சனி, 12 பிப்ரவரி, 2011

எஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் தோனியும்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் யாராவது, எகிப்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அது தூத்துக்குடி பக்கம், காரைக்குடி பக்கம் இருக்குது என்று தடாலடியாகச் சொல்வார். அந்த அளவுக்கு அவருக்கு பொது அறிவு ஜாஸ்தி. இவர்களுக்கு ஒருபடி மேலேபோய், இத்தாலி அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது உள்ளாடை ரகசியம் பற்றி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

இப்படி வெளிநாட்டுக்காரர்களைப் பற்றிய நகைச்சுவையைப் படித்து ரசித்த நமக்கு நமது வெளியுறவு அமைச்சரே கேலிக்கு ஆளாகியிருப்பது வருத்தமாக இருக்கிறது. நம்மூர் அமைச்சர் கிருஷ்ணா முதல் முறையாக ஐ.நா.சபைக்கு இப்போதுதான் சென்றிருக்கிறார். பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தரமாகச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அங்கு போனவர் அவர்.


பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேச, இவரது முறை வந்தது. தலைவர் எழுந்தார், பேசுவதற்கான இருக்கையில் அமர்ந்தார் உரையை வாசிக்கத் தொடங்கினார். மிகச் சரளமாக. எங்களது போர்த்துக்கீசிய மொழி பேசும் பிரசிலும் அர்ஜென்டினாவும் என்று பேசியபோது கேட்டுக்கொண்டிருந்த செயலர் ஓடிப்போய்த் தடுத்தார். பிறகுதான் தெரிந்தது, அது போர்ச்சுக்கல் வெளியுறவு அமைச்சர் பேசிய உரை என்று. அவர் சற்று முன்புதான் பேசி முடித்திருந்தார். என்ன உரை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தெரியாமல்தான் இந்திய வெளியுறவுத்துறை வழிநடத்தப்படுகிறது.


இப்படியொரு சம்பவம் இந்தியா என்கிற பெயரில் ஆடும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யும் கூட்டத்திலும் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்தேகத்துக்குக் காரணம் அணியில் பியூஷ் சாவ்லா இடம்பெற்றதுதான். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அணியிலேயே இல்லாதவர் எப்படி திடீரென, அதுவும் உலகக்கோப்பை அணிக்கு வந்தார் என்று தெரியவில்லை. ஏதோ ரஃப் பேப்பரில் யாரோ எழுதிவைத்ததை அறிவித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.


இப்படி எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரியாத ஒருவரை நம் கிரிக்கெட் ஜூனியர் கடவுள் தோனி தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த ரஃப் பேப்பரில் இவர்தான் எழுதி வைத்தாரோ என்னவோ? யாராவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.


...

..

5 கருத்துகள்:

  1. பாவங்க அவரு... இதுக்கு போய் இப்படி படுத்துரிங்க.. போதை இன்னும் குறையில்ல, அதனாலதான்.

    பதிலளிநீக்கு
  2. சரியா சொன்னீங்க!!! கிரிக்கெட்டும் அரசியல் மாதிரிதான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் பியுஷ் சாவ்லாவை பிடிக்காது. இருந்தாலும் இன்னைக்கு ஆட்டத்தை பார்த்தால் ஒன்னும் சொல்ல முடியாது போல இருக்கே

    பதிலளிநீக்கு
  4. ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டம் பாத்தீங்களா? சாவ்லா தான் நாலு விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்...

    பதிலளிநீக்கு