புதன், 23 பிப்ரவரி, 2011

டிராவிட், அசார், லாரா, சச்சின்

கிரிக்கெட் ஷாட் அடிப்பதில் ஸ்டைல் மன்னர்கள் லாராவும் டிராவிட்டும். அசாருக்கும் பல ஷாட்களை ஸ்டைலாக அடிப்பார். சச்சின் எல்லா வகையான ஷாட்களையும் அனாசயமாக அடிப்பார். 

 
கவர் டிரைவ், ஆஃப் டிரைவ்: 
கவர் டிரைவ், ஆஃப் டிரைவ் ஷாட்களை ஸ்டைலாக அடிப்பதில்  டிராவிட், லாரா, ரிக்கி பான்டிங், சச்சின் ஆகியோரைக் குறிப்பிடலாம். நமது பார்வையில் இந்த ஷாட்டில் டிராவிட்டுக்குத்தான் முதலிடம்.

டிராவிட்டின் கவர் டிரைவ்
சச்சின் கவர் டிரைவ்
அசாரின் ஆஃப் டிரைவ்


கட், ஸ்கொயர் கட்,  லேட் கட்:

பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இந்த ஷாட்டை அடிப்பார்கள். ஆப் சைடுக்கு வெளிய பந்து வந்துவிட்டால், கண்டிப்பாக டிராவிட் ஸ்கொயர் கட் அடிப்பார் என்று சின்ன குழந்தைக்குக் கூடத் தெரியும். சில நேரங்களில் ஸ்டம்புக்கு மிக நெருக்கமாக பந்தை விட்டு டேஞ்சரஸ் லேட் கட் ஷாட்களையும் அடிப்பார். சௌவ்ரவ் கங்குலியும் ஸ்கொயர் கட்டுக்கு பெயர் போனவர். ஆனால் ஆஃப் சைடு பந்துகளை சச்சின், சேவாக் போன்றவர்கள் வேறுவகையான ஷாட்களையும் அடிக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்வீப்கூட செய்கிறார்கள்.
அசார் கட்

டிராவிட் ஸ்கொயர் கட்
 லெக் கிளான்ஸ்:
 லெக் கிளான்ஸ் ஷாட்களை எந்த பந்தாவுமில்லாமல் அடிப்பவர் சச்சின்தான். இந்த ஷாட்டை டிராவிட் ரொம்ப மெனக்கெட்டு அடிப்பார். அசார், ஜடேஜா, லாராவும் இதில் ஸ்டைலானவர்கள்.

  
டிராவிட் லெக் கிளான்ஸ்
லாரா லெக் கிளான்ஸ்

ஹூக், புல் ஷாட்:

நம்மூர் தோனி, சேவக் உள்பட எல்லோரும் ஹூக் ஷாட் அடித்துத்தான் ரன்களைக் குவிக்கிறார்கள். டிராவிட் மாதிரி ஆட்கள் ஹூக் அடித்து மாட்டிக் கொள்வார்கள்.
சச்சின் ஹூக்
சேவக் ஹூக்
 நிற்பதிலேயே ஸ்டைல்ஸ்:
பொதுவாக பேட்ஸ்மேன்கள் சைடு வாங்கி நிற்பதுதான் வழக்கம் நமது சந்தர்பால் மாதிரி ஆட்கள் ஓபனாக நிற்பார்கள்.




ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்ட்ரெய்ட் டிரைவ், ஆன் டிரைவ்கள் பின்னர் வரும்...

7 கருத்துகள்:

  1. காவஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோரது லெக் க்ளான்ஸ் மிக அழகாக இருக்கும்.

    கவர் ட்ரைவுக்கு டேவிட் மற்றும் கார்ல் ஹூப்ப்ர் ஷாட்களைப் பார்க்கவும்.

    மேலும், நீங்க போட்டிருக்கும் படத்தில் சேவக் அடிப்பது புல் ஷாட், ஹூக் ஷாட் இல்லை.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  2. முந்தைய பின்னூட்டத்தில்

    கவர் ட்ரைவுக்கு டேவிட் கோவர் மற்றும் கார்ல் ஹூப்பர் என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
  3. no tension on reading this man.. add some pepper pls :)

    நம்ம நாட்ல அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து sorry எழ வேண்டுமென்று நிறைய பேர் இருக்காங்க. I am also that kind ;) so தப்பை எல்லாம் எழுதுங்க..

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ஸ்ரீராம்... சேவக் அடிப்பது புல்ஷாட் அல்ல... மார்புப் பகுதிக்கு வரும் பந்தை கொஞ்சம் முன்னதாகவே சேவக் தொடுகிறார் அவ்வளவுதான்... மார்புப் பகுதிக்கு கீழே... அதுவும் வயிற்றுக்குக் கீழே அடித்தால்தான் புல்ஷாட் என்று சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரிந்த தகவல்...

    பதிலளிநீக்கு