புதன், 9 மார்ச், 2011

பியூஷ் சாவ்லாவின் தேர்வு, தோனியின் பிடிவாதம்


சச்சின் பற்றியும், ரஜினி, கேப்டன் விஜயகாந்த், அஜீத், "....", தோனி ஆகியோர் பற்றியும் எழுதியதற்காக தொடர்ந்து கண்டன எஸ்எம்எஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுச் சேவை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம்தான் என்பதாலும், இதை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரம் நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது என்பதாலும் நமது சேவை தொடர்கிறது.

வங்கதேச அணிக்கு கடந்த 2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அணி இதுவரை 68 டெஸ்ட்கள் விளையாடி இருக்கிறது  என்று நினைக்கிறேன். அதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மூன்றில் ஒன்று ஜிம்பாப்வே அணியுடனானது. மற்ற இரண்டும் வீரர்கள் ஸ்டிரைக்கில் இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பந்தாடிக் கிடைத்தது. 34 போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருக்கிறது.  இந்த 10 ஆண்டுகளில் அந்த அணியால் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையைும் பெற முடியவில்லை. குறைந்பட்சம் சவாலாகக் கூட ஆடமுடியவில்லை.

சரி அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? இப்படி மோசமான பார்மில் இருக்கும் ஒரு அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளத்தான். வங்கதேசத்துக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட காலத்திலேயே ஒப்பீட்டளவில் கென்யா நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்படவில்லையே, அது ஏன்? இத்தனை டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியை மட்டுமே சந்தித்தபிறகும் வங்கதேசத்திடம் இருந்து டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்படவில்லையே. அது ஏன்?

மனிதத் தலைகளின் எண்ணிக்கை இதற்குப் பின்னணியில் உள்ள ரகசியம்.

பியூஷ் சாவ்லா பற்றி ஏற்கெனவே எழுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஆடாத அவரை அணியில் சேர்த்தார்கள். சரி அவர் உலகக் கோப்பையில் ஆடப் போகிறார் என்பதை கொஞ்சம் முன்கூட்டித் திட்டமிட்டாவது அவரை அணியில் சேர்த்திருக்கலாம். அதுவும் இல்லை. கேப்டனின் நெருக்கடியால் திடீரென, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் அணிக்கு வந்தார். பயிற்சிப் போட்டியில் மட்டும் நன்றாக ஆடிய அவர் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கிறார்களே அது ஏன்? தலயின் பிடிவாதம்தான் அதற்குப் பின்னணியில் உள்ள ரகசியம்.
..

2 கருத்துகள்:

  1. //பொதுச் சேவை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம்தான் என்பதாலும், இதை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரம் நோஐபிஎல் அதிபருக்கு இருக்கிறது என்பதாலும் நமது சேவை தொடர்கிறது.

    ஹி ஹி தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் சேவை தொடரட்டும்.
    வங்கதேசத்தின் டெஸ்ட் அந்தஸ்தை பறித்துக்கொண்டு அயர்லாந்திற்கு கொடுக்கலாம்.
    :அஷ்வின் அரங்கம்:
    ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்

    பதிலளிநீக்கு