly and that he was so upset with their tactics that he did not talk to them after the match.

    Statement of Maninder Singh Maninder Singh, former Indian cricket team player was asked about the Ranji Trophy quarter final match between Delhi and Bombay in 1991 at Feroze Shah Kotla. He stated that in that particular year, the Ranji Trophy schedule was disturbed because of some court order.

    Some of the Delhi players were committed to play league cricket in England. Had Delhi won that quarter final match, further Ranji Trophy matches would have clashed with league engagements in England. He stated that although there was no conscious decision to lose that match, the team was not serious about winning it either.


    சந்திராசூட்டிடம் சச்சின் கூறியது...

    http://www.frontlineonnet.com/fl1709/17091220.htm

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிப்பிடித்து ஆதாரத்தை அளித்ததற்கு மிக்க நன்றி. இதில் கடைசி இரண்டு பத்திகளுக்கும் சச்சினுக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல அதில் மேட்ச் பிக்ஸ் செய்யப்பட ஆதாரம் இல்லை. வீரர்கள் ஈடுபாடு இல்லாமல்தான் ஆடினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலவச இணைப்புக்கு நன்றி.

      மீதம் இருக்கும் சச்சின் ஸ்டேட்மெண்டில் எந்த இடத்திலுமே சச்சின் பிக்சிங் நடந்தது எனக்கு தெரியும் என்று கூறவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக பாலோஆன் தராமல் விட்டது எல்லோரும் எடுத்த முடிவுதான். அதில் புக்கிகள் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் கூறி உள்ளார். அதாவது எனக்கு தெரியவில்லை, என்னுடன் சேர்ந்து முடிவெடுத்த வீரர்களுக்கு தொடர்பிருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது என்றுதானே அர்த்தம் வருகிறது? நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியதை விட, நடக்கவே இல்லை என்று அடித்து கூறி இருந்தால் அவர் மீது சந்தேகம் வரலாம்.

      அசாருதீன் 100 சதவீதம் தன் பங்கை அளிக்கவில்லை என்று நான் கருதினேன். அவர்மீது அப்போது எனக்கு அந்த சந்தேகம் இருந்தது என்றுதானே சொல்லி இருக்கிறார். அசாருதீன் ஈடுபட்டது எனக்கு தெரியும் என்றா சொல்லி இருக்கிறார். சந்தேகத்தின் பேரில் சக வீரரை அதுவும் புகழ் பெற்ற ஒருவரை ஆதாரம் இல்லாமல் மாட்டி விட முடியுமா? இதே மாதிரி மொங்கியாவும், பிரபாகரும் மிக மெதுவாக ஆடியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அப்படி விளையாட அணியில் உள்ள யாரும் ஐடியா கொடுக்கவில்லை என்றுதானே கூறி இருக்கிறார்? இருவரும் பிக்சிங்கில் ஈடுபட்டு அப்படி ஆடினார்கள். அது தனக்கு முன்பே தெரியும் என்றா கூறியுள்ளார்?

      நீக்கு
  8. அட! சிபிஐயிடமும் சந்திராசூட்டிடமும் நேர் எதிரான கருத்துகளை சச்சின் தெரிவித்திருக்கிறார் என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது... சச்சின் கேப்டனாக இருந்த காலகட்டத்தைப் பாருங்கள்... இவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...

    இவையெல்லாம் இப்போது தேடிக் கண்டுபிடித்தவை அல்ல நண்பரே... அப்போதே நேரடியாகப் படித்து அறிந்தவை. மேட்ச் பிக்சிங் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் குறைந்தபட்சம் சிபிஐ, சந்திராசூட் அறிக்கையையும் கடந்த உலகக்கோப்பைக்கு முன்னர், புக்கி ஒருவர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தையும் தயவு செய்து படியுங்கள்..

    இதே பிளாக்கில் பல இடங்களில் முன்னரே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன... சச்சின் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தக் காலகட்டத்தில் செய்தித்தாள்களை வாசித்துப் பாருங்கள்... புக்கிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என பல நேரங்களில் அசாருதீனுக்கு அறிவுரை அளித்ததாக சச்சின் கூறியிருக்கிறார்.

    ....

    பதிலளிநீக்கு
  9. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? சச்சின் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று சொல்கிறீர்களா? இல்லை அவர் அது பற்றி மறைத்தது தவறு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் அவரை பி‌சி‌சி‌ஐ காப்பாற்ற காரணம் என்ன? சச்சினின் மார்க்கெட் வேல்யூவா? அப்படியானால் அதற்கு முன்னால் சச்சினின் ஆட்டம் சிறப்பானதுதான் வளர்த்து விடப்பட்டவர் அல்ல என்பது சரிதானே? இப்போதும் சச்சின் பிக்சிங்கில் ஈடுபட்டு வருகிறார் என்பது உங்கள் கருத்தா? சச்சினுக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் என்ன செய்திருக்க வேண்டும்?

    சரி தோனி என்ன தவறு செய்தார்?

    பதிலளிநீக்கு
  10. மேட்ச் பிங்சிங்சை மறைத்தது தவறு இல்லையா? அதுவும் கேப்டனாக இருந்த காலத்தில் மேட்ச் பிங்சிங் நடந்ததை மறைத்ததை நீங்கள் மன்னித்து விடுகிறீர்களா? இதென்ன கொடுமை. இது வெறும் ஒழுக்கத்தைப் பற்றிய விஷயமல்ல. ஊழல். நம்பிக்கை மோசடி.

    மேட்ச் பிங்சிங்கில் ஒருசிலரைப் பலிகடாவாக்கிவிட்டு பிறரைத் தப்பிக்க விட்டுவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் இருக்கிறது. மும்பை லாபியின் பழைய கதைகளைக் கிளறிப் பாருங்கள்.

    சச்சின் ஆட்டம் சிறப்பானதுதான். அவர் வளர்த்து விடப்பட்டவர் என்பது, ஆட்டத் திறனைப் பற்றியதல்ல.

    பதிலளிநீக்கு